ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ  ஸ்லோகம் 7 உரையுடன்

ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ  ஸ்லோகம் 7 உரையுடன்

ஸ்ரீ “அண்ணா” எழுதி சென்னை ஸ்ரீராமகிருஷ்ணமடம் வெளியிட்டுள்ள “ஸௌந்தர்யலஹரீ -பாஷ்யம்” என்ற விளக்க நூலில் இருந்து விளக்கங்களுடன் (சிற்சில இடங்களில், Pandit S Subrahmanya Sastri and T R Srinivasa Ayyangar  இவர்களால் 1937-ம் வருடத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு The Theosophical Publishing House ப்ரசுரித்த The Ocean of Beauty – Soundarya Lahari of Sri Samkara Bhagavatpada என்னும் நூலிலிருந்து எடுத்த ஆங்கில விளக்கங்களுடன்)

 

    7. தேவியின் ஸ்வரூபம்

தேவியின் ஸாக்ஷாத்காரம், சத்ருஜயம்

க்வணத் காஞ்சி தாமா கரிகல கும் ஸ்தன நதா
பரீக்ஷீணா மத்த்யே பரிணத ஶரச்சந்த்ர வனா
தனுர் பாணான் பாஶம் ஸ்ருணி மபி ததானா கரதலை:
புரஸ்தா தாஸ்தாம் ந: புரமதிது ராஹோ புருஷிகா                                7

சலங்கைகள் கிலுகிலுக்கின்ற தங்க ஒட்டியாணம் பூண்டவளும் யானையின் மஸ்தகம் போன்ற நகில்களால் சற்று வணங்கிய வடிவுடையவளும், இடையில் மிக மெலிந்தவளும், சரத்காலத்துப் பூர்ணசந்திரன் போன்றமுகம் படைத்தவளும், கைகளால் கரும்புவில்,புஷ்பபாணம், பாசம், அங்குசம் ஆகியவற்றை தரிப்பவளும் முப்புரத்தை யழித்த பரமசிவனுடைய ஆச்சரியமான அகம்பாவ வடிவினளுமான பராசக்தி எங்களுக்கு எதிரில் எழுந்தருளட்டும்.

மணிபூரக சக்கரத்தில் தேவி எந்த ரூபத்துடன் பிரகாசிக்கிறாளோ அது இங்கே வர்ணிக்கப் படுகிறது. மேருதண்டம் என்னும் முதுகெலும்பிற்குள் ஸுஷும்னா என்ற நாடி ஸூக்ஷ்மமாக இருக்கிறது. இதன் அடியில் மூலாதார சக்கரமும், அதற்கு நாலு விரற்கடைக்குமேல்  ஸ்வாதிஷ்டானமும், அதற்குமேல் தொப்புளுக்கு எதிரில் மணிபூரகமும், இருதயத்துக்கு எதிரில் அநாஹதமும், கண்டத்துக்கு எதிரில் விசுத்தியும், புருவமத்தியில் ஆஜ்ஞையும், சிரஸின்மேல் ஸஹஸ்ரார சக்கரமும் உள்ளன். மணிபூரகத்தில் த்ரிபுராந்தகனான காமேசுவரனுடைய ஜீவநாடியாகத் தேவி விளங்குகிறாள்.

 “மன்மதனுக்கும் கரும்புவில், அம்பாகுக்கும் கரும்புவில்; அவனுக்கும் பஞ்சபாணம் புஷ்பந்தான், இவளுக்கும் பஞ்சபாணம் புஷ்பந்தான்; .. இதைப் பின்பற்றி மூககவி “உன்னுடைய கடாக்ஷம் சிவனிடம் மோஹத்தை உண்டுபண்ணுகிறது, மனுஷ்யர்களுடைய மோஹத்தை அடக்கிவிடுகிறது” என்கிறார்.” – காமகோடி சங்கராச்சாரியார்.

(க்வணத்=) மணிபூரகத்திலிருந்து தேவி அனாஹத சக்கரத்தை நோக்கி எழுந்தருளுகையில் பக்தர்கள் தேவியின் கால்சலங்கைகளின் கிலுகிலுப்பைக் கேட்கின்றனர்.

 

The Devi carries in her left lower arm the sugarcane bow with a string of bees, in her lower right arm the five arrows of Kamala, Raktakairava, Kahlaara, Indeevara, and Sahakaara flowers; in her upper left arm the Paasa, noose, shining like coral, and in her upper right arm the Ankusaa, goad, shining  like the crescent. These weapons of the Devi are said to assume the Sthuula (gross), the Suuksma (Mantramaya) and the Para (Vaasanaamaya) forms.

  • Pandit S Subrahmanya Sastri and T R Srinivasa Ayyangar in The Ocean of Beauty – Soundarya Lahari

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.