சைவ சித்தாந்தம் – 1

சைவ சித்தாந்தம் – 1

சுவாமி அவிநாசானந்தர்

(ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை 1998 வெளியீடான “தேவார, திருவாசகத் திரட்டு – பதவுரை, பொழிப்புரையுடன்” நூலின் அறிமுகக் கட்டுரையின் முழுப்படிவம்)

மாணிக்கவாசகப் பெருமான் சிவபெருமானைப் பற்றிக் கூறும்போது, ‘பதமும் வீடும் படைப்போன் காண்க’ என்றருளினார். ஆன்மாக்களுக்குப் பந்த நிலையையும் முத்தி நிலையையும் உண்டுபண்ணுபவன் சிவனே என்பது அதன் கருத்து.

அறிவும் செயலும் இயல்பாகவே அமைந்த ஆன்மாக்கள் அநாதியான கேவல நிலையில் மும்மல சம்பந்தத்தால் அறிவும் மாண்டு செயலும் மாண்டு கிடந்தன. (மும்மலங்களாவன: ஆணவம், கன்மம், மாயை  என்பன.)

அப்போது ஆன்மாக்களை எடுத்து வெளிப்படுத்தி, அவைகளின் இயல்பைப் பிரகாசிக்கும்படிச்செய்ய செய்வபெருமானே முன்வந்தனர். மாயா மலத்தை உடலாகவும் கரணங்களாகவும், உலகங்களாகவும் காரியப்படுத்தி, ஆன்மாக்களை அவற்றுட் புகுத்தினார். கன்ம மலத்தை நல்வினை தீவினைகளாகவும் புண்ணிய பாவங்களாகவும் சுக துக்கங்களாகவும் காரியப்படுத்தி ஆன்மாக்களை முற்கூறியவற்றை அனுபவிக்கும்படிச் செய்தார்.

கன்ம பலன்களை முனைந்து நின்று தளராது அனுபவித்தற்காக, ஆணவ மலத்தைத் தற்போத வழியில் உலவச் செய்தார்;  அதாவது ‘நான்’ என்ற எண்ணம் எழும்பச் செய்தார். இவ்வாறு நிற்கும் நிலை ஆன்மாக்களின் (கட்டுப்பட்ட) பந்த நிலையாகும். இந்நிலையில் வரவர ஆன்மாக்களின் ஆணவ மலத்தைத் தளரச் செய்து, நாளடைவில் மும்மல பந்தங்களையும் போக்கிச் சிவமேயாய் நின்றிடச் செய்வானும் சிவனேயாவான். இந்நிலை முத்திநிலை எனப்படும்.

ஆக, ஆன்மாக்கள் பந்த நிலையிலிருந்து முத்தி நிலைக்கு ஏறுவது சிவனது அருட்செயலேயாகும்; தமது செயலாலன்று. இதன் காரணமாவது, ஆன்மாக்கள் தம் இயல்பினாலே சுதந்திரமற்றவர்கள், சிற்றறிவினர்கள், பிரகாசமற்றவர்கள், மும்மல வசப்பட்டு உழலுபவர்கள்.

இவர்கள் மும்மலங்களாகிய பாசங்கள் நீங்கப் பெறுவதற்குப் பதியாகிய சிவபெருமானது அருளே பெருந்துணையாகும்.

Continued in next part.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.