ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ  ஸ்லோகங்கள் 71 – 74 உரையுடன்

ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ  ஸ்லோகங்கள் 71 – 74 உரையுடன்

ஸ்ரீ “அண்ணா” எழுதி சென்னை ஸ்ரீராமகிருஷ்ணமடம் வெளியிட்டுள்ள “ஸௌந்தர்யலஹரீ -பாஷ்யம்” என்ற விளக்க நூலில் இருந்து விளக்கங்களுடன் (சிற்சில இடங்களில், Pandit S Subrahmanya Sastri and T R Srinivasa Ayyangar  இவர்களால் 1937-ம் வருடத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு The Theosophical Publishing House ப்ரசுரித்த The Ocean of Beauty – Soundarya Lahari of Sri Samkara Bhagavatpada என்னும் நூலிலிருந்து எடுத்த ஆங்கில விளக்கங்களுடன்)

71.  கமலம்போல் சிவந்த கைநகங்களின் காந்தி

லக்ஷ்மீ கடாக்ஷம்

நகானா முத்யோதைர் நவநலின ராம் விஹஸதாம்
கராணாம் தே காந்திம் கதய கதயாம: கதமுமே
கயாசித்வா ஸாம்யம் ஜது கலயா ஹந்த கமலம்
தி க்ரீல்லக்ஷ்மீ சரண தல லாக்ஷா ரஸ சணம்                         71

உமா தேவியே ! நகங்களுடைய சிறந்த ஒளியினால் அன்றலர்ந்த தாமரையின் சிவப்பை ஏளனம் செய்கின்ற உன்னுடைய கரங்களின் காந்தியை எவ்வாறு வருணிப்போம் ? நீயே சொல். அது கஷ்டம். செந்தாமரை ஒருவேளை தன்னிடம் லீலை புரியும் லக்ஷ்மியின் திருவடியில் உள்ள செம்பஞ்சுக் குழம்புடன் சேர்த்தால் எப்படியோ சிறிதளவாவது ஒற்றுமையை அடையலாம்.

 72.  கணபதியும் ஸ்கந்தனும் பால் பருகும் நகில்கள்

தேவியருள் சுரத்தல், யக்ஷிணீவச்யம், இரவில் பயமின்மை

ஸமம் தேவி ஸ்கந் த்விபன பீதம் ஸ்தனயும்
தவேம் ந: கேம் ஹரது ஸததம் ப்ரஸ்னுத முகம்
தாலோக்யா ஶங்காகுலித ஹ்ருயோ ஹாஸஜனக:
ஸ்வகும்பௌ ஹேரம்: பரிம்ருஶதி ஹஸ்தேன ஜடிதி             72

பரதேவதையே ! பால் சுரக்கும் காம்புகளுடன் கூடியதாயும் ஸமகாலத்தில் ஸ்கந்தனும் யானைமுகத்தோனும் பால் குடிப்பதுமான இந்த உன்னுடைய நகில் இரண்டும் எங்களுடைய துன்பத்தை எப்போதும் போக்கடிக்கட்டும். அந்த நகிலை பார்த்து ஸந்தேகத்தால் கலங்கிய உள்ளமுடைய கணபதி அவசரமாக சிரிப்புண்டாகும்படி தன் தலையில் உள்ள கும்பங்களை இருக்கிறதா என்று தன் கையால் தடவிப் பார்த்துக் கொள்கிறார். 

73.  நகில்கள் அல்ல அவை ஞானாமிருத கலசங்கள்

பால் வளர்ச்சி, ஜீவன் முக்தி

அமூ தே வக்ஷோஜா வம்ருதரஸ மாணிக்ய குதுபௌ
ந ஸந்தேஹஸ்பந்தோபதி பதாகே மநஸி ந:
பிந்தௌ தௌ யஸ்மாவிதித வதூஸங் ரஸிகௌ
குமாராவத்யாபி த்விரன க்ரௌஞ்சலனௌ                               73

மலையரசின் வெற்றிக்கொடியே ! உன்னுடைய இந்த நகில்கள் அமிருதரஸம் நிறைந்த ரத்னகலசங்கள். எங்களுக்கு மனதில் அதைப்பற்றிச் சந்தேகம் கொஞ்சம் கூட இல்லை. ஏனென்றால் அவைகளை பருகின்ற யானை முகத்தோனும் க்ரௌஞ்சாசுரனைக் கொன்ற ஸுப்ரஹ்மண்யனும் ஸ்த்ரீஸங்க ரஸத்தை அறியாத குழந்தைகளாகவே இன்றைக்கும் இருக்கிறார்கள். 

 74  மார்பில் விளங்கும் முத்துமாலை

நற்கீர்த்தி

வஹத்யம் ஸ்தம்பேரம னுஜ கும் ப்ரக்ருதிபி:
ஸமாரப்தாம் முக்தாமணிபி ரமலாம் ஹாரலதிகாம்
குசாபோகோ பிம்பாதர ருசிபி ரந்த: ஶலிதாம்
ப்ரதாப வ்யாமிஶ்ராம் புரமயிது: கீர்த்திமிவ தே                                               74

அம்மா ! உன்னுடைய நகில்களின் மத்தியப்பிரதேசம் கஜாசுரனுடைய கும்பத்தில் இருந்து உண்டான சிறந்த முத்துக்களால் ஆக்கப்பட்டதும், குற்றமற்றதும் கோவைப்பழம்போல் சிவந்த உதட்டின் காந்தியால் உள்புறம் விசித்திரமான வர்ணங்களோடு பிரகாசிப்பதாகவும், முப்புரம் அழித்த பரமசிவனுடைய பிரதாபத்தோடு கலந்த கீர்த்தியே மாலையாக வந்ததோ என்று விளங்குவதாகவும் உள்ள கொடிபோன்ற ஹாரத்தை தாங்குகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.