ஸ்ரீ ஞானதேவரின் ஞாநேச்வரீயில் இருந்து உயிரை உருக்கும் சில வரிகள் — 6 (இறுதிப்பகுதி)

going-back-to-godhead-1

See Part -1 of this title here: https://wp.me/p41QAT-1T8

See Part -2 of this title here: https://wp.me/p41QAT-1Ta

See Part -3 of this title here: https://wp.me/p41QAT-1Tc

See Part -4 of this title here: https://wp.me/p41QAT-1Te

See Part -5 of this title here: https://wp.me/p41QAT-1Th

 

பக்தன் கொடுத்த மிக அல்பமான வஸ்துவை, பகவான் மிக்க பெருமையான தென்னும் பாவத்துடன் அங்கீகரிக்கிறான்
பின்பு ஒருவனுடைய கரையற்றதான பக்தி பொங்கி, அவன் எனக்கு ஏதோ ஒன்று அர்ப்பணம் செய்யவேண்டுமென்று கருதி, ஏதோ ஒரு செடியினின்று, ஏதோ ஒரு பழத்தைப் பறித்து, என் முன் அதைக் காட்டினானோ இல்லையோ, அதை எனக்கு ஒருநாளும் கிடைக்காத வஸ்துவாய் நான் பாவித்து, இரண்டு கைகளையும்ம் நீட்டி, அவன் மேல் விழுந்து பிடுங்கிக் கொண்டு, அதின் காம்பை முறிக்காமலே வாயில் போட்டுக்கொண்டு, மிக்க ப்ரியத்துடன் சுவைத்துத் தின்பேன். மற்றொருவன் பக்தி ஒன்றின் கார்யமாக ஒரு பூவை எனக்கு அர்ப்பணம் செய்வானேயானால், ந்யாயமாய் நான் அதை முகர்ந்து பார்க்க வேண்டியதாய் இருக்க, அதையும் வாயிலேயே போட்டு மென்று தின்பேன்.

இப்படி பூவாகத்தான் இருக்க வேண்டும் என்று ஓர் அவசியம் இல்லை. அவன் கொண்டுவந்தது ஏதேனும் ஓர் இலையாய் இருந்தாலும், அதுவும் எனக்கு மிகவும் ருசிகரமாய் இருக்கும். அது பச்சையாய் தளதளவென் றிருக்காமல், வாடி எவ்வளவோ வற்றிப்போய் இருந்தாலும் ஸரியே, அது பக்தியால் நிறைந்திருப்பதைப் பார்த்து, பசியெடுத்தவனுக் கமிர்தம் கிடைத்தால், எவன் எவ்வளவு சந்தோஷப் படுவானோ, அந்த இலை கிடைத்த விஷயத்தில், அவ்வளவு சந்தோஷப் பட்டுக் கொண்டு, அதைச் சுவைத்துச் சாப்பிடுவேன்.

இல்லாவிட்டால் இப்படியும் கூட நேரிடலாம். ஓர் இலை கூட அவனுக்குக் கிடைக்காமற்போய், கொஞ்சம் ஜலமே அவனுக்குக் கிடைத்திருக்கலாம். அது எங்கு வேண்டுமென்றாலும், ஒரு விலை கொடுக்காமலும், ஒரு ச்ரமமில்லாமலும் கிடைக்கத் தக்க தல்லவா ? அப்படிக் கிடைத்ததாயிருக்கும் ஓர் உத்தரணி ஜலத்தை, தன்னுடைய ஸர்வஸ்வத்தாகப் பாவித்து, அவன் எனக்கு அர்ப்பணம் செய்தால், அப்படிப்பட்ட அல்பமான உபசாரத்தால்,

