ஸ்ரீ ஞானதேவரின் ஞாநேச்வரீயில் இருந்து உயிரை உருக்கும் சில வரிகள் — 3

Bhagavad Gita for Modern Times

See Part -1 of this title here: https://wp.me/p41QAT-1T8

See Part -2 of this title here: https://wp.me/p41QAT-1Ta
ஸர்வ வ்யாபியான ஆத்மஸ்வரூபம் அப்ராப்தமா யிருப்பதற்குக் காரணம்
இப்படி என் வ்யாப்தி இடுப்பதால், நான் இல்லையென்று சொல்லும்படியாய, ஏதேனும் ஓர் இடம் இருக்கிறதா? ஆனால் ப்ராணிகளுடைய தௌர்ப்பாக்யம் எப்படி யிருக்கிறதென்றால், அவர்கள் என்னைப் பார்ப்பதேயில்லை. அலைகள் ஜலமில்லாமல் உலர்ந்து போவதுண்டா? ஸூரகிரணங்களுக்கு தீபவெளிச்சத்தின் ஒத்தாசையில்லாமற் போனால், பார்வை சக்தி அற்றுப் பூகுமா? ஆனால் இந்த பூதங்கள் மாத்ரம், நானாகவே இருந்தும், நானாகிரதில்லை. என்ன ஆச்சர்யம் பார்! இவர்கள் அனைவர்களுக்கு, உள்ளும் புறமும் நானே நிறைந்திருக்கிறேன். இவர்கள் என்னாலேயே உருக்கிவார்க்கப் பட்டவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் பாபம் எப்படி குறுக்கிட்டு நிற்கிறது பார்! அந்த பாபத்தால் நானாகவே இருக்கிற இவர்கள், “நாம் ப்ரஹ்மம் அல்ல” என்று சொல்கிறார்கள். அம்ருதமே நிறைந்திருக்கும் கிணற்றில் வீழ்ந்த ஒருவன், அதைவிட்டு ஏறி வெளிப்பட மயலுவது போலும் இது இருக்கிறது. ஆனால் தௌர்ப்பாக்யத்தால் இப்படி அநர்த்தப்பட்டுப்போவதை, நாம் எப்படித் தடுக்க முடியும்? கண்ணில்லாத ஒரு பிச்சைக் காரன், ஒரு கவள அந்நத்துகாக ஓடும்போதும் காலில் ஒரு சிந்தாமணி இடறினால், அவன் கண் கெட்ட தனத்தால், அதைக் காலால் ஒதுக்கித்தள்ளிவிட்டுப் போகின்றது போலும், ஞானம் என்பதை எப்போது கைவிட்டுப் போகிறார்களோ, அப்போது இப்படிப்பட்ட தசை ஏற்பட்டு, எதைச் செய்து லாபம் அடைந்து கொள்ளலாமோ, அதைச் செய்யா தொழிகிறார்கள். குருடனுக்கு கருடனுடைய இரக்கைகள் கிடைத்தால், அவை அவனுக்கெப்படி ப்ரயோஜநப்படும்? அப்படியே ஞாநமில்லாதவன் ஸத்கர்மங்களைச் செய்தால், அவனுக்கு அதனால் உண்மையான பலன் ஒன்றும் ஏற்படாமல், அவன் அப்படிச் செய்ததால் ஏற்படும் ச்ரமம்தான் அவனுக்கு மிகுந்ததாகும்.

