ஸ்ரீ ஞானதேவரின் ஞாநேச்வரீயில் இருந்து உயிரை உருக்கும் சில வரிகள் — 1

9a2444d22c4d9f9-a-nw-p1909012124.jpg

ஞாநேச்வரீ

பாரதீய வித்யா பவன் 2001ல் வெளியிட்ட, மஹாராஷ்ட்ர பாஷையில் ஸ்ரீ ஞானதேவர் ஸ்ரீமத் பகவத்கீதையின் உரையாக இயற்றிய பாவார்த்த தீபிகை என்ற ஸ்ரீ ஞாநேச்வரீ எனும் நூலின், திரு தி.ப. கோதண்டராமைய்யர் செய்த தமிழ் மொழிபெயர்ப்பிலிருந்து சில பகுதிகள்.

குறிப்பு: உரையாசிரியர் ஸ்ரீ ஞாநேச்வரருடைய சிந்தனைகளும், அதைத் திரு கோதண்டராமையார் மொழிபெயர்த்த விதமும், சர்வமும் பகவானே என்ற மஹா உண்மையை பரிபூரணமாய் உணர்ந்த இந்த இரு மகான்களின் அறிவும் அனுபவமும் தரும் ப்ரகாசமும், அதில் தளதளவென சதா ஒழுகிக் கொண்டிருக்கும் பக்தித் தேனும், புத்தகத்தைத் திறந்து சில பக்கங்கள் படித்த உடனேயே எனக்குள் எதேதோ செய்துவிட்டன.

இவர்கள் இருவரின் மொழியும் தற்காலத்திய அல்லது தூய தமிழ் மொழியிலிருந்து பெரிதும் வேறுபட்டிருப்பினும், அதை தற்காலத்துத் தமிழில் மொழிமாற்றம் செய்வதை சில காரணங்களால் நான் செய்ய எத்தனிக்கவில்லை:

  1. பகவானைப் பற்றி எள்ளளவும் அறியாத, ஆன்மீக நூல்களை சரியாகக் கற்காத, முழுவதும் பகவத்கீதையைப் படித்து விடாத, படித்ததையும் பூர்ணமாய்ப் புரிந்துகொள்ளாத, ஆன்மீகம் என்பது ஒன்றும் அன்னியமல்ல என்னும் அறிவு இன்னும் முழுமையாக பெற்றிராத என்னால் செய்யப் பட வொண்ணாத மொழிபெயர்ப்பு அப்படியும் செய்து விட்டால் அவர்களை மிகவும் அவமதிப்புக்குள்ளாக்கிவிடும் என்ற அச்சம்;
  2. அவர்களின் எழுத்தில் கசியும் ப்ரகாசமும் பக்திச் சுவையும் விவரிக்க என்னுள் உள்ளதாக நான் கருதும் அறிவு அனுபவம் இவற்றால் முற்றிலும் இயலாத காரியம் என்ற உண்மை;
  3. இந்த இரு பக்திமான்களின் இணையற்ற ஒரு பக்திச் சுரங்கமாக இருக்கும் இந்தப் பொக்கிஷம் சிறுபிள்ளைத் தனமான என் முயற்சியால் மாசுபட்டு, படிப்போருக்கு யான் பெற்ற இன்பம் பெறமுடியாமல் செய்துவிடுமோ என்ற அறிவு.
  4. அவர்கள் உபயோகித்த மணிப்ரவாள தமிழ் நடையில் வயது முதிர்ந்த அறிவு முதிர்ந்த இரு பெரியவர்கள் நேரே நம்மருகில் அமர்ந்து நம்மிடம் உண்மையில் பேசுவதைப் (ஸம்பாஷிப்பதைப்) போன்று எனக்குள் எற்பட்ட உணர்வு.

– N Ganapathy Subramanian

============================================================

ஞாநோத்தரகாலத்தில் ஸகலமும் நானே என அறியப்படுகிறது. (நானே என்றால் ஸ்ரீமத் கிருஷ்ணன்)
உண்மையான ஞானம் ஏற்பட்டபின், எல்லாத்துக்கும் மூலகாரணமான வேதமும், அதில் வர்ணிக்கப்பட்ட விதிகளை அநுஷ்டிப்பதால் ஏற்படும் யஜ்ஞஸம்பந்தமான க்ரியாலாபங்களும், அந்த க்ரியைகள் ஸம்பூர்ணமாய் அநுஷ்டிக்கப்படுவதால் ஏற்படும் யஜ்ஞமும், அந்த யஜ்ஞத்தில் ப்ரயோகிக்கப் பட்டவையான ஸ்வாஹா ஸ்வதா காரங்களும், ஸோமலதை முதலிய பலவகை யஜ்ஞ ஸர்மக்ரியைகளும், நெய், ஸமித், ஹவிஸ் முதலிய ஹோமத்ரவ்யங்களும், மந்த்ரம், ஹோதா, ஹோமம் செய்தல், அக்நி, ஆகிய இவைகளும், சுருக்கிச் சொல்ல, யஜ்ஞ ஸம்பந்தமான யாவையும், நானே என்று அறியப்படுகின்றன.

