விவேக சிந்தனை மாலை – 012 – 17.11.2017 இந்த உலகம் நல்லதா கெட்டதா ?

விவேக சிந்தனை மாலை – 012 – 17.11.2017 இந்த உலகம் நல்லதா கெட்டதா ? இந்த உலகம் நல்லதும் இல்லை, கெட்டதும் இல்லை. ஒவ்வொரு மனிதனும் தனக்கென்று ஓர் உலகை உருவாக்கிக் கொள்கிறான். பார்வையற்றவன் உலகத்தைப் பற்றிச் சிந்திப்பானானால், அது மென்மை அல்லது கடினமானதாகவோ குளிர்ச்சி அல்லது சூடானதாகவோ இருக்கும். நாமும் மகிழ்ச்சி அல்லது வேதனையின் சேர்க்கை மட்டுமே; இதை நாம் நம் வாழ்வில் நூற்றுக்கணக்கான முறை பார்த்திருக்கிறோம். பொதுவாக இளைஞர்கள் இன்பநோக்குடனும் (Optimistic) முதியவர்கள்… Read More விவேக சிந்தனை மாலை – 012 – 17.11.2017 இந்த உலகம் நல்லதா கெட்டதா ?

விவேக சிந்தனை மாலை – 011

விவேக சிந்தனை மாலை – 011 – 23.10.2017 *கடமை என்பது என்ன ?* (சுவாமியின் பேச்சிலிருந்து சுருக்கமான சில கருத்துக்கள் – இவை என்னால் சுருக்கி எழுதப்படுகின்றன. – கணபதிசுப்ரமணியன்.) பல்வேறு வாழ்க்கை நிலைகளுக்கும், பல்வேறு வரலாற்று காலகட்டங்களுக்கும், பல்வேறு நாடுகளுக்கும் ஏற்ப கடமை என்ற கருத்து மாறுபடுகிறது. சில குறிப்பிட்ட காரியங்கள் நம் முன் நிகழும்போது இயல்பாகவோ அல்லது பழக்கத்தின் காரணமாகவோ ஒருகுறிப்பிட்ட வகையில் நடந்துகொள்ளும் ஒரு உந்துதல் நம்மிடம் தோன்றுகிறது. இத்தகைய உள்ளுந்தல்… Read More விவேக சிந்தனை மாலை – 011

விவேக சிந்தனை மாலை – 010

*விவேக சிந்தனை மாலை – 010 – 19.10.2017* *இந்துமதம்* 10 (கடைசிப் பகுதி) இந்துவிற்கு, உலகின் எல்லா மதங்களும், பலவித நிலைகளிலும், சந்தர்ப்பங்களிலும் உள்ள பல்வேறு ஆண்களும் பெண்களும் ஒரே இலக்கை நோக்கிச் செய்கின்ற பயணம்தான். சாதாரண உலகியல் மனிதனிடம் கடவுளை வெளிப்படச் செய்வதுதான் எல்லா மதங்களின் நோக்கம். அவர்கள் அனைவருக்கும் எழுச்சியை ஊட்டுபவர் ஒரே கடவுள்தான். அப்படியானால் இத்தனை மாறுபாடுகள் இருக்கக் காரணம் என்ன ? மாறுபாடுகள் எல்லாம் வெளித்தோற்றமே என்கிறான் இந்து. வெவ்வேறு… Read More விவேக சிந்தனை மாலை – 010

விவேக சிந்தனை மாலை – 009

*விவேக சிந்தனை மாலை – 009 – 18.10.2017* *இந்துமதம்* 09 எல்லையற்றது என்ற கருத்தை நீலவானத்தின் அல்லது கடலின் தோற்றத்துடன் தொடர்புபடுத்தியே பார்க்க வேண்டியுள்ளது. மன அமைப்பு நியதிகள் அவ்வாறுதான் செயல்படுகின்றன. அவ்வாறே புனிதம் என்றால் சர்ச், பள்ளிவாசல் அல்லது சிலுவை போன்ற உருவங்களுடன் அதனை இணைத்துப் பார்ப்பதுதான் இயல்பானது. இந்துக்களும் தூய்மை, உண்மை, எங்கும் நிறைந்த நிலை ஆகிய கருத்துகளை பல்வேறு உருவங்களுடனும் தோற்றங்களுடனும் தொடர்புபடுத்தி உள்ளனர். ஆனால் ஒரு வித்தியாசம். சிலர் சர்ச்சின்… Read More விவேக சிந்தனை மாலை – 009

