ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ  ஸ்லோகங்கள் எண் 100 மற்றும் 3 அதிக ஸ்லோகங்கள் உரையுடன்

ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ  ஸ்லோகங்கள் எண் 100 மற்றும் 3 அதிக ஸ்லோகங்கள் உரையுடன்

ஸ்ரீ “அண்ணா” எழுதி சென்னை ஸ்ரீராமகிருஷ்ணமடம் வெளியிட்டுள்ள “ஸௌந்தர்யலஹரீ -பாஷ்யம்” என்ற விளக்க நூலில் இருந்து விளக்கங்களுடன் (சிற்சில இடங்களில், Pandit S Subrahmanya Sastri and T R Srinivasa Ayyangar  இவர்களால் 1937-ம் வருடத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு The Theosophical Publishing House ப்ரசுரித்த The Ocean of Beauty – Soundarya Lahari of Sri Samkara Bhagavatpada என்னும் நூலிலிருந்து எடுத்த ஆங்கில விளக்கங்களுடன்)

100.       தேவியளித்த சக்தியால் தேவியைப் பாடியது

ஸகல ஸித்தி

ப்ரதீப ஜ்வாலாபிர் திவஸகர நீராஜனவிதி:
ஸுதாஸூதேஶ் சந்த்ரோபல ஜலலவை ரர்க்யரசனா
ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி ஸௌஹித்யகரணம்
த்வதீயாபிர் வாக்பிஸ் தவ ஜநநி வசாம் ஸ்துதிரியம்                            100

வாக்கிற்கு பிறப்பிடமாகிய தாயே ! கர்ப்பூரதீப ஜ்வாலையால் சூரியனுக்கு நீராஜனம் செய்தாற்போலும், அமிருதகிரணங்களைப் பொழியும் சந்திரனுக்கு சந்திரகாந்தக் கல்லில் கசியும் நீர்த்துளிகளால் அர்க்கியம் அளித்தாற்போலும், சமுத்திரத்திற்கு சொந்தமான ஜலத்தாலேயே சமுத்திரத்திற்குத் தர்ப்பணம் செய்தாற்போலும், உன்னுடையதேயான வாக்குகளால் அமைந்த இந்த உனது ஸ்தோத்திரம்.

ஸ்ரீ ஆசார்யர் எதற்குமேலே நினைக்க முடியாதோ அந்தத்  தத்துவத்தைச் சொன்னவர். அவரே இப்படித் தாழ்மையோடு சொல்லியிருக்கிறார். இந்த ஒரு சுலோகத்தைப் பாராயணம் பண்ணினால் ஸௌந்தர்யலஹரீ முழுவதையும் பாராயணம் பண்ணின பலன் ஊண்டாகும். எப்படி ? எல்லா வித்தைகளுக்கும் விரயோஜனம் விநய ஸம்பத்து. ஸகல விநயமும் இந்தச் சுலோகத்தில் இருக்கிறது. பூஜை செய்யும்போது ஈசுவரனுக்கு எல்லா உபசாரங்களையும் பண்ணிவிட்டுக் கடைசியில் நீராஜனம் பண்ண வேண்டும். இதில் நீராஜனம் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் முடிவான தத்துவத்தை இந்தச் சுலோகம் சொல்லுவதற்கு இதுவும் ஓர் அடையாளம் போல் இருக்கிறது.                                        – காமகோடி சங்கராசாரியார்.

 இத்துடன் நூறு சுலோகங்கள் கொண்ட ஸௌந்தர்யலஹரி முற்றிற்று

 

வேறு பாடங்களில் அதிகப்படியாகக் காணப்படும் சுலோகங்கள்

 ஸௌந்தர்யலஹரீ நூறு சுலோகங்களுடன் இன்னும் மூன்று சுலோகங்கள் சேர்ந்து காணப்படுகின்றன. அவை பகவத்பாதருடையது அன்று, பிறரால் சேர்க்கப்பட்டவை எனக்கருதி அவற்றிற்கு உரையெழுதவில்லை – லக்ஷ்மீதரர்

இந்த மூன்று சுலோகங்களும் கைவல்யாசிரமர் எழுதிய ஸௌபாக்யவர்த்தினீ உரையில் காணப்படுகின்றன. இவை பிரயோக நூல்களில் காணப் படவில்லை.

