ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ  ஸ்லோகங்கள் 51 – 60 உரையுடன்

ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ  ஸ்லோகங்கள் 51 – 60 உரையுடன்

ஸ்ரீ “அண்ணா” எழுதி சென்னை ஸ்ரீராமகிருஷ்ணமடம் வெளியிட்டுள்ள “ஸௌந்தர்யலஹரீ -பாஷ்யம்” என்ற விளக்க நூலில் இருந்து விளக்கங்களுடன் (சிற்சில இடங்களில், Pandit S Subrahmanya Sastri and T R Srinivasa Ayyangar  இவர்களால் 1937-ம் வருடத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு The Theosophical Publishing House ப்ரசுரித்த The Ocean of Beauty – Soundarya Lahari of Sri Samkara Bhagavatpada என்னும் நூலிலிருந்து எடுத்த ஆங்கில விளக்கங்களுடன்)

51. தேவியின் பார்வையில் எட்டு ரஸங்கள்

ஸர்வஜன வச்யம் 

ஶிவே ச்ருங்காரார்த்ரா ததிதரஜனே குத்ஸனபரா
சரோஷா ங்காயாம் கிரிஶசரிதே விஸ்மயவதீ
ஹராஹுப்யோ பீதா ஸரஸிருஹ ஸௌபாக்யஜனனீ
ஸகீஷு ஸ்மேரா தே மயி ஜனனி த்ருஷ்டி: ஸகருணா               51

தாயே ! சிவனிடத்தில் உன்னுடைய பார்வை காதலின் கசிவு உள்ளதாகவும் அவரைத் தவிர மற்றவர்களிடத்தில் அருவருப்புடையதகவும் கங்கா தேவியிடம் கோபத்துடன் கூடியதாகவும் சிவனுடைய லீலைகளில் வியப்புடையதாகவும் சிவன் அணியும் பாம்புகளிடம் பயம் உடையதாகவும் தாமரையின் அழகுக்கும் அழகு செய்வது போல் சற்றுச் சிவந்திருப்பதால் வீரரஸம் உடையதாகவும் தோழிகளிடத்தில் ஹாஸ்ய ரஸம் உடையதாகவும் என்னிடம் கருணையுடன் கூடியதாகவும் விளங்குகிறது.

 52  மன்மத பாணங்களைப் போன்ற கண்கள்

காமஜயம், காது, கண்களின் ரோக நிவாரணம் 

கதே கர்ணாப்யாம் ருத இவ பக்ஷ்மாணி தததீ
புராம் பேத்துஶ் சித்தப்ரஶம ரஸ வித்ராவண பலே
இமே நேத்ரே கோத்ராரபதி குலோத்தம்ஸ கலிகே
தவாகர்ணாக்ருஷ்ட ஸ்மரஶர விலாஸம் கலயத்:                                    52

மலையரசனான இமவானுடைய குலக்கொழுந்தே ! உன்னுடைய இக்கண்கள் இரண்டும் காதுகள் வரை நீண்டிருப்பதாலும், பாணங்களில் கட்டிய இறகுகளைப் போன்ற இமை மயிர்களை தரிக்கும் காரணத்தாலும் முப்புரம் எரித்த சிவபெருமானுடைய மனத்தின் சாந்தி ரஸத்தைக் கலைப்பதை நோக்கமாகக் கொண்டு காதுவரை இழுக்கப்பட்ட மன்மதபாணத்தின் திறமையை நடித்துக் காட்டுகின்றன.

 இவ்விதம் தேவியினுடைய கண்ணழகைத் தியானம் செய்வதால் இருதயத்தில் உள்ள காமச் சிக்கல் அறுபட்டு ஒழியும்.

