ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ  ஸ்லோகங்கள் 91 – 98 உரையுடன்

ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ  ஸ்லோகங்கள் 91 – 98 உரையுடன்

ஸ்ரீ “அண்ணா” எழுதி சென்னை ஸ்ரீராமகிருஷ்ணமடம் வெளியிட்டுள்ள “ஸௌந்தர்யலஹரீ -பாஷ்யம்” என்ற விளக்க நூலில் இருந்து விளக்கங்களுடன் (சிற்சில இடங்களில், Pandit S Subrahmanya Sastri and T R Srinivasa Ayyangar  இவர்களால் 1937-ம் வருடத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு The Theosophical Publishing House ப்ரசுரித்த The Ocean of Beauty – Soundarya Lahari of Sri Samkara Bhagavatpada என்னும் நூலிலிருந்து எடுத்த ஆங்கில விளக்கங்களுடன்)

91.  தேவியின் நடையழகு

பூமி லாபம், தன லாபம்

ந்யாஸ க்ரீடாபரிசய மிவாரப்து மனஸ:
ஸ்கலந்தஸ் தே கேலம் வனகலஹம்ஸா ந ஜஹதி
அதஸ்தேஷாம் ஶிக்ஷாம் ஸுபகமணி மஞ்ஜீர ரணித
ச்சலாதாசக்ஷாணம் சரணகமலம் சாருசரிதே                                          91

புண்ய சரித்திரம் உடையவளே !  உன்னுடைய வீட்டில் உள்ள அன்னப் பறவைகள் உனது நடையழகை கற்றுக்கொள்ள ஆரம்பிக்க எண்ணம் கொண்டவைபோல் துள்ளிக்குதித்துக்கொண்டு உன்னுடைய அழகிய நடையை தொடர்வதை விடுவதில்லை. ஆகையினால் உன்னுடைய திருவடி மங்களமான ரத்தினம் இழைத்த சிலம்புகளின் ஒலியின் மூலம் மறைமுகமாக அப்பறவைகளுக்கு நடைப்பழக்கத்தை கற்றுக்கொடுப்பது போல் இருக்கிறது.

 92.  தேவியின் இருக்கை

ஆளுந்திறமை

தாஸ்தே மஞ்சத்வம் த்ருஹிண ஹரி ருத்ரேஶ்வர ப்ருத:
ஶிவ: ஸ்வச்ச ச்சாயா டித கபட ப்ரச்சபட:
த்வதீயாநாம் பாஸாம் ப்ரதிபலன ராகாருணதயா
சரீரீ ச்ருங்காரோ ரஸ இவ த்ருசாம் தோக்தி குதுகம்                92

ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய அதிகார புருஷர்கள் உன்னுடைய வேதஸ்வரூபமாகிய கட்டிலின் நான்கு கால்களாக இருக்கும் தன்மையை அடைந்திருக்கிறார்கள். ஸதசிவன் வெண்மையான காந்தியோடு கூடிய மேல்விரிப்பு என்ற வேஷத்துடன் இருக்கிறார். உன்னுடைய காந்தியின் பிரதிபலனத்தால் அவர் சிவப்பாகத் தோன்றுவதால் சிருங்கார ரஸமே சரீரம் படைத்து வந்ததுபோல் உன்னுடைய கண்களுக்கு ஆனந்தத்தை அளிப்பவர் ஆகிறார்.

 சில பாடங்களில் இது 94 ஆவது சுலோகமாகவும், அடுத்துவரும் ‘அராலா கேசேஷு’ என்பது 92 ஆவதாகவும் வருகிறது.