  • ————–வைகுண்டத்தைக் காட்டிலும் விசாலமான ஒரு கோவில் அவன் எனக்குக் கட்டிவைத்த தாகவும்,
  • ————- கௌஸ்துபத்தைக் காட்டிலும் நிர்மலமான ரத்நங்களைச் செய்து, அவன் எனக்குச் சாத்தி வைத்ததாகவும்,
  • ————- க்ஷீரஸாகரத்தைப் போல் மனோஹரமான பல சய்யாக்ருஹங்களைப் பாலினாலேயே அவன் எனக்கு நிர்மாணம் செய்து வைத்ததாகவும்,
  • ————— பச்சைக் கற்பூரம், சந்தநம், அகரு, இவ்வித ஸுகந்த த்ரவ்யங்களை மேருப்ரமாணமாகச் சேர்த்து, அவைகளைக் கொண்டு வாஸநைவத்திகளைச் செய்து, அவற்றை நாற்பக்கங்களிலும் ஏற்றி, அவன் எனக்கு தூபோபசாரம் செய்து வைத்ததாகவும்,
  • ————- ஸூர்யனைப் போன்ற அநேக தேஜஸ்ஸுகளைக் கொண்டு எனக்கு அவன் தீபமாலைகள் நிர்மித்ததாகவும், — கருடன்போல் வேகம் பொருந்திய பல வாஹநங்களையும், கல்ப வ்ருக்ஷங்களைக் கொண்டே உத்யானவனங்களையும், எனக்கு நிர்மித்துவைத்து, காமதேனு போன்ற பசு மந்தைகளை அவன் எனக்கு அர்ப்பணம் செய்தாகவும்,
  • ————– அம்ருதத்தைக் காட்டிலும் அதிருசிகரமான பக்வாந்நங்களை அவண் ஏராளமாய் ஸித்தம் செய்து, எனக்கு ஸமர்ப்பித்ததாகவும் நான் பாவித்து, இப்படி பக்தன் ஸமர்பித்ததான ஒரு துளி ஜலத்தைக் கொண்டு, இவ்வளவு ஸந்தோஷம் அடைவேன் அப்பா.

இவ்வளவு சொல்லவேண்டிய அவச்யமே இல்லை.ஹே கிரீடி, ஸுதாமன் கொண்டுவந்த அவலுக்காக ஆசைப்பட்டு, அவன்மேல் விழுந்து, அவன் கொண்டுவந்த மூட்டையைப் பிடுங்கிக் கொண்டு, நான் அதை அவிழ்த்து, அதில் இருந்த அவலை வாயிற்போட்டுக் கொண்டு ஆநந்தப் பட்டதை, நீ உன் கண்ணாற் பார்த்திருக்கிறாயே. இதை நன்றாய்க் கவனித்துக் கொள். நான் பக்தி ஒன்றையே கவனிப்பேன். அது இருந்து விட்டால், இவன் பெரியவன் சிறியவன் என்றும், அல்லது கொண்டுவந்த வஸ்து பெரிது சிறிதென்றும் பாரேன்.

எவனிடத்தில் பக்தி இருக்குமோ, அவன் எவனாயிருந்தாலும் அவன் வீட்டுக்கு, அவன் அழையாதிருக்கும்போதே, நானே வலுவிற்போய், உட்கார்ந்து கொண்டு விருந்துண்பேன். மற்றப்படி, பத்ரம், புஷ்பம், பலம், ஜலம் என்று சொன்ன இவையனைத்தையும் உள்ளிருக்கும் பக்தியைக் காட்டிவைக்கும் வெளிக் குறிகளாய் நான் பாவிக்கிறேனே தவிர, எனக்கு வேண்டியதெல்லாம் களங்க மற்றதான பக்தியே. ஆகையால், அர்ஜுநா, புத்தி ஒன்றை மாத்ரம் உன்னுடைய ஸ்வாதீனம் செய்துகொண்டு, உன்னுடைய மனஸென்னும் வீட்டில் என்னை நிலைபெறச் செய்துகொண்டு, ஒரு நாளும் என்னை மறவாதிருப்பதே, நீ செய்யவேண்டியதெல்லாம் என்றறிந்துகொள்.

