“அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 8

Lord Muruga for NGS blog article 11092019

அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 8

தொடச்சி:

“காலையில் நான்கு மணிக்கு வந்த குருக்கள் இவரை அழைத்துச் சென்று முருகன் சன்னிதிக்கு அருகில் உள்ள ஒரு ரகசிய படிக்கட்டின்மூலம் இறக்கி கீழே கூட்டிச் சென்றார். அங்கேயும் ஒரு முருகன் சிலை இருந்தது. அச்சிலைக்கு நிறைய வியர்த்திருந்தது. “பெரியவரே, சிறிது நேரம் கண்களை மூடிக்கொள்ளுங்கள்” என்று கூறிய குருக்கள் அச்சிலை அருகில் சென்றார். இவர் தன் கண்களை கைகளை வைத்து மூடிக்கொண்டாலும், விரலிடுக்கின்வழியே பார்த்தார். அந்தக் குருக்கள் அந்த முருகன் சிலையின் மீது இருந்த வியர்வைத்துளிகளில் ஊறியிருந்த சந்தனத்தை சிறிது வழித்தெடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டார். முருகனுக்கு இடையில் அணிவித்திருந்த துணியை உருவி வியர்வையினால் ஈரமாக ஆகிவிட்ட அத்துணியைப் பிழிந்து அதையும் அக்கிண்ணத்தில் ஊற்றினார். பிறகு பெரியவரிடம் கண்ணைத் திறக்கச் சொல்லிவிட்டு, கிண்ணத்தில் உள்ளதைக் கொடுத்து அருந்துமாறு கூறினார். பெரியவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. “இச்சிலை தாங்கள் தினமும் பூசை செய்யும் சிலையில்லையே ? இது மருந்து கலந்த சிலை என்பதால் நான் அருந்துகிறேன்” என்று கூறி அருந்திவிட்டார்.

“அன்று மதியம் அவ்வதிகாரி வந்து இவரை அழைத்துப் போய் தஞ்சைக்குப் பத்திரமாய்க் கொண்டுபோய் வீடுவரை வந்து அவரிடம் விடைபெற்றுச் சென்றார்.”

“அவரது நோய் சிறிது நாட்களில் சரியாகி விட்டது.” இவ்வாறு கூறிய என் தந்தை அப்பெரியவர் அதற்குப்பின் எழெட்டு ஆண்டுகள் ஆரோக்கியமாய் வாழ்ந்தார் என்றும் கூறியுள்ளார். இத்தகவல் உண்மையா?

“மேலும் இன்னொரு சந்தேகம் உள்ளது. ஆவியுலகத்தைப் பற்றிப் பல ஆண்டுகளாய் ஆராய்ச்சி செய்துவரும் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் தான் எழுதிய புத்தகம் ஒன்றில் பழனிமலை குறித்து ஒருவர் சொன்னதாய் ஒரு விஷயம் எழுதியுள்ளார்.

“சித்தர் ஒருவருடன் சீடனாய் இருந்த ஒரு மனிதர் ஏதோ காரணத்தால் சித்தரை விட்டு நீங்கிவிட்டார். பின்னர் பலவருடம் கழித்து அவர் கண்ட வேறொரு சித்தருடன் தொடர்பு ஏற்பட்டது. அச்சித்தர் இவரிடம் பழனிமலையிலும் வேறு கொல்லிமலையில் ஓரிடத்திலும் இன்றும் சித்தர்கள் மனிதர்களுக்குத் தெரியாமல் பூஜை செய்கிறார்கள் என்றும் சமயம் கிடைக்கும்போது கான்பிப்பதாகவும் கூறியுள்ளார்.

“பின்னர் ஓரிரு மாதம் கழித்து இவர் மலைப்பகுதியில் மலையருகில் நடந்து சென்றபோது ஓரிடத்தில் அமர்ந்துகொள்ள வசதியாக இருந்த மலையில் உள்ள ஒரு குடைந்த பகுதியில் அமர்ந்துள்ளார். சிறிதுநேரம் தியானம் செய்த அவருக்குத் திடீரென்று தான் இழுக்கப்படுவது போல தோன்றியதும் விழித்துவிட்டார். தான் அமர்ந்த இடத்தில் இருந்த ஒரு சிறிய துவாரம் வழியே தன் உடல் மிகவும் கஷ்டப்பட்டு காற்றால் இழுத்துச் செல்லப்பட்டு உள்ளே தள்ளப்பட்டார்.

“சிறிதுநேரம் கழித்து சுதாரித்துப் பார்த்தால் அவர் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து கீழே பார்த்தால், விளக்குகளின் வெளிச்சத்தில், ஒரு சிவலிங்கத்தைச் சுற்றி பல சித்தர்கள் அமர்ந்து நறுமணப்பொருட்கள் மலர்கள் என்று வைத்து பூஜை செய்வதைக் கண்டார். தீபங்கள் எரிந்து கொண்டு இருந்தன. ஊதுவத்திகளின் புகையும் எழும்பிக் கொண்டிருந்தது. அப்புகை எங்கு செல்கிறது என்று பார்த்தார். ஆழமான குகை போன்ற அப்பகுதியின் உச்சியில் மிக உயரத்தில் சூரிய ஒளி தெரியும் ஒரு சிறிய துவாரம் இருந்ததைப் பார்த்தார். அத்துவாரம் வழியேதான் சித்தர்கள் உள்ளே வருகிறார்கள் என்பதையும், உள்ளே பூஜைசெய்துகொண்டிருந்த சில சித்தர்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றில் இருவர் நமக்குத் தெரிந்த வகையில் இந்துமதத்தைச் சேராத சித்தர்கள் எனவும் அவ்விருவரில் ஒருவர் யாக்கோபு சித்தர் என்றும், பார்த்து அவரது உடைகளைக் கொண்டு இதை உணரலாம் என்றும் ஏதோ ஒரு குரல் இவர் சொல்லியதாம்.

“பின்னர் இவர் சிறிதுநேரம் கழித்து ஏதோ உந்துவிசையால் தள்ளப்பட்டதைப் போல உணர்ந்து திடீரென்று மலைக்கு வெளியில் வந்து விழுந்தார்.” இவ்வாறு அச்சீடர் கூறியதைக் கேட்ட நிகழ்ச்சியை தன் புத்தகத்தில் எழுதி இருக்கிறார், இதுவும் உண்மையா ?” என்று நான் கேள்விகேட்டு நிறுத்தினேன்.

 

தொடரும்….

 

(இது என் வாழ்வில் 1995-97இல் நடந்த உண்மை நிகழ்ச்சி)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.