பகவான் ஜகத்துக்குப் பிதா
என்னுடைய அங்கஸங்கம் ஏற்பட்டபின், இந்த ப்ரக்ருதியினின்று அஷ்டாங்கங்களோடு கூடிய இந்த ஜகத்து உண்டாகிறதனால், நான் இந்த ஜகத்துக்குப் பிதா ஆகிறேன்.

அவனே ஜகத்துக்கு மாதா
அர்த்தநாரீ நடேச்வரஸ்வரூபத்தில், புருஷன் எவனோ, அவனே ஸ்த்ரீ ஆய் இருப்பதுபோல், நானே சராசர்ரூபமான இந்த ஜகத்துக்குத் தாயும் ஆகிறேன்.

அவனே ஜகத்தைப் போஷித்து வளர்க்கிறவன்
இப்படி உண்டான ஜகத்து, எவனால் தாங்கப்பட்டு, போஷிக்கப்பட்டு, வ்ருத்தி யடைகிறதோ, அந்த தாதாவும் என்னைத் தவிர வேறொருவனு மல்ல, என்பதில் ஸந்தேஹம் இல்லை.

அவனே ஜகத்துக்குப் பிதாமஹன்
அன்றியும் இவ்வுலகுக்குத் தாயும் தகப்பனுமான ப்ரக்ருதி புருஷர்கள், அந்தக்கரணோபாதியற்ற எந்த சுத்த ப்ரஹ்மஸ்வரூபத்தினின்றும் உண்டானார்களோ, அந்த சுத்த ப்ரஹ்மமாகிய நான் பிதாமஹனும் ஆகிறேன்.

அவனே வேத்யமான வஸ்து
மேலும் பலவகை ஞானங்கள் என்னும் வழிகளெல்லாம் போய்ச் சேரு மூராயும், நான்கு வேதங்களும் கூடும் நாற்சந்தியாயும், இருக்கும் வேத்ய வஸ்துவும் நானே.

அவனே பவித்ரமான வஸ்து
எந்த ஸ்தாநத்தில் வந்து சேர்ந்ததும், நாநாவிதமான மதங்களும் ஒன்றுபடுமோ, ஒன்றின் முகம் ஒன்றுக்குத் தெரியாத சாஸ்த்ரங்கள் பலவும், ஒன்றை ஒன்று அறிந்து கொள்ளுமோ, ஒன்றைவிட்டு ஒன்று பிரிந்து போன ஞானங்கள் ஒன்றுபடுமோ, இந்தக் காரணங்களால் எது பவித்ரம் என்று சொல்லப் படுமோ, அதுவும் நானே.

அவனே ஓம்காரம்
மேலும் பார். சப்த ப்ரஹ்மத்துக்கு பீஜமான பரப்ரஹ்மத்தினின்றும், பரா, பச்யந்தீ, மத்யமா, வைகரீ எனப்படும் நான்கு வாக்குக்கள் முளையாகப் புறப்பட்டபின், இந்நான்குக்கும் வாஸ்ஸ்தானமாகிய ஓம்காரம் எதுவோ அதுவும் நான்தான்.

மூன்று வேதங்களும் அவனே
அந்த ஓம்காரத்தினின்று அகார உகார மகார மென்னும் மூன்றக்ஷரங்களும் உண்டான மாத்ரத்தில், அவைகள் ருக், யஜுஸ், ஸாமம் என்னும் மூன்று வேதங்களாவதால், இம்மூன்று வேதங்களும் அவற்றின் வம்ச பரம்பரைகளும் நான் தான்.

அவனே ஸகலத்துக்கும் கதி
இந்த சராசரம் அனைத்தும் ப்ரளயகாலத்தில் எந்த ப்ரக்ருதியின் வயிற்றில் ஒடுங்கிப் போகுமோ, அந்த ப்ரக்ருதியானவள் ச்ரமமடைந்து எந்த இடத்துக்குப் போய் அந்த ச்ரமத்தைத் தீர்த்துக்கொள்வாளோ, அந்த பரம கதி நானே.

அவனே பர்த்தா
அந்த ப்ரக்ருதிக்கு ஆதாரமாய் இருந்து, அவள் பிழைத்து வாழும்படியாகச் செய்து, அவளை ஆச்ரயித்து, அவளை விச்வத்தைப் பெற்றுவக்கும்படியாய்ச் செய்து, பின்பு விசுவமாய் ரூபமெடுத்து, அவள் தேஹத்துக்குட் புகுந்து, அவள் வசப்பட்டு, அவள் முக்குணங்களையும் புசித்துக் கொண்டு, அந்த விச்வச்ரீயான ப்ரக்ருதிக்கு இவ்விதம் கணவனாய் இருப்பவனும் நானே.

தொடரும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.