ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ  ஸ்லோகங்கள் 76 – 80 உரையுடன்

ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ  ஸ்லோகங்கள் 76 – 80 உரையுடன்

ஸ்ரீ “அண்ணா” எழுதி சென்னை ஸ்ரீராமகிருஷ்ணமடம் வெளியிட்டுள்ள “ஸௌந்தர்யலஹரீ -பாஷ்யம்” என்ற விளக்க நூலில் இருந்து விளக்கங்களுடன் (சிற்சில இடங்களில், Pandit S Subrahmanya Sastri and T R Srinivasa Ayyangar  இவர்களால் 1937-ம் வருடத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு The Theosophical Publishing House ப்ரசுரித்த The Ocean of Beauty – Soundarya Lahari of Sri Samkara Bhagavatpada என்னும் நூலிலிருந்து எடுத்த ஆங்கில விளக்கங்களுடன்)

 76.  மன்மதன் மூழ்கிய மடு போன்ற நாபியின் அழகு

பரம வைராக்கியம், காமஜயம்

ஹரக்ரோ ஜ்வாலாவலீபி ரவலீடேன வபுஷா
கபீரே தே நாபீ ஸரஸி க்ருதஸங்கோ மனஸிஜ:
ஸமுத்தஸ்த்தௌதஸ்மா சல தனயே தூமலதிகா
ஜனஸ்தாம் ஜானீதே தவ ஜனனி ரோமாவலிரிதி                         76

மலையரசன் பெண்ணே ! மன்மதம் பரமசிவனுடைய கோபத்தினின்று தோன்றிய அக்கினி ஜ்வாலைகளால் சூழப்பெற்ற சரீரம் உடையவனாய் உன்னுடைய ஆழமான நாபி என்னும் மடுவில் நாட்டம் உடையவன் ஆனான், அதில் மூழ்கினான், அதிலிருந்து கொடிபோன்ற புகை கிளம்பிற்று. அதை ஜன்ங்கள் உன்னுடைய நாபியிலிருந்து மெல்லிதாய் மேலே படரும் ரோமவரிசை என்றே கருதுகிறார்கள்.

 77. யமுனையின் அலை போன்ற ரோமவரிசை

ஸர்வஜனவச்யம், சூக்ஷ்மதர்சனம்

தேதத் காலிந்தீ தனுதர தரங்காக்ருதி ஶிவே
க்ருஶே மத்யே கிஞ்சிஜ்ஜனனி தவ யத்பாதி ஸுதியாம்
விமர்த்தா தன்யோன்யம் குசகலஶயோ ரந்தரதம்
தநூபூதம் வ்யோம ப்ரவிஶதிவ நாபிம் குஹரிணீம்                                77

மங்களஸ்வரூபியே ! தாயே ! உன்னுடைய மெலிந்த இடையில் யமுனா நதியின் மிக மெல்லிய அலையின் வடிவு போன்ற யாதொரு இந்த ஒன்றுள்ளதோ – அதாவது ரோமவரிசையின் சிறு பொலிவு உண்டோ – எது ஞானிகளுக்கு தியானத்தில்புலப்படுகிறதோ – அது கலசங்கள் போன்ற இரு நகில்களின் நடுவில் அகப்பட்டுக் கொண்டதும், நகில்கள் ஒன்றோடொன்று உறைவதால் மெலிந்ததுமான நீல நிறமுள்ள ஆகாயம் குகைபோன்ற தொப்புள் குழியில் புகுவதுபோல் தோன்றுகிறது.

