ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ  ஸ்லோகம் 75 உரையுடன்

ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ  ஸ்லோகம் 75 உரையுடன்

ஸ்ரீ “அண்ணா” எழுதி சென்னை ஸ்ரீராமகிருஷ்ணமடம் வெளியிட்டுள்ள “ஸௌந்தர்யலஹரீ -பாஷ்யம்” என்ற விளக்க நூலில் இருந்து விளக்கங்களுடன் (சிற்சில இடங்களில், Pandit S Subrahmanya Sastri and T R Srinivasa Ayyangar  இவர்களால் 1937-ம் வருடத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு The Theosophical Publishing House ப்ரசுரித்த The Ocean of Beauty – Soundarya Lahari of Sri Samkara Bhagavatpada என்னும் நூலிலிருந்து எடுத்த ஆங்கில விளக்கங்களுடன்)

 75.  பால் வடிவில் பெருகுவது ஸரஸ்வதியின் பிரவாகம்

கவிபாடும் திறமை

தவ ஸ்தன்யம் மன்யே ரணிரகன்யே ஹ்ருயத:
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வத மிவ
யாவத்யா த்தம் த்ரவிடஶிஶு ராஸ்வாத்ய தவ யத்
கவீனாம் ப்ரௌடானா மஜனி கமனீய: கவயிதா:                                                75

மலையரசன் பெண்ணே ! உன்னுடைய முலைப்பால் இருதயத்திலிருந்து உதித்த அமிருதப்பிரவாகம் போலும், வாக்தேவதையான ஸரஸ்வதியே அவ்வுருக்கொண்டு வந்தாற்போலும், பெருகிறது என்று கருதுகிறேன். ஏனென்றால் கருணை ததும்பும் உன்னால் அளிக்கப்பட்ட உன்னுடைய பாலை அருந்தி திராவிடக்குழந்தை தலைசிறந்த கவிகளுக்குள் மனதைக் கவரும் கவிஞனாக ஆகிவிட்டான் அன்றோ !

 விந்தியமலைக்கு வடக்கே பஞ்ச கௌடர்கள்:

 1. காஷ்மீரில் ஸாரஸ்வதர்
 2. பஞ்சாபில் கான்யகுப்ஜர்
 3. வங்காளத்தில் முக்ய கௌடர்
 4. ஒரிஸ்ஸாவில் உத்கலர்
 5. நேபாளத்திலும் பீஹாரிலும் மைதிலர் (மிச்ரர் எனப்பட்டம் உள்ளவர்)

விந்தியமலைக்கு தெற்கே பஞ்ச திராவிடர்கள்:

 1. ஆந்திரர்
 2. கர்னாடகர்
 3. மஹாராஷ்டிரர்
 4. கூர்ஜரர்
 5. தமிழர் (முக்யத் திராவிடர்)

திரவிடசிசு என்பது யார் ? : 

