சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை – பகுதி பதின்மூன்று

பன்னிரண்டாம் நூற்பா உரை நூற்பா :   “செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா       அம்மலம் கழீஇ அன்பரொடு மரீஇ       மால்அற நேயம் மலிந்தவர் வேடமும்        ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே”   (சிவஞான போதம்-12) உரை : இறைவன் திருவடிப் பேரின்பத்தை உடலுடன் கூடியிருக்கும்போதே பெற்றிருப்பவரைச் சீவன் முத்தர் அல்லது அணைந்தோர் என்று கூறுவது சைவ சித்தாந்த மரபு. சீவன் முத்தர் இறைவனை இடைவிடாமல் சிந்தித்துக் கொண்டே இருப்பர். அவ்வாறு இருப்பினும் அவருடைய அறிவும், இச்சையும், தொழிலும் சில … Continue reading சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை – பகுதி பதின்மூன்று

சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை – பகுதி பன்னிரண்டு

பதினொன்றாம் நூற்பா உரை நூற்பா :    “காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்       காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்       அயரா அன்பின் அரன்கழல் செலுமே”   (சிவஞான போதம்-11) உரை : துன்பமான பாசத்தில் கட்டுண்ட உயிர் அப்பாசத்தினின்று விடுபட்டு நீங்கும் பாசநீக்கம் முன்பு கூறப்பெற்றது. பாசத்தின் நீங்கி இன்பமான இறைவனை அடைதலைக் கூறுவது இப்பகுதி. இறைவன் எப்பொழுதும் உயிர்க்குயிராய் நின்று உதவி செய்து வருகின்றான். இறைவன் செய்யும் உதவி 1. காட்டும் உதவி 2. காணும் உதவி என இருவகைப்படும். … Continue reading சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை – பகுதி பன்னிரண்டு

சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை – பகுதி பதினொன்று

பத்தாம் நூற்பா உரை நூற்பா :  “அவனே தானே ஆகிய அந்நெறி       ஏகனாகி இறைபணி நிற்க,       மலம் மாயை தன்னொடு வல்வினை இன்றே”   (சிவஞான போதம்-10) உரை : பாசங்களை விட்டு நீங்கிப் பதியின் திருவடியை அடைய முயல்வதே உயிரின் நோக்கம் ஆகும். முன்பு ஏழாம் பகுதியில் சாதிக்கும் அதிகாரி உயிர் என்று கூறப் பெற்றது. எட்டாம் பகுதியில் உயிராகிய அதிகாரி செய்ய வேண்டியது உலகப்பற்று நீக்குவதாகிய சாதனம் என்பதும், பெற வேண்டியது பதிஞான அறிவு என்பதும், இறைவனே … Continue reading சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை – பகுதி பதினொன்று

சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை – பகுதி பத்து

ஒன்பதாம் நூற்பா உரை நூற்பா :  “ஊனக்கண் பாசம் உணராப் பதியை       ஞானக் கண்ணினில் சிந்தை நாடி;       உராத்துனைத் தேர்த்து எனப் பாசம் ஒருவத்        தண்நிழல் ஆம்பதி;விதி எண்ணும் அஞ்செழுத்தே”   (சிவஞான போதம்-9) உரை : உயிருக்குப் பசுஞானம், பாசஞானம் என்ற இருவகை அறிவு உண்டு. வேறு துணையில்லாமல் அறிய முடியாத குறைபாடு உடைய அறிவு பசுஞானம் எனப்படும். உயிருக்குத் துணைசெய்யும் கருவிகள், நூல்கள் முதலியவற்றால் உண்டாகும் அறிவு பாசஞானம் எனப்படும். இவ்விரண்டு அறிவினாலும் பதியாகிய இறைவனை … Continue reading சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை – பகுதி பத்து

சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை – பகுதி ஒன்பது

எட்டாம் நூற்பா உரை நூற்பா : “ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்       தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு       அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே”   (சிவஞான போதம்-8) உரை : உயிர் முன்பிறப்புக்களில் செய்த புண்ணியத்தால் இதுவரை உள்ளே நின்று உணர்த்தி வந்த இறைவன் – இப்பொழுது ஞானநெறியை அருளுவதற்காகக் குருவாக வடிவங்கொண்டு எழுந்தருளி வருகின்றான். உயிர்க்குச் சிவதீக்கை செய்து உபதேசம் செய்வான். பக்குவம் அடைந்த உயிரை நோக்கி, “அரச குமாரனாகிய நீ ஐம்பொறிகளாகிய வேடரிடத்தில் அகப்பட்டு அங்கேயே வளர்ந்து … Continue reading சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை – பகுதி ஒன்பது

சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை – பகுதி எட்டு

ஏழாம் நூற்பா உரை நூற்பா :  “யாவையும் சூனியம் சத்துஎதிர் ஆகலின்       சத்தே அறியாது, அசத்துஇலது அறியாது       இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா”   (சிவஞான போதம்-7) உரை : சத்து, அசத்து எத்தகையன என்பதை முன்பு அறிந்தோம். மாறாத, நிலையான பொருள் சத்து. மாறும் தன்மையுடைய பொருள் அசத்து. பதியாகிய இறைவன் சத்து எனப்பெறுவான். பாசங்களாகிய உலகப் பொருள்கள் அசத்து ஆகும். பதி சத்து, பாசம் அசத்து என்றால் பசுவாகிய உயிர் எத்தகையது என்ற வினா எழும். பசுவின் … Continue reading சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை – பகுதி எட்டு

சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை – பகுதி ஏழு

ஆறாம் நூற்பா உரை நூற்பா :   “உணர் உருஅசத்து எனின், உணராது இன்மையின்       இருதிறன் அல்லது சிவசத்தாம் என       இரண்டு வகையின் இசைக்குமன் உலகே”   (சிவஞான போதம்-6) உரை : தத்துவ உலகில் சத்து, அசத்து என இரு சொற்கள் அடிக்கடி வழங்கப் பெறும். இரு சொற்களுக்கும் மற்றைய தத்துவத்தார் சொல்லும் பொருள் வேறு; சைவ சித்தாந்தம் சொல்லும் பொருள் வேறு. இந்தியத் தத்துவங்கள் அனைத்தும் சத்து என்பதற்கு உள்ள பொருள் என்றே கூறுகின்றன. எவ்வித மாற்றமும் அடையாமல் … Continue reading சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை – பகுதி ஏழு

சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை – பகுதி ஆறு

ஐந்தாம் நூற்பா உரை நூற்பா : “விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்கு       அளந்தறிந்து அறியா, ஆங்கவை போலத்       தாம்தம் உணர்வின் தமி யருள்        காந்தம் கண்ட பசாசத் தவையே”   (சிவஞான போதம்-5) உரை : மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை ஐம்பொறிகள் எனப்படும். அறிகருவிகள் – ஞானேந்திரியங்கள் என்றும் வழங்கப் பெறும். மெய் உணர்வை உணரும். வாய் சுவையை உணரும். கண் காட்சியைக் காணும். செவி ஓசையை அறியும். அவ்வாறு அறிந்தாலும் அறிகின்ற தம்மை … Continue reading சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை – பகுதி ஆறு

சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை – பகுதி ஐந்து

நான்காம் நூற்பா உரை நூற்பா : “அந்தக் கரணம் அவற்றின் ஒன்று அன்று  அமைச்சு அரசு ஏய்ப்ப நின்று அஞ்சு அவத்தைத்தே”   (சிவஞானபோதம் – நூற்பா-4) உரை : உடல் வேறு உயிர் வேறு – இரண்டும் சேர்ந்தே செயல்படுகின்றன. உடல் செயல்பாட்டிற்குப் பல கருவிகள் உள்ளன. புறக் கருவிகள், அகக் கருவிகள் எனக் கருவிகள் இரு வகைப்படும். மெய், வாய், கண், மூக்கு, கை, கால் முதலியன புறக் கருவிகள் ஆகும். மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகியவை … Continue reading சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை – பகுதி ஐந்து