53  மும்மூர்த்திகளைச் சிருஷ்டிக்கும் முக்குணங்களைப் படைத்த கண்கள்

தேவி பிரத்யக்ஷம், ஸகல லோக வச்யம் 

விக்த த்ரைவர்ண்யம் வ்யதிகரித லீலாஞ்ஜனதயா
விபாதி த்வந்நேத்ர த்ரிதய மி மீஶானயிதே
புன: ஸ்ரஷ்டும் தேவான் த்ருஹிண ஹரி ருத்ரானு ப்ரதான்
ரஜ: ஸத்வம் பிப்ரத் தம இதி குணானாம் த்ரயமிவ                                 53

பரமசிவனுடைய அன்பிற்கு உரியவளே! அழகுக்காக இட்டுக் கொள்ளப் பட்ட மையினால் மூன்று வர்ணங்களை இன்னும் தெளிவாகப் பிரித்துக் காட்டும் இந்த உன்னுடைய கண்கள் மூன்றும் பிரளயகாலத்தில் உன்னிடம் ஒடுங்கிய பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்ற தேவர்களை மறுபடியும் தோற்றுவிப்பதற்கு ரஜோகுணம், ஸத்துவகுணம், தமோகுணம் என்ற மூன்று குணங்களையும் தரித்துக் கொண்டாற்போல் விளங்குகிறது.

 

54  மூன்று புண்ணிய நதிகளைப் போன்ற கண் ரேகைகள்

ஸர்வ பாப நிவ்ருத்தி, உபஸ்தரோக நிவாரணம் 

பவிர்த்ரீ கர்த்தும் ந: பஶுபதி பராதீன ஹ்ருதய
யாமித்ரைர் நேத்ரை ரருண வல ஶ்யாம ருசிபி:
: ஶோணோ ங்கா தபன தனயேதி த்ருவமமும்
த்ரயாணாம் தீர்த்தானா முபநயஸி ஸம்பேத மநம்                             54

பசுபதிக்கு ஆதீனமான உள்ளம் படைத்தவளே ! தயைக்குக் கூட்டாளிகளும் சிவப்பு, வெளுப்பு, கறுப்பு என்ற வர்ணங்களைக் கொண்டவைகளுமான உனது கண்களால் மேற்கு நோக்கிச் செல்வதும் சிவந்ததுமான சோணபத்ரா  என்ற ஆறு, வெளுப்பான கங்கை, சூரியபுத்திரியாகவும் கறுப்பு வர்ணம் கொண்டதாகவும் விளங்கும் யமுனை என்ற மூன்று புண்ணிய நதிகளின் ஸங்கமமாகிய பாவத்தையெல்லாம் போக்கும் இக்கூட்டுறவை உன்னைக் காணும்எங்களை புனிதமாக்குவதற்காக ஏற்படுத்தியிருக்கிறாய் என்பது நிச்சயம். 

55  கண்கள் முடாமல் இருக்கும் காரணம்

ரக்ஷிக்கும் சக்தி; அண்டரோக நிவாரணம்

நிமேஷான் மேஷாப்யாம் ப்ரளய முயம் யாதீதீ
தவேத்யாஹு: ஸந்தோ ரணிர ராஜன்யதனயே
த்வதுன்மேஷாஜ்ஜாதம் ஜகதித மஶேஷம் ப்ரளயத:
பரித்ராதும் ஶங்கே பரிஹ்ருத நிமேஷாஸ் தவ த்ருஶ:              55

பர்வதராஜ குமாரியே உன்னுடைய கண்கள் மூடுவதாலும் திறப்பதாலும் உலகம் பிரலத்தையும் சிருஷ்டியையும் அடைகிறது என்று சான்றோர் கூறுகின்றனர். உனது கண்கள் திறப்பதால் உண்டான இந்த உலகம் முழுவதையும் பிரளயத்திலிருந்து அழியாமல் காப்பதற்காக உன்னுடைய கண்கள் மூடுதல் இல்லாமல் இருக்கின்றன என்று நான் ஊகிக்கிறேன்.

