யோகசிம்மபுத்ரன் சரிதை – 097 – தரங்கம்பாடி 12 “அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 11

Lord Muruga for NGS blog article 11092019

அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 11

தொடர்ச்சி:

“உண்மையில் மதம், கல்வி, பட்டறிவு, சிந்தனை ஞானம், அழகு, செல்வம், இவை ஆன்மீகப் பயணத்திற்கு தடைக்கற்கள். இவற்றைத் தாண்டிச் செல்ல வேண்டிய ஆன்மிகப் பயணத்தில் மிகச்சிலரைத் தவிர எல்லோரும் தடைக்கற்களையே பொக்கிஷமாகக் கருதி, அவற்றின் இன்பத்தைத் துய்த்து அந்த இன்பமே உலகென்று உழல்கின்றனர்.

“உள்ளத்தால் மட்டுமே இறைசக்தியை அணுகவேண்டும். உள்ளத்தில் மட்டுமே அன்புக்கு இடம் உண்டு. அன்பு இருந்தால்தான் அங்கே இறைசக்தியை உணரமுடியும். எனவே அன்புக்கு முதல் மரியாதை கொடு. அன்பே சிவன் என்பதை உணர். இறைவன் தாயும் தந்தையும் ஆவான் என்பதை முழுமையாக நம்பு. இந்த நம்பிக்கையுடன் நீ இருந்தால், நீ உன் கிறிஸ்தவ நண்பர்கள் போலவே என்னிடம் பேசலாம். எந்த கட்டுப்பாடுகளும் தேவையில்லை என்பதை நன்கு உணர். அவர்களைப் போலவே நீயும் பேசு, நான் கேட்பேன். இன்னும் சிலநாட்களுக்கு நான் உன்னுடன் இருக்கிறேன், நீ உணரும்வகையில். உன்னருகே எப்போதும் இருக்கும் என்னிடம் நீ எதுவும் கேட்கலாம். ஆனால் கேட்பதும் கேட்காததும் உன் விருப்பம். என் ஆசிகள்.” என்று சொல்லி முருகன் முடித்துவிட்டார். பின்னர் என்னிடம், “ என் பக்தன் இப்போது பழனியில் தங்கரதம் எடுக்க வந்துள்ளான். உனக்கு இன்னமும் சிறிது நாத்திகம் மனத்தில் உள்ளதால் நீ விரும்பினால் நீ உன் அலுவலகங்கள் மூலம் இதை உண்மைதானா என்று சோதித்துக்கொள். என் பக்தன் பெயர் ……. அவன் ஊர்…….” என்று கூறி பேச்சை நிறுத்திவிட்டார்.

நான் “சுவாமி” என்றதும் சாமி ‘முருகன் போயிட்டான் சார். என்ன சார் ரொம்ப நேரம் பேசினீங்களோ, என்ன சொன்னான் சார் என் முருகன்” என்று தன் சுய குரலில் கேட்டார். அதற்குள் கணேசனும் வந்துவிட்டார். இருவருக்கும் நான் கேட்டது, முருகன் சொன்னது எல்லாவற்றையும் சுருக்கமாகச் சொன்னேன். சாமி அசந்து போய்விட்டார். “முருகன் இவ்வளவு நேரம்  யாரிடமும் பேசியதேயில்லை. இவ்வளவு விவரங்களையும் சொன்னது இல்லை. நான் இங்கே வந்துபோகும் எல்லோர்ட்டயுமே முருகன் என்ன சொன்னான்னு கேட்பேன். எல்லோருமே தனக்கு, தன் குடும்பத்திற்கு, தன் தொழிலுக்குன்னு சுயநலமான வேண்டுதல்தான் வைப்பாங்க. ஆனாலும் எல்லோருமே தாம் கேட்பதை சொன்ன பதிலை முழுமையாக என்னிடம் சொல்லமாட்டாங்க. சிலர்ட்ட முருகன் கோபம் கொண்டு பேசுவான். உங்ககிட்ட மட்டும் இவ்வாறு வாஞ்சையோடு பேசியிருக்கான். மறுபடி வாங்க சார்” என்று சொல்லி விபூதி கொடுத்தார். நெற்றியில் பூசிக் கொண்டேன்.

நான் அவரிடம் “எப்போ மறுபடி வருவேன்னு தெரியல சார். முருகன் சிலநாள் என்னோடவே இருக்கேன்னு சொல்லி இருக்கான். என்னாலே அதைத் தாங்க முடியுமான்னு தெரியல்லே, பயமா இருக்கு,” என்றேன். சாமி சிறிதுநேரம் கண்ணை மூடி இருந்துவிட்டு, மறுபடி விபூதியைக் கையில் எடுத்து என் நெற்றியில் அவரே பூசிவிட்டு, “முருகன் சொல்றான் இவனுக்கு நான் ஒண்ணும் டெஸ்ட் வைக்கல்ல, பயப்படவேணாம்னு சொல்லுண்ணு சொல்றான் சார். நீங்க ஒண்ணும் பயப்படாதீங்க. எல்லாம் நல்லதுக்குத்தான்.” என்றார்.

“நாங்க வர்ரோம் அண்ணே” என்று கூறிய கணேசன் என்ன சார் இவ்வளவு நேரம் செஞ்சிட்டீங்க, வாங்க சார் நெறய வேலயிருக்கு, போலாம்சார்” என்று சொல்லியபடி வண்டியில் அமர்ந்தார். நள்ளிரவில் வீடு வந்து சேர்ந்தேன்.

 

தொடரும்….

 

(இது என் வாழ்வில் 1995-97இல் நடந்த உண்மை நிகழ்ச்சி)

Posted under இறைசக்தியும் நம் சக்தியும் on 03102019 at 1105AM

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.