ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ  ஸ்லோகம் 34 உரையுடன்

ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ  ஸ்லோகம் 34 உரையுடன்

ஸ்ரீ “அண்ணா” எழுதி சென்னை ஸ்ரீராமகிருஷ்ணமடம் வெளியிட்டுள்ள “ஸௌந்தர்யலஹரீ -பாஷ்யம்” என்ற விளக்க நூலில் இருந்து விளக்கங்களுடன் (சிற்சில இடங்களில், Pandit S Subrahmanya Sastri and T R Srinivasa Ayyangar  இவர்களால் 1937-ம் வருடத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு The Theosophical Publishing House ப்ரசுரித்த The Ocean of Beauty – Soundarya Lahari of Sri Samkara Bhagavatpada என்னும் நூலிலிருந்து எடுத்த ஆங்கில விளக்கங்களுடன்)

34.     சேஷசேஷீபாவம்

அன்னியோன்னிய ஸமரஸ வளர்ச்சி

ஶரீரம் த்வம் ஶம்போ: ஶஶி மிஹிர வக்ஷோருஹ யும்
தவாத்மானம் மன்யே பகவதி நவாத்மான மனம்
அத: ஶேஷ: ஶேஷீத்யய முய ஸாதாரணதயா
ஸ்த்தித: ஸம்ந்தோ வாம் ஸமரஸ பரானந் பரயோ:             34

பரதேவதையே ! சந்திரசூரியர்களை நகில்களாக உடைய நீ பரமசிவனுக்கு உடல் என்றும் மாசற்ற ஒன்பது வ்யூஹ ஸ்வரூபியான சிவனை உன்னுடைய உடல் என்றும் மனக்கண்ணால் காண்கிறேன். ஆகையால் உடைமை, உடையவர் என்ற இந்த உறவு ஸமரஸப்பட்ட ஆனந்தபைரவர், ஆனந்தபைரவி இருவருக்கும் ஸமமாக நிலை பெற்றுள்ளது.

சிவனின் ஒன்பது வியூஹஸ்வரூபி: காலம், குலம், நாமம், ஞானம், சித்தம், நாதம், பிந்து, கலை, ஜீவன் முதலியன.

சேஷசேஷீ: உலகின் சிருஷ்டி, ஸ்திதி, லயங்களின் போது சிவன், சக்தி இருவருடைய பிரயத்தனமும் இருந்தபோதிலும் அதில் ஆனந்தபைரவி ஆனந்தபைரவருடன் சிவன் சேஷித்தன்மை அடைந்தவராகவும், சக்தி சேஷத்தன்மை அடைந்தவளாகவும் ஆகிறார்கள். இப்படி இருவருக்கும் சேஷசேஷீ பாவம் ஸமானம் ஆகிறது. சிவனுக்கு ஸமமாக சிவனுக்கு ‘ஸமய:’ என்றும் சக்திக்கு ‘ஸமயா’ என்றும் பெயர்.

இந்த சுலோகத்தை ஜபம் செய்துவரும் குடும்பங்களில் ஸ்த்ரீ புமான்களுக்குப் பரஸ்பரம் அன்யோன்ய பாவம் த்ருடமாகும். வேதோக்த கர்மாக்களைச் செய்யும் காலங்களில் புருஷர்களுக்குப் பிராதான்யமும் குடும்ப விஷயங்களில் ஸ்த்ரீகளுக்குப் பிராதான்யமும் இருப்பது அவசியம். இப்படி ஸமரஸத்துடன் வாழும் கிருஹஸ்தர்கள் ஈசுவர அனுக்கிரகத்தால் ஞானத்தைப் பெற்று மோக்ஷத்தை அடையலாம்.         –  தேதியூர் சுப்ரஹ்மண்ய சாஸ்திரி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.