 தேவதைகள் கண்கொட்டுவதில்லை. பரதேவதை இயற்கையாகவே கண்கொட்டாமல் இருந்தபோதிலும் அது உலக ரக்ஷணத்துக்காக என்று இங்கே உபசரித்துக் கூறப்படுகிறது.

56  அழகில் மீன்களையும், நீலோத்பவத்தையும் வெல்லும் கண்கள்

பந்தவிமோசனம், நேத்ரதோஷ நிவாரணம் 

தவாபர்ணே கர்ணே ஜபநயன பைஶுன்ய சகிதா
நிலீயந்தே தோயே நியத மநிமேஷா: ஶபரிகா:
இயஞ் ச ஸ்ரீர் பத்தச்ச புடகவாடம் குவலயம்
ஜஹாதி ப்ரத்யூஷே நிஶி ச விகடய்ய ப்ரவிஶதி                                       56

யாருக்கும் கடன் படாததால்அபருணாஎனப் பெயர்பெற்றவளே ! உன்னுடைய காதில் மெதுவாக ஓதுவதுபோல் கண்கள் காணப்படுவதால் தங்களைப் பற்றிக் கோள்சொல்வதாக அச்சம் அடைந்து பெண்மீன்கள் கண்களைமூடாமல் பார்த்துக் கொண்டே நீரில் மறைந்து கொண்டிருக்கின்றன என்பது நிச்சயம். இந்த கண்ணின் அழகாகிய தேவதையும் காலையில் இதழ்கள் மூடிக்கொள்வதால் கதவு சாத்தப் பட்டது போன்ற கருநெய்தல் பூவை விட்டுவிடுவதுபோலும் இரவில் அதைத் திறந்து கொண்டு மீண்டும் புகுவது போலும் தோன்றுகிறது.

மீன்களைப்போன்ற கண்ணழகு படைத்த மூர்த்தி விசேஷம் மதுரையில் உள்ளது. ஆகையால் அங்கே மீனாக்ஷி கோவிலில் பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வாழ்வதில்லை எனக் கூறுவர்.

அபர்ணே : (1) பக்தர்களிடம் கடன்படாமல் இருப்பவள்; (2) அம்பாள் பார்வதியாகத் தவம் செய்தபோது (பர்ணம்) இலையைக்கூடச் சாப்பிடாமல் இருந்ததால், ‘அபர்ணா”

57  எங்கும் சமமாகப் பிரகாசிக்கும் நிலவு போன்ற கடாக்ஷம்

ஸகல ஸௌபாக்கியம் 

 

த்ருஶா த்ராகீயஸ்வா லித நீலோத்பல ருசா
வீயாம்ஸம் தீனம் ஸ்நபய க்ருபயா மாமபி ஶிவே
அநேனாயம் ன்யோ வதி ந ச தே ஹானி-ரியதா
வனே வா ஹர்ம்யே வா ஸமகர நிபாதோ ஹிமகர:                                57

மங்களஸ்வரூபியே ! தீர்க்கமானதும் சற்று மலர்ந்த கருநெய்தல்போல் பிரகாசிப்பதுமான உன் பார்வையால் உனக்கு வெகு தூரத்தில் இருக்கும் ஏழையாகிய என்னையும் கூட கருணையால் நீராட்டி வை. அதனால் இவன் செல்வ வானானாக ஆகிவிடுவான். இதனால் உனக்கு ஒரு நஷ்டமும் இல்லை. சந்திரன் காட்டிலாயினும் நாட்டிலாயினும் நாட்டிலுள்ள மாளிகையிலாயினும் தன் கிரணங்களைச் சமமாகவே பொழிகிறான், அதனால் சந்திரனுக்கு என்ன நஷ்டம் ?

