சுவாமி விவேகானந்தரின் பத்து கட்டளைகள்

  மிதமிஞ்சிய துன்பங்கள் ஏற்பட்டாலும் நிம்மதியிழக்காமல் வாழ… சுவாமி விவேகானந்தரின் பத்து கட்டளைகள்: 1. தாராளமாய்க் கொடுக்கவும். 2. அக நிறைவிற்காக வேலை செய்யவும். 3. நற்பண்புகளுக்காக வேலை செய்யவும். 4. செல்வத்திற்காக மட்டுமல்லாமல் உயரிய சிந்தனைகளுக்காகவும் வேலை செய்யவும். 5. வேலையை அதன் மகிழ்ச்சிக்காக செய்யவும். 6. அச்சத்தை மேற்கொள்ள வேலை செய்யவும். 7. எதிர்மறை குணங்களைத் தவிர்க்க வேலை செய்யவும். 8. ஒருமைக்காக வேலை செய்யவும். 9. சத்தியத்திற்காக வேலை செய்யவும். 10. சுதந்திரத்திற்காக … Continue reading சுவாமி விவேகானந்தரின் பத்து கட்டளைகள்

முனைவர் மா கி இரமணன்

முனைவர் மா கி இரமணன் அவர்கள். இவர் ஒரு அசாதாரணமான பிறவி. இவரைப் பற்றிய தகவல்கள் இணையத்தில் ஏராளம் கொட்டிக் கிடக்கின்றன. ஆன்மீகவாதிகள், தமிழ்ப் பற்றாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், மாணவ சமுதாயம், என ஆண் பெண் யாவரும் அறிந்த இவரைப் பற்றி நான் எழுதத் தேவையில்லை. இவரது சொற்பொழிவுகள் சில யூட்யூப் தளத்தில் கிடைக்கின்றன. அன்றாடம் தொலைக் காட்சிகளிலும் இவர் தினமும் பங்கேற்று தன் தமிழ்ப் பணியை, இறைப்பணியை, சமூகப் பணியை ஆற்றி வருகிறார். தினமலர் … Continue reading முனைவர் மா கி இரமணன்

ஶ்ரீ சித்சக்தி மஹிமை

ஶ்ரீ சித்சக்தி மஹிமை : "ஆனந்தி!! கொஞ்சம் ஜலம் கொண்டா!!" ஶ்ரீமத் பாஸ்கராச்சார்யாள் தன் மனைவியிடம் கூறினார். மாத்யாஹ்னிகம் முடித்து, தாந்த்ரீக ஸந்த்யையும் பூர்த்தி செய்து ஆகாரமும் செய்தாயிற்று. சிறிதே ஓய்வு எடுக்க வேண்டும்!! "ஆனந்தி!! நாமளோ இனிமே த்ரவிட தேசம் தான் வஸிக்கறதுன்னு தீர்மாணம் பண்ணியாச்சு!! நம்ம குலதேவதை சந்த்ரலம்பா ஸந்நிதியை ஶ்ரீசக்ராகாரமா புனருத்தாரணம் செய்தது போக மீதி அங்க இருக்கற சொத்துக்கள்ல எதெல்லாம் தேவையோ அதை வைச்சுண்டு, தேவையில்லாததை குடுத்துப்டறதுன்னு நினைக்கறேன்!! நீ என்ன … Continue reading ஶ்ரீ சித்சக்தி மஹிமை

யோகசிம்மபுத்ரன் சரிதை – 051 – கொஞ்ச நேரம் வேறு பேச்சு – 2 எக்கடவுளும் காசு கேட்பதில்லை

யோகசிம்மபுத்ரன் சரிதை – 051 – கொஞ்ச நேரம் வேறு பேச்சு - 2 எக்கடவுளும் காசு கேட்பதில்லை எக்கடவுளும் காசு கேட்பதில்லை பிறரில் கடவுளைக் காணும் பேறு கிட்டாதவர்களே, கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பைக் கொச்சைபடுத்துகிறார்கள். பொருள் படைத்த பலரும் தாம் பொருள் சேர்த்த விதம் பற்றியோ அல்லது பொருள் சேர்க்க எண்ணியுள்ள வழிபற்றியோ கொண்டுள்ள அச்சம் மிகுதியால்தான், தமக்கு மிகவும் பிடித்த பொருளை அளித்தால் அக்கடவுள் மிகவும் மகிழ்ந்துவிடுவார் என்றெண்ணி அளிக்கின்றனர். எம்மதமாயினும் தம்மத … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 051 – கொஞ்ச நேரம் வேறு பேச்சு – 2 எக்கடவுளும் காசு கேட்பதில்லை

