முனைவர் மா கி இரமணன்

முனைவர் மா கி இரமணன் அவர்கள். இவர் ஒரு அசாதாரணமான பிறவி. இவரைப் பற்றிய தகவல்கள் இணையத்தில் ஏராளம் கொட்டிக் கிடக்கின்றன. ஆன்மீகவாதிகள், தமிழ்ப் பற்றாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், மாணவ சமுதாயம், என ஆண் பெண் யாவரும் அறிந்த இவரைப் பற்றி நான் எழுதத் தேவையில்லை. இவரது சொற்பொழிவுகள் சில யூட்யூப் தளத்தில் கிடைக்கின்றன. அன்றாடம் தொலைக் காட்சிகளிலும் இவர் தினமும் பங்கேற்று தன் தமிழ்ப் பணியை, இறைப்பணியை, சமூகப் பணியை ஆற்றி வருகிறார். தினமலர் … Continue reading முனைவர் மா கி இரமணன்

ஶ்ரீ சித்சக்தி மஹிமை

ஶ்ரீ சித்சக்தி மஹிமை : "ஆனந்தி!! கொஞ்சம் ஜலம் கொண்டா!!" ஶ்ரீமத் பாஸ்கராச்சார்யாள் தன் மனைவியிடம் கூறினார். மாத்யாஹ்னிகம் முடித்து, தாந்த்ரீக ஸந்த்யையும் பூர்த்தி செய்து ஆகாரமும் செய்தாயிற்று. சிறிதே ஓய்வு எடுக்க வேண்டும்!! "ஆனந்தி!! நாமளோ இனிமே த்ரவிட தேசம் தான் வஸிக்கறதுன்னு தீர்மாணம் பண்ணியாச்சு!! நம்ம குலதேவதை சந்த்ரலம்பா ஸந்நிதியை ஶ்ரீசக்ராகாரமா புனருத்தாரணம் செய்தது போக மீதி அங்க இருக்கற சொத்துக்கள்ல எதெல்லாம் தேவையோ அதை வைச்சுண்டு, தேவையில்லாததை குடுத்துப்டறதுன்னு நினைக்கறேன்!! நீ என்ன … Continue reading ஶ்ரீ சித்சக்தி மஹிமை

யோகசிம்மபுத்ரன் சரிதை – 051 – கொஞ்ச நேரம் வேறு பேச்சு – 2 எக்கடவுளும் காசு கேட்பதில்லை

யோகசிம்மபுத்ரன் சரிதை – 051 – கொஞ்ச நேரம் வேறு பேச்சு - 2 எக்கடவுளும் காசு கேட்பதில்லை எக்கடவுளும் காசு கேட்பதில்லை பிறரில் கடவுளைக் காணும் பேறு கிட்டாதவர்களே, கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பைக் கொச்சைபடுத்துகிறார்கள். பொருள் படைத்த பலரும் தாம் பொருள் சேர்த்த விதம் பற்றியோ அல்லது பொருள் சேர்க்க எண்ணியுள்ள வழிபற்றியோ கொண்டுள்ள அச்சம் மிகுதியால்தான், தமக்கு மிகவும் பிடித்த பொருளை அளித்தால் அக்கடவுள் மிகவும் மகிழ்ந்துவிடுவார் என்றெண்ணி அளிக்கின்றனர். எம்மதமாயினும் தம்மத … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 051 – கொஞ்ச நேரம் வேறு பேச்சு – 2 எக்கடவுளும் காசு கேட்பதில்லை

யாதும் ஒன்றே யாவரும் கேளிர்

இடம்: நெல்லிக்குப்பம் காலம்: நாலரை வருட வட இந்தியப் பணியை முடித்து வந்த 10ஆம் நாள் நாள்: ஞாயிறு நேரம்: காலை என் வீட்டில் டேப்பில் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கியா ஹே ப்யார் ஜிஸெ ஹம்னே ஜிந்தகி கி தரா வோ ஆஷ்னா பி மிலெ ஹம்ஸே அஜ்னபி கி தரா காலை நீட்டித் தரையில் உட்கார்ந்து ஜக்ஜித் சிங் சித்ரா சிங் ரசித்துக் கொண்டிருந்தேன். வாசலில் கேட் சத்தம். யாரோ வருகிறார்கள். எழுந்து வெளியே … Continue reading யாதும் ஒன்றே யாவரும் கேளிர்