காமனையோடு யஜ்ஞம் செய்கிறவர்கள், பாபமே செய்கிறார்கள்
ஹே கிரீடி, இதைக் கவனித்துப் பார். சிலர் தங்கள் ஆச்ரம தர்மங்களைத் தவறாது நடத்திவந்து, வேதவிஹிதகர்மங்களை எப்படி அநுஷ்டிக்கவேண்டும் என்று காட்டிக் கொடுப்பதற்கு, ப்ரத்யக்ஷ ப்ரமாணங்களாய் இருப்பார்கள். அவர்கள் அநாயாஸமாய் யஜ்ஞங்கள் செய்வதைப் பார்த்து, வேதங்கள் அவர்களைக் கொண்டாடி, பக்கத்துக்குப் பக்கம் அசைந்தாடும். அவர்கள் ஒரு வைதிக கர்ம்ம் செய்யத் தொடங்கினால், அந்த கர்மமே மூர்த்திகரித்து, தன் பலனை தன்றலைமேல் சுமந்துகொண்டு, அவர்கள் எதிரில் வந்துநிற்கும். இப்படி யஜ்ஞதீக்ஷை பூண்டு, யஜ்ஞங்கள் செய்து, ஸோமபானம் செய்துகொண்டு, யஜ்ஞமே மூர்த்திகரித்ததோ என்று சொல்லத் தக்கவர்களாய் இருக்கும் இவர்கள், புண்யகர்மங்கள் என்று சொல்லிக் கொண்டு, பாபங்களையே ஸம்பாதித்துக் கொள்கிறார்கள்.

இவர்கள் செய்யும் யஜ்ஞங்கள் பாபமே என்பதற்குக் காரணம்
இவர்கள் மூன்று வேதங்களையும் பூற்றணமாய் அறிந்து, நூற்றுக் கணக்காய் யஜ்ஞங்களைச் செய்து, இந்த யாகங்களால் என்னையே த்ருப்தி செய்துவைத்து, என்னை அடையாமல், என்னை வேண்டாம் என்று ஒதுக்கிவைத்து, ஸ்வர்க்க ஸுகத்தையே வேண்டுகிறார்கள். கல்பதருவின் அடியில் உட்கார்ந்திருந்து, அப்படி இருக்கும் போதெல்லாம் தாங்கள் பிச்சை வாங்கும் பையை இறுக முடிபோட்டு வைத்துவிட்டு, பின்பு அங்கிருந்து பிச்சை வாங்கப் புறப்படுகிறவர்களைப் போலும், நூறுயாகங்களால் என்னைப் பூஜித்து, இவர்கள் ஸ்வர்க்க ஸுகத்தை அடைய விரும்புகிறார்களே ! இது புண்யமா ? நிச்சயமாய்ப் பாபமல்லவா ? இப்படி என்னைத் தள்ளிவைத்து, ஸ்வர்க்கத்தை அடைவதென்பதை, ஞாநமற்றவர்கள் புண்யலோகப்ராப்தி என்று சொன்னாற் சொல்லிப் போகட்டும். ஞாநிகள் அதை ஆத்மஹாநி என்றே சொல்வார்கள். நரக துக்கத்தை உத்தேசித்து, ஸ்வர்க்கத்தை ஸுகம் என்று சொல்லலாமே தவிர, நிர்தோஷமாயும் ஒருநாளும் அழிவில்லாததாயும், ஆந்ந்தரூபமாயும் இருக்கும் என்னுடைய ஸ்வரூபப்ராப்தியே ஸுகம் எனத் தகும். உத்தம போர்வீரனே, என்னை அடைவதற்காக ஏற்பட்ட ராஜமார்க்கத்தினின்று, கிளைவழிகளாய்ப் பிரிகின்ற ஸ்வர்க்கப்ராப்தி, நரகப்ராப்தி என்னும் இவ்விரண்டு வழிகளும், திருடர்கள் இருக்குமிடத்திற்குக் கொண்டு போய் விடுகின்றன. ஸ்வர்க்கம் என்னும் ஊருக்கு, புண்யமென்று பெயரிடப்பட்ட பாபத்தாற் போய்ச் சேரவேண்டும்; நரகத்துக்குப் பாபம் என்னும் பெயர்கொண்ட பாபத்தால் போய்ச் சேரவேண்டும். என்னை அடையவோ, சுத்தமான புண்யத்தை அநுஷ்டிக்க வேண்டும். என் நடுவிலேயே இருக்கிறவர்களை, என்னைவிட்டுப் பிரித்து தூரக்கொண்டு போவது எதுவோ, அதைப் புண்யம் என்று சொன்னால், நக்குத் தெறித்து விழுந்து போகாதோ, அர்ஜுநா ? ஆனால் இதைச் சொல்லிப் ப்ரயோஜநமென் ? இங்கே சொல்லவேண்டிய தெதுவோ அதைச் சொல்வேன், கேள்.