அந்த வகையில்

வேறு பாடத்தில் 94 ஆவது சுலோகமாக வருவது:

ஸமானீத: பத்ப்யாம் மணி முகுரதா மம்ரமணிர்
யா தாஸ்தா ந்த: ஸ்திமித கிரண ஶ்ரேணி மஸ்ருண:
ததாதி த்வத்வக்த்ர ப்ரதிபலன மச்ராந்த விகசம்
நிராதங்கம் சந்த்ராந் நிஜ ஹ்ருய பங்கேருஹமிவ

தேவியின் பாதாரவிந்தங்களுன் முன் ரத்னக் கண்ணாடிபோல் வைக்கப்பட்ட சூரியன் தன் கிரணங்களால் தேவியின் முகத்திற்குத் துன்பம் ஏற்படாதவண்ணம் தன் ஒளியைச் சுருக்கிக் கொள்கிறான். அந்த நிலையில் தேவியின் திருமுகத் தாமரை சூரியபிம்பத்தில் பிரதிபலிக்கிறது. சாதாரணத் தாமரை சந்திரனை கண்டால் வாடும். ஆனால் என்றும் மலர்ச்சியுடன் இருக்கும் இந்தத் தாமரை சூரியனுடைய இருதயத்தாமரை போல் விளங்குகிறது.

வேறு பாடத்தில் 99 ஆவது சுலோகமாக வருவது:

ஸமுத்பூத ஸ்த்தூல ஸ்தனர முரச் சாருஹஸிதம்
கடாக்ஷே கந்ர்ப்பா: கதிசன கம்பத்யுதி வபு:
ஹரஸ்ய த்வத்ப்ராந்திம் மனஸி ஜனயந்திஸ்ம விமலா
வத்யா யே க்தா : பரிணதி ரமீஷா மிய முமே

உமாதேவியே ! அழுக்கற்ற உனது பக்தர்கள் பரந்து கனத்த மார்பைக் கொண்டவர்களாகவும், அழகிய புன்சிரிப்பை உடையவர்களாகவும், கடைக்கண் பார்வையில் மன்மதர்களாகவும், கடம்பமரம் போன்ற உடல் படைத்தவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். அவர்களைப் பார்க்கும்போது சிவனுடைய மனத்தில் ‘இவர்களும் தேவியேதானோ ?’ என்ற மயக்கம் ஏற்படுகிறது. (பக்தர்கள் அங்ஙனம் ஸாரூப்ய முக்தியை எய்திவிடுகிறார்கள்.)

The implication is that all devotees of the Devi, by constantly meditating on her form, themselves develop a similar form, as constant believing is seeing, seeing develops into knowing, and knowing is becoming.

வேறு பாடத்தில் 102 ஆவது சுலோகமாக வருவது:

நிதே நித்யஸ்மேரே நிரவதிகுணே நீதிநிபுணே
நிராகாஜ்ஞானே நியம பரசித்தைக நிலயே
நியத்யா நிர்முக்தே நிகிலநிமாந்த ஸ்துதபதே
நிராதங்கே நித்யே நிமய மமாபி ஸ்துதிமிமாம்

செல்வமே ! என்றும் மகிழ்ச்சி பொங்கும் முகமுடையவளே ! எல்லையற்ற குணநிதியே ! நீதியில் வல்லவளே ! குறைவில்லாத ஞானம் உள்ளவளே ! சித்தத்தை அடக்கியவர்களிடம் உறைபவளே ! கட்டுப்பாடு அற்றவளே ! உபநிஷதங்கள் எல்லாம் போற்றும் உயர் நிலையே ! பௌஅம் அற்றவளே ! நித்தியம் ஆனவளே ! என்னுடைய இந்த ஸ்துதியையும் ஏற்றருள்வாய் !

 ஸ்ரீ காமேசுவர ஸூரியும் அருணா மோதினீ  என்ற தமது உரையில் இந்த சுலோகத்தைச்  சேர்த்திருக்கிறார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.