நவீன முதியோர் இல்லம்

🌷 நவீன முதியோர் இல்லம் 🌷

நவீன #முதியோர் இல்லம்

கொடுத்ததும் கிடைத்ததும்!!

மிகவும் வசதியான முதியோர் இல்லம் ‘அது.

கணவன், மனைவிக்கென்று தனித்தனியாக அறைகள், கட்டில், சோபா என்ற எல்லா வசதிகளும் இருந்தது. அறைக்கே வந்து உணவு பரிமாறும் வசதியும் உண்டு.

பின்னே ஒருத்தருக்கு 6 லட்சம் ரூபாய் என்று இரண்டு பேருக்கும் 12 லட்சம் ரூபாய் டெபாசிட்டும் அறைக்கே உணவு வரும் வகையில் ஏற்பாடு செய்து அதற்காக மாதம் 6000 ரூபாய் என்று 12000 ரூபாயும் மகன் பணம் கட்டி அல்லவா இந்த முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு இருக்கிறான்.

கை நிறைய கல்லும், தங்கமுமாக வளைகள் கழுத்தில் 4 சங்கிலி, இருப்பில் பட்டு புடவை என்று இருக்கும் தன் மனைவி சியாமளா ஏன் அழுது கொண்டே இருக்கிறாள் என்று புரியாமல், சதாசிவம் அவளையே வெறுமையாய் பார்த்துக் கொண்டிருந்தார்.

பரிமாறிய உணவைக் கூட சாப்பிடாமல் உனக்கு என்ன குறை வந்து விட்டது என்று அவளைப் பார்த்து கேட்டார்.

சட்டென்று அழுது கொண்டே அவரை நிமிர்ந்து பார்த்த சியாமளா, ஏங்க நான் ஏன் அழறேன்னு உங்களுக்கு தெரியாதா? அல்லது தெரியாத மாதிரி நடிக்கிறீங்களா என்றாள்.

நம்ம பையன் 5 பெட்ரூம் வைச்சு பெரிய பங்களா கட்டி இருக்கான் கிரஹப்பிரவேசம் பண்ணினான் நாமும் தானே கூட இருந்தோம்.

அவ்வளவு பெரிய வீட்டிலே உங்களுக்கு தங்க இடம் கிடையாது என்கிற மாதிரி இங்கே கொண்டு வந்து விட்டுட்டு போய்ட்டானே? என்னங்க பையன் இவன்.

இவன் இந்த நிலைமைக்கு வர எவ்வளவு நாம கஷ்டப்பட்டு இருப்போம் என்றாள்.
சதாசிவம் நிதானமாக, நம்ம பையனை நல்ல நிலைமைக்கு கொண்டு வரணும்கிறது நம்ம எண்ணம், அதுக்காக நாம பாடுபட்டோம்.

என் சம்பாத்தியமே நிறைய வந்தும் நான் சொல்ல சொல்ல கேட்காமல் நீயும் வேலைக்குப் போய் சம்பாதிச்சே; பையனுக்காக ஏகமாக செலவழிச்சே.

ஆனா பெத்தவங்களா அவங்கிட்டே இதையெல்லாம் சொல்லி சண்டையா போடமுடியும். அப்படியே அவனத் திட்டினாலும் அவனுக்காக நாம உழைச்சதெல்லாம் வீணாப் போயிடாதா.

அப்படியும் அவன் என்ன நம்மை அநாதை இல்லத்துல விட்டிருக்கானா என்ன? நல்ல வசதியான முதியோர் இல்லத்துலே தானே விட்டுருக்கான், சும்மா அழுதுண்டு இருக்காம சாப்பிடு என்றார் சதாசிவம்.

என்ன தான் நீங்க சமாதானம் சொன்னாலும் எனக்கு மனசு கேட்கலீங்க எப்படியெல்லாம் வளர்த்தேன், எப்படி எல்லாம் சௌரியம் பண்ணிக் கொடுத்தேன் என்று மீண்டும் புலம்ப ஆரம்பித்தாள்.

சரி சரி நீ இப்ப சொல்றே அவன் நினைக்கிறது என்னனு தெரியலையே என்றார் சதாசிவம்.

மறுநாள் சாயங்காலம் பையன் ரகு வந்தான். வந்தவன் அப்பாவிடம் ஒரு போன் நம்பரைக் கொடுத்தான்.

அப்பா இது டிரைவரோட நம்பர் அம்மாவும், நீங்களும் எங்காவது கோவில், ஆஸ்பிட்டல் என்று போகணும்னா போன் பண்ணி கார்ல சௌரியமாய் போய்ட்டு வாங்க டிரைவர்க்கெல்லாம் பணம் ஒன்று கொடுக்க வேண்டாம் அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் என்றான்.

அதுவரை சும்மா இருந்த சியாமளா சுர்ரென்று கத்த ஆரம்பித்தாள்.

ஏண்டா! என்ன நினைச்சுக்கிட்டிருக்கே, பெரிய இவனாடா நீ! பணம் கொடுக்கறனாம் பணம், நாங்க பாக்காத பணமா என்று பேசிக் கொண்டு போனவளை ரகு தடுத்து நிறுத்தினான்.

ஸ்டாப், ஸ்டாப் அம்மா நான் சொல்றத கொஞ்சம் கேளு என்றான். என்னடா பெரிசா சொல்லப் போறே என்றவளை கையமர்த்தி பொறுமை, பொறுமை என்று சொல்லி சிரித்தான்.