யாதும் ஒன்றே யாவரும் கேளிர்

இடம்: நெல்லிக்குப்பம் காலம்: நாலரை வருட வட இந்தியப் பணியை முடித்து வந்த 10ஆம் நாள் நாள்: ஞாயிறு நேரம்: காலை என் வீட்டில் டேப்பில் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கியா ஹே ப்யார் ஜிஸெ ஹம்னே ஜிந்தகி கி தரா வோ ஆஷ்னா பி மிலெ ஹம்ஸே அஜ்னபி கி தரா காலை நீட்டித் தரையில் உட்கார்ந்து ஜக்ஜித் சிங் சித்ரா சிங் ரசித்துக் கொண்டிருந்தேன். வாசலில் கேட் சத்தம். யாரோ வருகிறார்கள். எழுந்து வெளியே … Continue reading யாதும் ஒன்றே யாவரும் கேளிர்

வாழ்க்கை

வாழ்க்கை என்பது போர்கள், தவறுகள், திருத்தங்கள் இவற்றின் ஒரு தொடர்.  …வாழ்க்கையின் ரகசியம் பலவகை அனுபவங்களிலிருந்து அறிவு பெறுவதே; போகமல்ல. ஆனால் அந்தோ ! உண்மையான அறிவு கிடைக்கத் தொடங்கும் போது நமக்கு மறு உலகிலிருந்து அழைப்பு வந்துவிடுகிறது. … நாம் செய்கின்ற பணிகளின்மீது ஒரு புயற்காற்று அடிப்பது நல்லது, அதனால் சூழ்நிலை தூயதாகிறது; நமக்கும் பொருட்கள் அனைத்தின் உண்மை தெரிய ஆரம்பிக்கிறது. உலகில் சிலர் இருக்கிறார்கள் --– ஏன், நிறையவே இருக்கிறார்கள் --- அவர்கள் தங்களுக்கு … Continue reading வாழ்க்கை

ஹரிதாஸ் கிரி சுவாமிகள்

‘குருஜி’ என்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் பரவசத்தோடு அழைக்கப்படுபவர் ஹரிதாஸ் கிரி சுவாமிகள். ஞானானந்த கிரி சுவாமிகளின் சீடரான இவர், நாமசங்கீர்த்தனம் புத்துணர்ச்சியும் புது வேகமும் பெற முக்கியக் காரணமாக விளங்கியவர். இந்தியா முழுவதிலும், உலக அளவிலும் இவருக்கு பக்தர்கள் உண்டு. தக்ஷிண சம்ப்ரதாய நாமசங்கீர்த்தன பஜனை முறையை நெறிப்படுத்தி இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் பிரசங்கங்கள் மற்றும் பஜனைக்கச்சேரி மூலமும் பரவலாக்கிப் புகழ் அடையச்செய்தவர் ஸ்வாமிகள். தன் வாழ்நாள் முழுவதையும்  தன் குரு ஞானானந்த கிரி ஸ்வாமிகளின் பணிக்காகவே … Continue reading ஹரிதாஸ் கிரி சுவாமிகள்

சைவ சித்தாந்தம் – 4 (முடிவுப்பகுதி)

சைவ சித்தாந்தம் – 4 (முடிவுப்பகுதி) சுவாமி அவிநாசானந்தர் (ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை 1998 வெளியீடான “தேவார, திருவாசகத் திரட்டு – பதவுரை, பொழிப்புரையுடன்” நூலின் அறிமுகக் கட்டுரையின் முழுப்படிவம்) (தொடச்சி) தனு கரண புவனங்களைப் படைத்தளிக்கப்பெறும் ஆன்மாக்கள் சனன மரணங்கட்கு உட்படும்போது, அவர்களைச் சிவபெருமான் சிறிது சிறிதாகப் பக்குவப்படுத்தி உயர்த்தியருளுகிறான். அவர்கட்கு அகங்கார மமகாரங்கள் குறைந்து வரும்பொருட்டு முதன்முதலாக அவர்களது இன்ப துன்பங்களைப் பெருக்கி, அவ்விரண்டினுள்ளும் மாறி மாறி உழலும்படிச் செய்கிறான். இதனால் ஆன்மாக்கள் நாளடைவில் … Continue reading சைவ சித்தாந்தம் – 4 (முடிவுப்பகுதி)

சைவ சித்தாந்தம் – 3

சைவ சித்தாந்தம் - 3 சுவாமி அவிநாசானந்தர் (ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை 1998 வெளியீடான “தேவார, திருவாசகத் திரட்டு – பதவுரை, பொழிப்புரையுடன்” நூலின் அறிமுகக் கட்டுரையின் முழுப்படிவம்) (தொடச்சி) பெறுதற்கரிய இப்பேற்றைப் பக்தி நெறியால் அடையலாகும். சிவபெருமான் ஆன்மாவோடு கலந்திருத்தல் அவனருளாலன்றி வேறில்லை. ஆகவே அவனது அருளை வியந்து அதனையே நாடி இயன்றவாறு அவனுக்கென்றே தொண்டு வகைகளை அன்போடும் வைராக்கியத்தோடும் அயராது செய்வதே பக்தி நெறி எனப்படும். அகங்காரம் போனாலன்றிச் சிவன்பால் அன்பு உண்டாகாது. அது … Continue reading சைவ சித்தாந்தம் – 3