58  மன்மதபாணம் போன்ற கடைக்கண் பார்வை

காமஜயம், ஸகலரோக நிவிருத்தி 

அராலம் தே பாலீயுல மராஜன்யதனயே
ந கேஷா மாத்தே குஸுமஶர கோண்ட குதுகம்
திரஶ்சீனோ யத்ர ஶ்ரவணபத முல்லங்க்ய விலஸன்
அபாங் வ்யாஸங்கோ திசதி ஶரஸந்தாதிஷணாம்                       58

 பர்வதராஜகுமாரியே ! உன்னுடைய வளைந்த காதுக்கும் கண்ணுக்கும் இடையே உள்ள பிரதேசம் இரண்டும் புஷ்ப பாணனான மன்மதனுடைய வில் என்ற நம்பிக்கையை யாருக்குத்தான் உண்டாக்காது ? அந்தப் பிரதேசத்தில் குறுக்காகச் செல்லுகின்ற கடைக்கண் பார்வை காது வழியாக ஊடுருவிப் பாய்வதாய் விளங்கிக்கொண்டு பாணம் தொடுக்கப்பட்டுள்ளது என்ற தோற்றத்தை உண்டாக்குகிறது.

தனந்தரும் கல்வி தருமொரு நாளுந் தளர்வறியா
மனம்தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம்தரும் நல்லன வெல்லாம் தரும்அன்ப ரென்பவர்க்கே
கனம்தரும் பூங்குழ லாளபிராமி கடைக் கண்களே- அபிராமியந்தாதி 69 

59   மன்மதனுடைய ரதம் போன்ற முகம்

ஸர்வஜன வச்யம் 

ஸ்புரத்ண்டாபோக ப்ரதிபலித தாடங்க யுளம்
சதுஶ்சக்ரம் மன்யே தவமுகமிம் மன்மதரதம்
யமாருஹ்ய த்ருஹ்யத் யவனிரத மர்க்கேந்து சரணம்
மஹாவீரோ மார: ப்ரமதபதயே ஸஜ்ஜிதவதே                                           59

கண்ணாடிபோல் பிரகாசிக்கிற கன்னப்பிரதேசத்தில் பிரதிபலிக்கின்ற இரண்டு தாடங்கங்களுடன் கூடின உன்னுடைய இந்த முகமானது நாலு சக்கரங்களுடன் கூடின மன்மதனின் தேர் என்று கருதுகிறேன். அதில் ஏறிக்கொண்டு மன்மதன் மஹாவீரனாக விளங்குபவனாய் சூரிய, சந்திரர்களைச் சக்கரங்களாகக் கொண்ட பூமியாகிய தேரில் போருக்குச் செல்லும் பிரமத கணங்களுக்கு அதிபதியான பரமேசுவரனையே வஞ்சிக்க எண்ணி எதிர்க்கிறான்.

60  மதுரமான சொல்லோசை

வாக்குப்பலிதம், ஊமையையும் பேசவைப்பது

ஸரஸ்வத்யா: ஸூக்தீ ரம்ருத லஹரீ கௌஶலஹரீ
பிந்த்யா: ஶர்வாணி ஶ்ரவண சுலுகாப்யா மவிரலம்
சமத்கார ஶ்லாகாசலித ஶிரஸ: குண்ணோ
ஜணத்காரைஸ் தாரை: ப்ரதிவசன மாசஷ்ட இவதே                               60

பரமசிவபத்தினியே ! அமுதப்பெருக்கின் இனிமையைத் தனதாக்கிக்கொண்ட உன்னுடைய சொல்லமுதத்தை காதுகளாக்ய பாத்திரங்களால் இடைவிடாது பருகுபவரும் அப்பேச்சின் திறமையைப் போற்றும் வகையில் தலையை அசைப்பவருமான ஸரஸ்வதீதேவியினுடைய காதணிகள் ‘ஜணத்’, ‘ஜணத்’ என்ற உயர்ந்த ஒலியால் ‘ஆம், ஆம்’ என்று ஆமோதிப்பை சொல்லுவனபோல் தோன்றுகின்றன.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.