ஹரிதாஸ் கிரி சுவாமிகள்

Haridhos Giri Swami

‘குருஜி’ என்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் பரவசத்தோடு அழைக்கப்படுபவர் ஹரிதாஸ் கிரி சுவாமிகள். ஞானானந்த கிரி சுவாமிகளின் சீடரான இவர், நாமசங்கீர்த்தனம் புத்துணர்ச்சியும் புது வேகமும் பெற முக்கியக் காரணமாக விளங்கியவர். இந்தியா முழுவதிலும், உலக அளவிலும் இவருக்கு பக்தர்கள் உண்டு.

தக்ஷிண சம்ப்ரதாய நாமசங்கீர்த்தன பஜனை முறையை நெறிப்படுத்தி இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் பிரசங்கங்கள் மற்றும் பஜனைக்கச்சேரி மூலமும் பரவலாக்கிப் புகழ் அடையச்செய்தவர் ஸ்வாமிகள்.

தன் வாழ்நாள் முழுவதையும்  தன் குரு ஞானானந்த கிரி ஸ்வாமிகளின் பணிக்காகவே அர்ப்பணித்த ஸ்வாமிகள் தான் பிறந்த தென்னாங்கூரில் பாண்டுரங்கன் ஆலயத்தையும் தன் குருஸ்வாமிகளுக்கான ஆலயத்தையும் நிர்மாணித்தவர்.

தன் குருவின் உத்தரவுப்படியே இவர் சிங்கப்பூர், மலேசியா, மஸ்கட், அபுதாபி நாடுகளில் பிரசங்கமும் பஜனை நிகழ்ச்சிகளும் நடத்தி அங்கு வாழும் தமிழரிடம் உண்மையான சுயநலமில்லாத பக்திக்கும் நெறிமுறையான வாழ்க்கைக்கும் அடிகோலியவர்.

ஹரிதாஸ் கிரி சுவாமியுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்ற பக்தர்களில் பிரதானமானவரான நூலாசிரியர் ஆர்.கிருஷ்ணசாமி அவர்கள்  ஸ்வாமிஜியைப்பற்றி விகடன் பிரசுரத்தில் “எப்போ வருவாரோஎன்ற பக்தித் ததும்பும் நூலை எழுதியுள்ளார்.

எனது நண்பர் திரு ஞானசேகர் அவர்கள் மஸ்கட்டில் வசிக்கும் காலத்தில் 1992ஆம் ஆண்டில் ஸ்வாமிகளின் தொடர் பஜனை நிகழ்ச்சி என் நண்பர் மற்றும் அவர் நடத்திவந்த ஆன்மிக அமைப்பு உறுப்பினர்கள் செய்த ஏற்பாட்டின் படி 84 பகுதிகளாக நடைபெற்றது. மிகவும் ஆர்வமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்வாமிகளின் பஜனைத்தொடர், ஓமன் சுல்தானேட்டில் 150 வருடங்களுக்கும் மேலாக திறமையுடன் நடத்தப்பெறும் கிம்ஜி ராம்தாஸ் தொழில் நிறுவனங்களின் குழுமத்தின் தலைவர் கனக்பாய் கிம்ஜி அவர்களால் தொடங்கப்பட்டு மிகச் சிறப்பாக நடந்த பாரத தேசத்தின் தென்னாட்டின் சம்ப்ரதாய பஜனை நிகழ்ச்சி பல ஆண்டுகளாய் மஸ்கட் வாழ் தமிழர்கள் நினைவுகூறும் மகத்தான நிகழ்ச்சியாகும்.

அப்போது செய்யப்பட்ட ஒலி-ஒளிப்பதிவுகள் (VIDEOS) என் நண்பரால் யூட்யூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இப்போதும் 84 பதிவுகளாக பலராலும் காணப்பட்டு ரசிக்கப்பட்டு வருகின்றன. உதாரணத்துக்கு அந்தத் தொடரின் 5/84ஆம் பதிவைக் கீழ்க்கண்ட இணைப்பின் வழி காணலாம்.

https://youtu.be/WzXOSo_y-m8

இத்தளத்தில் உள்ள எல்லா ஆன்மீகப் பதிவுகளையும் காண அவரது யூட்யூப் தளத்தை subscribe செய்யவும்.

நன்றி: உயர்திரு ஞானசேகர் அவர்களுக்கு

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.