விவேக சிந்தனை மாலை – 008

விவேக சிந்தனை மாலை – 008 – 17.10.2017 இந்துமதம் 08 ஒருமைநிலையைக் கண்டுபிடிப்பதுதான் விஞ்ஞானம். முழுமையான ஒருமைநிலை கிட்டியதும் விஞ்ஞானம் மேலே செல்லாமல் நின்றுவிடும். ஏனெனில் அது தன் குறிக்கோளை எட்டிவிட்டது. அதுபோலவே, எந்த மூலப்பொருளிலிருந்து எல்லா பொருட்களும் படைக்கப்படுகின்றனவோ, அதைக் கண்டுபிடித்த பின்னர் வேதியியல் முன்னேற முடியாது. எந்த மூலசக்தியிலிருந்து எல்லா சக்திகளும் வெளிப்படுகின்றனவோ, அதைக் கண்டறிந்ததும் இயற்பியல் நின்றுவிடும். மரணம் நிறைந்த இந்தப் பிரபஞ்சத்தில், மரணத்தைக் கடந்து நிற்கும் ஒரே உயிரைக் கண்டுபிடித்ததும்,… Read More விவேக சிந்தனை மாலை – 008

விவேக சிந்தனை மாலை – 007

விவேக சிந்தனை மாலை – 007 – 17.10.2017 இந்துமதம் 07 இந்து வார்த்தைகளிலும் கொள்கைகளிலும் வாழ விரும்பவில்லை. புலன்வசப்பட்ட சாதாரண வாழ்விற்கு அப்பாற்பட்ட வாழ்வு உண்டு என்றால், அவன் அவற்றை நேருக்குநேர் காண விரும்புகிறான். ஜடப்பொருள் அல்லாத ஆன்மா என்ற ஒன்று அவனுள் இருக்குமானால் அதனிடம் நேரே செல்ல விரும்புகிறான். கருணையே வடிவான எங்கும் நிறைந்த இறைவன் ஒருவர் இருப்பாரானால் அவரை நேரே காண விழைகிறான். அவன் அவரைக் காண வேண்டும்; அதுதான் அவனது எல்லா… Read More விவேக சிந்தனை மாலை – 007

விவேக சிந்தனை மாலை – 006

விவேக சிந்தனை மாலை – 006 – 17.10.2017 இந்துமதம் 06 அவனது இயல்புதான் என்ன ? அவன் எங்கும் நிறைந்தவன், புனிதமானவன், உருவற்றவன், எல்லாம் வல்லவன், பெருங்கருணையாளன். “அப்பனும் நீ, அன்னையும் நீ, அன்புடைய நண்பனும் நீ, ஆற்றல் அனைத்தின் தோற்றமும் நீ, எமக்கு வலிமை தந்தருள்வாய் ! புவனத்தின் சுமையைத் தாங்குபவனே, இந்த வாழ்க்கையின் சுமையைத் தாங்க எங்களுக்கு அருள் செய்வாய் !” வேத முனிவர்கள் இவ்வாறு பாடினர். அவனை எப்படி வழிபடுவது ?… Read More விவேக சிந்தனை மாலை – 006

விவேக சிந்தனை மாலை – 005

விவேக சிந்தனை மாலை – 005 – 17.10.2017 இந்துமதம் 05 இங்கு மற்றொரு கேள்வி எழுகிறது. சூறாவளியில் சிக்கி, ஒரு கணம் அலையின் நுரைநிறைந்த உச்சிக்குத் தள்ளப்பட்டு, அடுத்த கணமே, ‘ஆ’வென்று வாயைப் பிளந்து கொண்டிருக்கும் பள்ளத்தில் வீழ்த்தப்பட்டு, நல்வினை தீவினைகளின் ஆதிக்கத்தில் மேலும் கீழுமாக உருண்டு உழன்று கொண்டிருக்கும் ஒரு சிறு படகா மனிதன் ? கடுஞ்சீற்றமும். படுவேகமும் சற்றும் விட்டுக் கொடுக்காத காரணகாரியம் என்னும் நீரோட்டத்தில் அகப்பட்டு, அழிந்து போகின்ற,. சக்தியற்ற, உதவியற்ற பொருளா… Read More விவேக சிந்தனை மாலை – 005

விவேக சிந்தனை மாலை – 004

விவேக சிந்தனை மாலை – 004 – 16.10.2017 இந்துமதம் 04 இன்னொரு கருத்தும் இருக்கிறது. இவையெல்லாம் சரியென்றே வைத்துக் கொள்வோம். ஆனால் ஏன் எனக்கு முற்பிறவியைப் பற்றிய எதுவும் நினைவில் இல்லை ? இதை எளிதில் விளக்க முடியும். இப்போது நான் ஆங்கிலம் பேசிக் கொண்டிருக்கிறேன். இது என் தாய்மொழி அல்ல. உண்மையில், என் தாய்மொழிச் சொற்கள் எதுவும் என் உணர்வுத்தளத்தில் இப்போது இல்லை. ஆனால் பேசுவதற்குச் சிறிது முயன்றால் போதும், அவை விரைந்து வந்து விடும்.… Read More விவேக சிந்தனை மாலை – 004