ஹரிதாஸ் கிரி சுவாமிகள்

‘குருஜி’ என்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் பரவசத்தோடு அழைக்கப்படுபவர் ஹரிதாஸ் கிரி சுவாமிகள். ஞானானந்த கிரி சுவாமிகளின் சீடரான இவர், நாமசங்கீர்த்தனம் புத்துணர்ச்சியும் புது வேகமும் பெற முக்கியக் காரணமாக விளங்கியவர். இந்தியா முழுவதிலும், உலக அளவிலும் இவருக்கு பக்தர்கள் உண்டு. தக்ஷிண சம்ப்ரதாய நாமசங்கீர்த்தன பஜனை முறையை நெறிப்படுத்தி இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் பிரசங்கங்கள் மற்றும் பஜனைக்கச்சேரி மூலமும் பரவலாக்கிப் புகழ் அடையச்செய்தவர் ஸ்வாமிகள். தன் வாழ்நாள் முழுவதையும்  தன் குரு ஞானானந்த கிரி ஸ்வாமிகளின் பணிக்காகவே … Continue reading ஹரிதாஸ் கிரி சுவாமிகள்

அழகிய சிங்கர்

*ஆழ்வார்களிலே நான்காமவரான திருமழிசைப் பிரான், திருமாலின் அவதாரங்களுக்குள் அழகுப் போட்டி வைத்தாராம்.* 1). *மத்ஸ்ய,* 2). *கூர்ம,* 3). *வராஹ,* 4). *நரசிம்ம,* 5). *வாமன,* 6). *பரசுராம,* 7). *ஸ்ரீராம,* 8). *பலராம,* 9). *கிருஷ்ண,* 10). *கல்கி*... அவதாரங்களை, வரவழைத்தார். முதல் சுற்றில் .. *மத்ஸ்ய, கூர்ம, வராஹ* மூன்று அவதாரங்களும் முறையே .. *மீன், ஆமை, பன்றி* ஆகிய மிருக வடிவங்களில் இருந்தமையால், அழகுப் போட்டியில் அவர்கள் பங்கேற்க இயலாது எனக் கூறி … Continue reading அழகிய சிங்கர்

அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா?

☆ஆன்மிகவாதிகளுக்கான சிறப்பு பதிவு☆ ○"கடவுளை காண விலகி போ"○ ஒரு மனிதனுக்கு கடவுளை காண வேண்டும் என்று ஆசை. அவரை எப்படி சந்திப்பது ? நிறைய பேரை கேட்டான் " கோவிலுக்கு போ !" என்றார்கள் . உடனே புறப்பட்டான் . போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான் அவர் கேட்டார் . ○எங்கே போகிறாய் ?" ●கடவுளை காண போகிறேன் !" ○எங்கே ? " ●கோவிலில் !" ○அங்கே போய் ........" ●அவரை வழிபட … Continue reading அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா?

நெஞ்சின்  நினைவலைகள்

திரு VG கிருஷ்ணன் அவர்களின் இப்பதிவைப் படிப்பதற்கு முன் என் சிறு குறிப்பு: பத்தாண்டு காலம் ஆகியும் எல்லோர் மனங்களிலும் பலர் இல்லங்களிலும் இன்னும் உலராத ஈரத் தழும்புகள். அக்கோர சம்பவத்தில் உயிர் துறந்தது இந்தியர் மட்டுமல்ல அன்று மும்பையில் இருக்க நேரிட்ட பல அயல்நாட்டவரும் கூட. தீவிர வாதம் மிகக் கடுமையாகவும் மிகக் கொடுமையாகவும் விளையாடிய நாள். இன்றுவரை தீவிரவாதத்துக்கு சரியான ஒரு மருந்தை இந்நாடும் இவ்வுலகமும் கண்டுகொள்ளவில்லை. இருப்பினும் இத்தகைய கோர விபத்துக்களில் சம்பவ … Continue reading நெஞ்சின்  நினைவலைகள்

முருகனைப் போற்றுவோம் எதிலும் வெற்றி பெறுவோம்

முருகனைப் போற்றுவோம் எதிலும் வெற்றி பெறுவோம் முருகா என்றால், இல்லறம் என்பது தாய், தந்தை, மனைவி மக்கள், தம்மை சார்ந்தோர்க்கும் பாதுகாப்பாய் இருப்பதோடு வருகின்ற விருந்தை உபசரித்தல் மற்றும் நட்பை பெருக்கிக் கொள்ளுதல், நெறிக்கு உட்பட்டு பொருள் சேர்த்தல், காலை மாலை ஒரு ஐந்து நிமிடமேனும் ஞானத்தலைவன் முருகப்பெருமான் திருவடியைப் பற்றி பூசித்தல், உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து ஜீவகாருண்யநெறி நின்று சைவத்தை மேற்கொள்ளுதல், முடிந்த அளவிற்கு பசியாற்றுவித்தல், வறியவர், சான்றோர், யோகி, ஞானிகளுக்கு உற்ற பாதுகாவலனாக … Continue reading முருகனைப் போற்றுவோம் எதிலும் வெற்றி பெறுவோம்