யோகசிம்மபுத்ரன் சரிதை – 091 – தரங்கம்பாடி 6 “அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 5

Lord Muruga for NGS blog article 11092019

அவர்களைப் போலவே நீயும் பேசு; நான் கேட்பேன்” – 5

தொடர்ச்சி:

உள்ளே சென்றேன். கணேசன் சாமியிடம் “சார் இன்னிக்கு சீக்கிரம் வந்துட்டாரண்ணே. கொஞ்ச நேரம் இருந்து போகலாம்ல, இல்ல வேற யாரும் வர்ராங்களா” என்று கேட்டார்.

சாமி, “சார் எத்தனை நேரம் இருக்கணும்னு நெனைக்கிறாரோ இருக்கட்டுமே. வேற யாரும் வர்ரதா சொல்லல்ல. ஆனா கணேசா இங்க எல்லாரும் சொல்லிட்டுதான் வராங்களா என்ன?. யாரு வந்தாலும் பரவாயில்ல. சாருக்கு சொல்லி முடிச்சபிறகுதான் அவங்க யாரா இருந்தாலும் பாப்பேன். ஒக்காருங்க சார்.” என்றார்.

“சார், வீட்ல முருகனைக் கும்பிடறதா சொன்னீங்களே. நீங்களும் சொல்வீங்களா? என்ன மந்திரம் சொல்வீங்க?”

“கந்தசஷ்டிக் கவசம், கந்தர் அனுபூதி, படிப்பேன். கந்தர் அலங்காரம் சில செய்யுள்கள் தெரியும். ஓம் சரவணபவ மந்திரம் சொல்வேன். ஆறிருதடந்தோள் வாழ்க…, விழிக்குத்துணை திருமென்மலர்ப்பாதங்கள்…, நாள் என்செயும் வினைதான் என்செயும்… இந்த செய்யுள் எல்லாம் அடிக்கடி சொல்வேன் சாமி”

“ஓம் சரவணபவாய நமஹ” பன்னிரண்டுதடவையும் “ஓம் பழனிமலையானே நமஹ” தினமும் பன்னிரண்டு தடவையும் தவறாம சொல்லுங்க. கூடவே எம் முருகன் இருந்து காபந்து செய்வான். இந்த எடத்துல பழனிமுருகன்தான் வர்ரான்” என்றார் சாமி.

நான் “ஓம் பழனிமலையானே” பலமுறை மனதிலும் பன்னிரண்டு முறை வாய்விட்டும் உச்சரித்தேன்.

திடீரென்று ஒரு சுகந்த வாசனை வீசியது. நான் கணேசனைப் பார்த்தேன். அவர் என்னிடம் பேச வேண்டாம் என சைகை காட்டினார். நான் சாமி அருகில் இருந்த தட்டில் உள்ள விபூதியை எடுத்து முகர்ந்து பார்த்தேன். நிச்சயம் அந்த மணம் விபூதியில் இருந்து வரவில்லை. வீட்டின் உட்புறமும் எட்டிப் பார்த்தேன். எங்கேயும் ஊதுபத்திகூட கொளுத்தி வைத்திருப்பதாகத் தெரியவில்லை. கொஞ்சம் பயம் வந்தது. ‘முருகா, முருகா என்று சொல்லிக் கொண்டே சிறிது விபூதி எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டேன்.”

சாமியிடம் இருந்து சிறிது புன்னகை வந்தது. முகத்தைப் பார்த்தேன். கண் மூடியபடி இருந்தது. எப்போது கண்ணை  மூடிக்கொண்டார் என்பதை நான் கவனிக்கவில்லை. எனக்குள்ள அச்சத்தில் நான் இவ்வளவு நேரம் அவர் முகத்தைப் பார்க்கவேயில்லை என்பதை உணர்ந்தேன்.

“அஞ்சாதே. எதற்கு அஞ்சுகிறாய் ? நீ என்னிடத்தில் வந்தபிறகு நீ அஞ்சத்தேவையில்லை.” கண் மூடியபடியே இருந்தது. சுகந்த வாசனை சிறிது அதிகமானதைப்போல் இருந்தது.

எனக்கு வாய் உலர்ந்துவிட்டது. மனத்தில் ஏன் இங்கு வந்தோம் என்று தோன்றியது. உண்மையில் இங்கு முருகன் வருவானா இவ்வாறு பேசுவானா என்று தோன்றியது.

மனதில் நடுக்கத்துடன் நான் மிகவும் சிரமப்பட்டு வாயைத் திறந்து, “முருகா, முருகா, நான் தினமும் வணங்கும் முருகனா இங்கு பேசக்கேட்கிறேன் ? என்னை மன்னிக்க வேண்டுகிறேன். நான் கடவுள் எல்லா ஜீவராசிகளின் தந்தையும் தாயும் என்று உணர்ந்துள்ளேன். தாயாக உண்மையில் இறைவன் இருந்தால், இந்த இடத்தில் பேசுவது என் முருகனாய் இருந்தால் என் அதிகப்பிரசங்கித் தனத்துக்காக என்னை மன்னிக்கவேண்டும். கடவுள் என்னிடம் கோபித்துக் கொண்டுவிட்டால் எனக்கு வேறு யார் கதி?” என்றேன்.

கண்ணை மூடியிருந்த சாமியிடமிருந்து வந்தது நான் கேட்டுக்கொண்டிருப்பது சாமியின் குரல் மாதிரி இல்லை. நல்ல பலமான அன்பான குரல். பேசிய தமிழ் நல்ல தமிழ்.

“அஞ்சாதே நான் உன்னை கோபித்துக் கொள்ளமாட்டேன். நீ நினைத்ததை, கேட்க நினைப்பதை அஞ்சாமல் கேள். உரிய பதில் அளிப்பேன்.”

நம்ப முடிகிறதா ? என்னாலும்தான் நம்ப முடியவில்லை. இருந்தாலும் யார் பேசினாலும், அது முருகனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் எனக்கு கேள்விகேட்க அனுமதி கிடைத்துவிட்டதால் எல்லாவற்றையும் அஞ்சாமல் கேட்டுவிடலாம். அப்படிக் கேட்டுவிட்டால் அதற்கு வரும் பதிலைப் பொறுத்து நாம் இங்கே வந்தது சரிதானா இல்லை வந்திருக்கக் கூடாதா என்பதையும் தீர்மானித்துவிடலாம் என்று முடிவுக்கு வந்து கேள்விகள் கேட்டுத்தான் விடுவது என்ற துணிச்சல் வந்துவிட்டது.

 

தொடரும்….

 

(இது என் வாழ்வில் 1995-97இல் நடந்த உண்மை நிகழ்ச்சி)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.