காமனையோடு யஜ்ஞம் செய்கிறவர்கள் அடையும் ஸ்வர்க்க ஸுகத்தின் முறை
யஜ்ஞதீக்ஷை பூண்டவர்கள், என்னை இவ்விதமாய் யஜ்ஞங்களால் ஆராதித்துவிட்டு, ஸ்வர்க்க ஸுகத்தை வேண்டுகிறார்கள். பின்பு என்னை அடையவிடாமற் செய்துவைக்கும் பாபமாகிய புண்யத்தை, நாம் அடைந்துவிட்டோம் என்று, ஆநந்தப்பட்டுக்கொண்டு, ஸ்வர்க்கம் போய்ச் சேருகிறார்கள். அங்கே போய் அமரத்வம் என்னும் ஸிம்ஹாஸநத்தில் வீற்றிருக்கவும், ஐராவதத்தின்மே லேறித் திரியவும், அமராவதி என்னும் ராஜதானியில் வஸித்திருக்கவும் பெற்று, மஹாஸித்திகளின் பண்டகசாலையிலும், அம்ருதம் நிறைந்துள்ள களஞ்ஜியங்களிலும், காமதேனுக்களின் மந்தைகளிலும் ப்ரவேசித்து, வேண்டுமென்றபடி அவைகளின் ஸுகங்களைப் புசிக்கப்பெறுவார்கள். அங்கே தேவர்கள் வேலைக் காரர்களாய் நிற்பார்கள். எங்கு பார்த்தாலும் சிந்தாமணியால் விஹாரஸ்தாநங்களும், கல்பதருக்களால் உத்யான வனங்களும் ஏற்பட்டிருக்கும். கந்தர்வர்கள் பாடகர்களாய் அமைந்து, ரம்பை போன்றவர்கள் நர்த்தனம் செய்து ஸுகிக்கச் செய்வார்கள். ஊர்வசி முதலாவனர்களோடு ரதிகேளி செய்து, ஸுகம் பெறலாம். மன்மதன் எப்போதும் வீட்டின் முன் கட்டில் உட்கார்ந்துஉட்கார்ந்து,
உட்கார்ந்து, காமஸுகத்துக்கு வேண்டிய ஆநுகூல்யத்தைச் செய்து கொடுப்பான். சந்த்ரன் அம்ருதத்தை நீராகத் தெளித்து, எல்லாவிடத்தையும் சுத்தமாய்ச் செய்துவைப்பான். வாயு பகவான் முதலியவர்கள், இப்படி ஸ்வர்க்கம் சேர்ந்தவர்கள் இட்ட வேலையை, சீக்கிரத்தில் செய்துவைக்க, ஸதா ஓடிக்கொண்டே இருப்பார்கள். ப்ருஹஸ்பதி முதலியவர்கள் ஸ்வஸ்திவாசநம் சொல்லும் ப்ராஹ்மணர்க ளாவார்கள். ஸ்துதி பாடகர்களான தேவர்கள் எண்ணிறந்தவர்களா யிருப்பார்கள். அந்தப் பதவியில் லோகபாலகர்களுக்கு ஸமானமான குதிரை வீரர்கள் ஸேநாதிபதிகளாய் முன் பின் காத்துக் கொண்டிருப்பார்கள். அந்தக் குதிரைவீரர்களின் குதிரைகள் முன்னால், உச்சைச்ரவஸே அல்பமாகத் தோன்றும். இப்படியெல்லாம், இந்த்ர ஸுகத்துக்கு ஸமானமான பலவகை போகங்களை தங்களிடத்திற் புண்யலேசம் மிகுந்திருக்குமளவும் புசிக்கப் பெறுவார்கள்.

தொடரும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.