 78.  நகில்களாகிற தாமரை முளைத்த தடாகம் போன்ற நாபி

ஸர்வலோகவச்யம்

ஸ்திரோ ங்காவர்த்த: ஸ்தன முகுல ரோமவலி லதா
கலாவாலம் குண்ம் குஸுமஶர தேஜோ ஹுதபுஜ:
ரதேர் லீலாகாரம் கிமபி தவ நாபிர் கிரிஸுதே
பித்வாரம் ஸித்தேர் கிரிஶ நயனானாம் விஜயதே                              78

மலையரசன் பெண்ணே ! உன்னுடைய நாபியானது கங்கை நீரின் சுழலா, ஆனால் அசையாமல் இருக்கிறதா ? நகில்களாகிய மொட்டுக்களுடன் கூடிய ரோமவரிசையாகிற கொடியின் கிழங்கு இருக்கும் பாத்தியா ? மன்மதனுடைய ஒளியாகிய அக்கினியின் ஹோமகுண்டமா ? ரதியினுடைய விளையாட்டு வீடா ? பரமசிவனுடைய கண்கள் செய்த தவம் சித்திக்கும் குகையின் துவாரமா ? இன்னதென்று கூறமுடியாததாக அது விளங்குகிறது.

 நாப்யாலவால ரோமாளி லதாபல குசத்வயீ”  – நாபி எனும் பாத்தியிருந்து முளைத்தெழுந்தகொடி போன்ற ரோமவரிசையின் உச்சியில் பழுத்த பழங்களை ஒத்த இரு ஸ்தனங்களை உடையவள் – லலிதா ஸஹஸ்ரநாமம்.

79. மெல்லிய இடையின் அழகு

ஸர்வஜனமோஹனம், இந்திரஜால வித்தை

நிஸர்க்க க்ஷீணஸ்ய ஸ்தன தட ரேண க்லமஜுஷோ
நமன்மூர்த்தேர் நாரீதிலக ஶனகைஸ் த்ருட்யத இவ
சிரம் தே மத்யஸ்ய த்ருடித தடினீ தீர தருணா
ஸமாவஸ்தா ஸ்தேம்னோ வது குஶலம் ஶைலதனயே                      79

பெண்குலத்தின் திலகமான பார்வதியே ! இயற்கையாகவே மெல்லியதும் நகில்களின் பாரத்தினால் வருந்துவதும் அதனால் வளைந்த வடிவுள்ளதும் மெல்ல மெல்ல ஒடிந்துபோவதுபோல் இருப்பதும், இடிந்துபோன நதியின் கரையில் இருக்கும் மரத்திற்கு சமமான நிலையில் நிற்பதுமான இடைக்கு நீண்டகாலம் க்ஷேமம் உண்டாகட்டும்.   

சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்
பென்னம் பெரிய முலையும் முத்தாரமும் பிச்சிமொய்த்த
கன்னங் கரிய குழலும்கண் மூன்றும் கருத்தில்வைத்துத்
தன்னந் தனியிருப் பார்க்கிதுபோலும் தவமில்லையே     — அபிராமியந்தாதி53

80.  இடையில் மூன்று ரேகைகளின் அழகு

மன்மதனை வெல்லும் திறமை, இந்திரஜாலம்

குசௌ ஸத்ய: ஸ்வித்யத் தடகடித ஸூர்ப்பாஸபிதுரௌ
க ஷந்தௌ தோர் மூலே கனக கலஶாபௌ கலயதா
தவ த்ராதும் ங்காதலமிதி வலக்னம் தனுபுவா
த்ரிதாத்தம் தேவி த்ரிவலி லவலீ வல்லிபிரிவ                          80

தேவியே ! பரமேசுவரனுடைய பெருமையை நினைத்த அதே க்ஷணத்தில் உடலுடன் ஒட்டிக்கொண்டிருக்கிற ரவிக்கையை கிழிப்பனவாகவும், தோளின் அடிப்பக்கத்தில் உறைகின்றனவாகவும், பொன்குடங்களைப் போன்ற உனது நகில்களை செய்கின்ற மன்மதனால் உனது இடுப்பை ஒடிந்துபோகாமல் போதுமான வகையில் காப்பதற்கு இருக்கட்டும் என்று இடுப்பில் மூன்று மடிப்புகளாகத் தோன்றும் வள்ளிக் கொடிகளால் மூன்றுதடவை சுற்றிக் கட்டப்பட்டதுபோல் காண்கின்றது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.