 1. ஸ்ரீ சங்கரருடைய பரமகுரு கௌடர், சங்கரர் த்ராவிடர். சங்கரர் சிறு குழந்தையாக இருக்கையில் ஒருசமயம் தாயும் தந்தையும் வீட்டில் இல்லாதபோது அழுதுகொண்டிருந்ததால் பார்வதியே வந்து பால் கொடுத்துத் தேற்றியதாக ஒரு வரலாறு உண்டு. ஆனால் சங்கரர் தன்னைப்பற்றியே “திராவிடக்குழந்தை தலைசிறந்த கவிகளுக்குள் மனதைக் கவரும் கவிஞனாக ஆகிவிட்டான்என்று கூறிக்கொள்வாரா என்பது சந்தேகம்.
 1. திரவிடசிசுஎன்றது திருஞானசம்பத்தரைக் குறிக்கும் என்று காமகோடி ஆசாரியரும் பிறரும் கூறுகின்றனர். பார்வதி அவருக்குப் பால் கொடுத்து மறைந்தபின் வாயில் பாலின் அடையாளத்தைப் பார்த்த தாய்தந்தையர் ‘யார் பால் கொடுத்தது’ என்று வினவ, “தோடுடைய செவியன்” என்று அவர் பாடிய வரலாறு இதற்கு ஆதாரம்.
 1. ஸௌந்தர்யலஹரியைத் தமிழில் பாடிய வரப்பிரஸாத்யான கவிராஜ பண்டிதரும், “வருண நன்குறு கவுணீயன் சிறுமதலை அம்புயல் பருகியேஎன்று பிராம்மண குலத்தில் கவுணிய அல்லது கௌண்டின்ய கோத்திரத்தில் பிறந்த ஞானசம்பந்தர் எனவே பொருள்கொண்டு பாடுகிறார். 
 1. Lakshmidhara, Kaivalyaasrama and others maintain that the reference is to the Samkara-Bhagaavatpada himself. The story according to Kaivalyaasrama is: Samkara’s father who was a pious devotee of the Devi, would never fail to visit the local temple every day and after bathing the Devi with milk and doing Puja, was in the habit of returning home with a small quantity of Nirmaalya milk with which the little child was fed every day. When he had to be temporarily absent from his village, he left instructions with his wife that the Puja should be performed by her as usual during his absence. She was carrying out her husband’s mandate, but as she had to keep aloof during her menstrual period, she directed her child, the infant Samkara, to go to the temple and perform Puja in her stead. The child, in his simplicity, was under the impression that the milk was intended to be drunkby the Devi and felt surprised that the Devi would not partake of it. When at the importunity of the child, the Devi drank all the milk, he burst into tears and called upon her to return to him the usual quantity intended for his use. The Devi, out of compassion, suckled the child, whereupon it burst into rhapsodies of praise and returned home singing songs which automatically came out of his mouth. Just then, the child’s father returned from his journey and greeted him with inexpressible joy. The Devi soon appeared to the father in a dream and prophesied a remarkable career for the child blessed by her breast-feeding.
 1. Another account is given in the Malayalam edition of Soundaryalahari by Kantiyur Mahadeva Sastrin, in his commentary on the forty-first stanza,i.e., the last of the Anandalahari He sys that the entire work was by a Siddha of the name of Dravida-sisu, who had it inscribed on the slope of Mount Kailasa and when Samkara-Bhagavatpada paid a visit to the Mount as a pilgrim and was reading the work, the Devi called the attention of the Siddha thereto and commanded him to wipe off the work as it contained profound secrets not to be revealed to mortals. Even before the Siddha carried out the said command, Samkara was able to commit to memory forty-one stanzas at random out of the hundred. Before he could memorize the rest, the entire work had been cleanly wiped out by the Siddha. On his return home, Samkara wrote out from memory the forty-one stanzas, which now farm the first part of the work and composed the other stanzas requisite to make up the one hundred. The difference in style and theme between the two parts is given as a reason for credence being attached to this story of the authorship of the work.
 1. Sri Jnanasambandha, a native os Sirkazhi, was when 3 years old, he was taken to the temple by his father Sivapaadahrudaya, who went to bathe in the water tank and left the child on the ghat. The child, in unfamiliar circumstance, soon began to cry calling out “Mother !, Fathar !’ . Touched by this, Lord Siva of the temple asked his pouse to take the child and feed him with her milk. The child was soon appeased and stood there with milk flowing out of his mouth. On noticing this, the father asked the chiled as to who had suckled him. Whereupon the child burst into a song in praise of Siva and became later in life one of the recognised bards of Tamil hymns (the others being Appar, Sundarar and Manikyavaasagar).
 1. Sri Jnaanasambandha is said to have flourished about twelve centuries ago and was hence possibly a contemporary of Samkara-Bhagavatpada. (or a possibility that Samkara’s period is after the period of Gnanasambandhar, after he and his works have become popular – nytanaya)
 1. The fact that Samkaracharya would not have given such a high testimonial to himself as indicated by the last line of the stanza, but would probably have couched a reference to his capacity as a poet in much milder language, militates against the position taken by Lakshmidhara and others.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.