93.  சிவனுடைய கருணையின் உருவே தேவி

மனோரத ஸித்தி

அராலா கேஶேஷு ப்ரக்ருதிஸரலா மந்ஹஸிதே
ஶிரீஷாபா சித்தே த்ருஷதுபலஶோபா குசதடே
ப்ருசம் தந்வீ மத்யே ப்ருது ருரஸிஜாரோஹ விஷயே
த் த்ராதும் ஶம்போர் ஜயதி கருணா காசிருணா                           93

பரமசிவனுடைய மனத்துக்கும் வாக்குக்கும் எட்டாத ஏதோ ஒரு கருணையானது உலகை ரக்ஷிப்பதற்காக அருணா என்ற பராசக்தி வடிவில் வெற்றியுடன் விளங்குகிறது. அந்தக் கருணாசக்தி தேவியின் கூந்தலில் சுருளும் குடிலத்தன்மையாகவும், புன்சிரிப்பில் இயற்கையான இனிமையாகவும், மனத்தில் வாகைப் பூவினது போன்ற மிருதுத்தன்மை யாகவும், நகில்களில் கல்லினுள் இருக்கும் ரத்தினத்தினது போன்ற கடினமாகவும், இடையில் முகுந்த மெலிவாகவும், மார்பிலும் நிதம்பத்திலும் பருமனாகவும் விளங்குகிறது.

 94.  தேவியின் உபயோகத்திற்கான ஜலபாண்டம் போன்றது சந்திரபிம்பம்

இஷ்டப் பிராப்தி

கலங்க: கஸ்தூரி ரஜநிகர பிம்ம் ஜலமயம்
கலாபி: கர்ப்பூரைர் மரகதகரண்ம் நிபிடிதம்
அதஸ் த்வத்போகேன ப்ரதிதின மிம் ரிக்தகுஹரம்
விதிர் பூயோ பூயோ நிபிடயதி நூநம் தவ க்ருதே                                    94

இந்த வானில் தோன்றும் சந்திரமண்டலமாகத் தோன்றுவது பிரதிபலிக்கும் ஜலம் நிறைந்த மரகதப்பாண்டம்; கிரணங்களாகிய பச்சைக்கர்ப்பூரத்தால் நிறைவு செய்யப்பட்டது; களங்கமாகத் தோன்றுவது கஸ்தூரி. ஆகையால் தின்ந்தோறும் உனது உபயோகித்தால் காலியாகும் அப்பாண்டத்தை பிரம்மா மீண்டும் மீண்டும் உனக்காக நிச்சயம் நிரப்பி வைக்கிறார் என்றுதான் நான் கருதுகிறேன்.

 The moon is here compared to an emerald canister containing musk and refined camphor for the daily use of the Devi. As the supply is exhausted every day, it is being replenished by Brahman, the Devi’s servant, then and there.

 95. இந்திரிய அடக்கம் இல்லாதவர்கள் தேவியை அணுகி வழிபடமுடியாது

இஷ்டப் பிராப்தி

புராராதே ரந்த: புரமஸி ததஸ் த்வச்சரணயோ:
ஸபர்யா மர்யாதா தரலகரணானா மஸுலபா
ததா ஹ்யேதே நீதா: ஶதமகமுகா: ஸித்திமதுலாம்
தவ த்வாரோபாந்த ஸ்திதிபி ரணிமாத்யாபி ரமரா:                              95

நீ முப்புரம் எரித்த பரமசிவனுடைய அந்தப்புரத்தில் பட்டமஹிஷியாக விளங்குகிறாய். அதனால் உன்னுடைய பாதங்களில் நெருங்கிப் பூஜை செய்யும் முறை அடங்காத சித்தம் உடையவர்களால் அடையக் கூடியது அன்று. அதனால்தான் இந்த இந்திரன் முதலான தேவர்கள் உன்னிடைய வாயிற்புரத்தில் இருக்கும் அணிமா முதலிய தேவதைகளால் – தடை செய்யப்பட்டவர்கள் ஆயினும் பூஜை செய்ய விரும்பி வந்ததால் அணிமா முதலிய சித்திகளை அடையும்படி செய்விக்கப் பட்டார்கள்.

96.  தேவியின் பாதிவ்ரத்ய மகிமை

ஸரஸ்வதீ கடாக்ஷம், லக்ஷ்மீ கடாக்ஷம்

கலத்ரம் வைதாத்ரம் கதிகதி ஜந்தே ந கவய:
ஶ்ரியோ தேவ்யா: கோ வா ந வதி பதி: கைரபி நை:
மஹாதேவம் ஹித்வா தவ ஸதி ஸதீனா மசரமே
குசாப்யா மாஸங்: குரவக தரோ ரப்யஸுல:                                       96

பதிவிரதைகளின் தெய்வமே ! பிரம்மாவினுடைய மனைவியை எத்தனையோ கவிகள் நாடி அடையவில்லையா ? ஏதோ ஒரு வகையான செல்வத்தால் எவனோ ஒருவன் லக்ஷ்மீபதி என்ற பெயருக்கு உரியவனாக ஆகிவிடவில்லையா ? பதிவிரதைகளுக்குள் முதன்மையானவளே ! மஹாதேவனை விட்டு உனது நகில்களுடைய ஸம்பந்தமோ மருதோன்றி மரத்திற்குக் கூட கிடைத்தற்கு அரிது.