பிறகு நிதானமாக, உன் மனதை தொட்டு சொல்லு, உன்னை வசதி இல்லாத அநாதை இல்லத்திலா கொண்டு வந்து விட்டுருக்கேன் ?.

இங்க நீ எந்த பொறுப்பும் இல்லாம நிம்மதியா இருக்கலாம். கூப்பிட்ட குரலுக்கு ஆள் என்கிற மாதிரி வசதியான முதியோர் இல்லம் இது . உன்னை மாதிரியே கணக்குப் பார்க்காம செலவு செய்றேம்மா அப்புறம் ஏன் கோபம் ?
என்றான்.

அதற்கு சியாமளா, நீ சரியான படிச்ச முட்டாள்டா. பணமாடா பெரிசு. வயசான காலத்துலே, ஆபிஸ்லேர்ந்து வந்து பக்கத்துலே உட்கார்ந்து “அம்மா சாப்பிட்டியான்னு” கேட்கிற வார்த்தை எனக்கு கிடைக்கலியேடா என்றாள்.

அப்படி வா வழிக்கு என்ற ரகு இதே கதை தானே எனக்கும் நடந்தது.

பணத்தாலே எல்லா சௌரியமும் பண்ணிக் கொடுத்தே. ஆனால் ஆசையாய் ஒரு நாள் ஒருவாய் சாதம் ஊட்டி விட்ருப்பியா.

தலைவாரி டிரஸ் போட்டு விட்டிருப்பியா.

ஒவ்வொரு வேலையையும் நான் செய்யும்போது எனக்கு அமுதா ஆயா முகம் தான் கண்ணுக்குத் தெரியுது.

உன்முகம் இல்லையேம்மா என்றவன் சியாமளாவின் மடியில் தலைவைத்து அழ ஆரம்பித்தான்.

சியாமளாவுக்கு, சதாசிவம் என் சம்பளமே போதும் நமக்கு ஒரு பையன் அவனுக்கு பாசத்தை ஊட்டி கவனித்து வளர்த்தால் போதும் என்ற எவ்வளோவோ சொல்லியும்,

தனியா பணம் வேணும், என் குழந்தைக்கு நான் செலவு செய்யணும் என்று சொல்லி வீம்பு பிடித்து கொண்டு வேலைக்குப் போனது கண்முன்னால் வந்தது.

ரகு அப்பொழுது, அம்மாவாகிய நீ எனக்கு வசதிகள் செய்து தருவதாக நினைத்து பாசத்தை கொடுக்க மறந்துட்ட .

அந்த தப்பை நானும் செய்ய விரும்பல. இதை நான் உங்களுக்கும் செய்ய மாட்டேன்.

என் குழந்தைகளையும் பாசத்திற்காக ஏங்க விடமாட்டேன்.

அதனால்தான் நன்றாக படிச்சும் வேலைக்குப் போகாத யமுனாவை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

என் வேலைகளையும் என் குழந்தைகளையும் பாசத்துடன் நல்லா பாத்துக்கிறேன்.

நெனச்சுப்பாரு சொல்லச் சொல்ல கேட்காம வேலைக்குப் போனியேம்மா.

அப்போ நான் தவிச்சத உனக்கு சொன்னா புரியாதுன்னு தான் இப்படி ஒரு காரியத்தை நான் செஞ்சேன்.

ரகு, சரி சரி கிளம்புங்கோ யமுனா எல்லாருக்கும் சமைச்சு வச்சுக்கிட்டு காத்திருப்பாள்.

கூடவே உன் பேரக் குழந்தைகளும் தான் என்றான். போகிற வழியில் யமுனாவோட அப்பா அம்மாவையும் அழைச்சுக் கிட்டு போகலாம் என்றான்.

வீட்டிற்கு போனதும் கீழே இருக்கிற இரண்டு பெட்ரூமில் ஒன்று உங்களுக்கு மற்றொன்று யமுனாவோட அப்பா அம்மாவுக்கு, மாடியிலே எங்களுக்கு, இரண்டாவது குழந்தைகளுடையது, மூன்றாவது விருந்தினர்கள் வந்தால் தங்க என்றான்.

சந்தோசமான சியாமளா, டேய் ரகு இத்தனை நாளாக நான் கொடுக்காத பாசத்தை இப்ப வட்டிபோட்டு ஒருத்தர் பாக்கியில்லாம கொடுக்கப் போறேன்டா என்றாள்.

சதாசிவத்துக்கு காஞ்சி பெரியவாள் சொன்ன “#ஸ்தீரி தர்மம்’’ நினைவுக்கு வந்தது .

குடும்பத்துக்கு வேண்டிய பொருளை கொண்டுவருவது #புருசனுடைய கடமை.

கொண்டு வரும் பொருளை வைத்து குழந்தைகளையும், புருசனையும், பராமரிப்பது #ஸ்தீரிகளின் தர்மம்.

அதை விடுத்து ஆபிசுக்குப் போகிறேன் என்று அங்கேயும் ஒழுங்காக வேலை செய்யாமல்,

ஆத்திலும் வேலை சரியாக செய்யாமல் இருப்பது ஸ்தீரிகளுக்கு வேண்டாம் என்றது நினைவுக்கு வர

சிறிய புன்னகையுடன் தன் அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றாள்…

நன்றி: திரு கணேஷ்குமார் அவர்களின் முகநூல் பதிவு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.