கர்த்ருத்வ போக்த்ருத்வங்களை பகவதர்ப்பணம் செய்யவேண்டும்
நீ என்னென்ன வ்யாபாரங்களைச் செய்வாயோ, என்னென்ன போகங்களைப் புசிப்பாயோ, எந்தெந்த யஜ்ஞங்களை அநுஷ்டிப்பாயோ, அல்லது தகுந்த யோக்யதை உள்ள ஜநங்களுக்கு எந்தெந்த தானங்களைச் செய்வாயோ, வேலைக்காரர்களுக்கு எந்தெந்த ஜீவநங்களைக் கொடுப்பாயோ, தபஸ் முதலிய எந்தெந்த புண்ய ஸாதநங்களை அநுஷ்டிப்பாயோ, இப்படி எல்லாம் உன்னிடத்திலிருந்து இயறகையாகவே வெளிப்படும் கர்மங்கள் அனைத்தையும், என்னை உத்தேசித்து, எனக்கு அவற்றின் பலன் சேரவேண்டுமென்று கருதி, என்னிடத்தில் ப்ரேமை பாராட்டிச் செய்துவை. அத்துடன் நீ அக்கர்மங்களைச் செய்தாய் என்ற பாவம், உன்னுடைய மனஸில் கொஞ்சமேனும் இல்லாதபடி செய்துகொண்டு, அதாவது அக்கர்மங்கள் என்னுடைய ஸங்கல்பத்தாலும், என்னுடைய சக்தியாலும், எனக்கு ஸொந்தமான ஒரு தேஹத்தைக் கொண்டும், எனக்கு ஸொந்தமான ஒரு தேஹத்தைக் கொண்டும், ஏற்பட்டவை என்று பாவித்து, இப்படி கர்மங்களைச் சுத்தமாகச் செய்து, என் கையில் ஒப்பித்துவிடு.

இப்படி அர்ப்பணம் செய்துவிட்டால், கர்மபந்தத்தினின்று விடுபட்டு, ப்ரஹ்ம ஸாயுஜ்யத்தை யடையலாம்
பின்பு அக்நிகுண்டத்தின்மேல் வைக்கப்பட்டு வறுபட்டுப்போன விதைகள், எப்படி முளை எடுக்காவோ, அப்படியே நீ எனக்கு அர்ப்பித்துவிட்ட சுபாசுப கர்மங்கள் பலத்தை உண்டாக்கி வைக்காமற் போகும். அப்படி நீ செய்யாமல், கர்மங்களின் ஸம்பந்தம் உன்னிடம் மிகுந்து நிற்குமாகில், அவைகள் ஸுகதுக்கரூபமான பலங்களைக் கொடுத்துத்தான் தீரும். அப்பலங்களை அடைவதற்கு நீ ஒரு தேஹத்தை எடுத்துத் தீரவேண்டும். அந்தக் கர்மங்கள் முன்சொன்னவாறு என்னிடத்தில் ஒப்பிக்கப்பட்டுப்போனால், அப்போதே ஜந்மமரணங்கள் இருந்த இடம் தெரியாமல் நாசமடைகின்றன. ஜந்மம் போவதோடு கூட, அதற்குமேல் அநுபவிக்க வேண்டியதான துக்கமும் இல்லாமற் போகும். இப்படி நான் உனக்குச் சொல்லிக்கொடுத்த கர்மஸந்யாஸயுக்தி, யாதோர் காலவிளம்பமுமின்றி அநுஷ்டிக்கமுடியும்படி, அதிஸுலபமாய் இருக்கிறது. இந்த யுக்தியை அநுஷ்டித்தால், தேஹத்தை எடுக்க வேண்டிய பந்தம் உனக்கு ஏற்படாமல், ஸுகதுக்காநுபவம் என்னும் ஸமுத்ரத்தில் முழுகிப் போவதினின்று தப்பித்துக் கொண்டு, ஸுகரூபமாய் இருக்கும் என்னுடைய ஸ்வரூபத்தோடு, நீ ஸுகமாய் ஒன்றுபட்டுப் போகலாம்.

============================================================
பக்கம் : 328 – 347 ஸ்ரீ ஞாநேச்வரீ (தமிழ்) பாரதீய வித்யா பவன், 2001
—————————————————————————————————–

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.