மந்த்ரம், ஜபம், கல்வி இவைகளால் ஸரஸ்வதீ வல்லபன் ஆகலாம். ஏராளமான செல்வத்தைப் பெற்றுக்கோண்டு லக்ஷ்மீபதி ஆகலாம். கல்வியையும் செல்வத்தையும் மனிதர் வசப்படுத்திக் கொள்ளலாம்.

ஆனாலும் எவருமே, மனத்திற்கும் வாக்குக்கும் எட்டாத பரதேவதையை வசப்படுத்திக்கொள்ள முடியாது.

பூத்துக் காய்க்கும் முன் சில மரங்கள் பெண்களின் தழுவுதலுக்காக ஏங்குகின்றன. குரவகம் அப்படிப்பட்ட மரம். அதற்குக்கூட தேவியின் ஆலிங்கனம் கிட்டாது.   

97.  தேவியே ஸரஸ்வதியும் லக்ஷ்மியும் பார்வதியும்

ஜீவன்முக்தி

கிராமாஹுர் தேவீம் த்ருஹிணக்ருஹிணீ மாமவிதோ
ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸஹசரீ மத்ரிதநயாம்
துரீயா காபி த்வம் துதிகம நிஸ்ஸீம மஹிமா
மஹாமாயா விஶ்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி                             97

பரப்பிரம்மத்துடன் இணைந்த பராசக்தியே ! வேதத்தை அறிந்தவர்கள் – உன்னையே –  பிரம்மாவின் பத்தினியான வாக் தேவதையாக கூறுகிறார்கள். – உன்னையே ஹரியினுடைய பத்தினியான லக்ஷ்மியாகவும், சிவனுடைய பத்தினியான பார்வதியாகவும் – கூறுகிறார்கள். நீயே இம்மூவருக்கும் அப்பாற்பட்டவளாக அடைவதற்கு அரியதும் எல்லையில்லாத மகிமை உடையவளாக – மகாமாயை எனப் பட்டவளாக உலகு அனைத்தையும் ஆட்டி வைக்கிறாய்.  

98.  பாத தீர்த்தம் ஊமையையும் பேசவைக்கும்

வாக்ஸித்தி

தா காலே மாத: கதய கலிதாலக்தகரஸம்
பிபேயம் வித்யார்த்தீ தவ சரண நிர்ணேஜன ஜலம்
ப்ரக்ருத்யா மூகானாமபி ச கவிதா காரணதயா
தா தத்தே வாணீ முககமல தாம்பூல ரஸதாம்                                       98

தாயே ! லாக்ஷாரஸப்பூச்சுடன் கலந்துவரும் உன்னுடைய பாதப்பிரக்ஷாளன தீர்த்தத்தை பிரம்மவித்தையை நாடும் நான் எக்காலத்தில் பருகப் போகிறேன்.?

கூறி அருளுங்கள். இயற்கையாகவே ஊமைகளுக்கும் கூட கவி பாடும் சக்தியை அளிக்கும் காரணத்தால் ஸரஸ்வதியின் வாயில் உள்ள தாம்பூல  ரஸத்திற்கு ஒப்பான நிலையை எப்போது – என்வாயில் சேர்ந்த அந்தப் பாத தீர்த்தம் அடையப் போகிறது ?

 கோகர்ண க்ஷேத்திரத்திற்கு அருகில் உள்ள மூகாம்பிகா க்ஷேத்திரத்தில் தனது பாத தீர்த்தத்தால் ஊமையை தேவி மகாவித்வானாகச் செய்த வரலாறு ஒன்று உண்டு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.