ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ  ஸ்லோகம் 21 உரையுடன்

ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ  ஸ்லோகம் 21 உரையுடன்

ஸ்ரீ “அண்ணா” எழுதி சென்னை ஸ்ரீராமகிருஷ்ணமடம் வெளியிட்டுள்ள “ஸௌந்தர்யலஹரீ -பாஷ்யம்” என்ற விளக்க நூலில் இருந்து விளக்கங்களுடன் (சிற்சில இடங்களில், Pandit S Subrahmanya Sastri and T R Srinivasa Ayyangar  இவர்களால் 1937-ம் வருடத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு The Theosophical Publishing House ப்ரசுரித்த The Ocean of Beauty – Soundarya Lahari of Sri Samkara Bhagavatpada என்னும் நூலிலிருந்து எடுத்த ஆங்கில விளக்கங்களுடன்)

21.  மின்னல் கொடி போன்ற வடிவம்

ஸர்வ வசீகரம், ஸர்வாஹ்லாதகரம்

தடில்லேகாதன்வீம் தபனஶஶி வைஶ்வானரமயீம்
நிஷண்ணாம் ஷண்ணாமப்யுபரி கமலாநாம் தவகலாம்
மஹாபத்மாடவ்யாம் ம்ருதித மல மாயேன மனஸா
மஹாந்த: பஶ்யந்தோ தததி பரமாஹ்லாத லஹரீம்                               21

மின்னல்கொடி போல் ஶூக்ஷ்மமான தேஜோரூபம் உடையதும் சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய வடிவங்களில் பிரகாசிப்பதும் ஆறு ஆதார சக்கரங்களுக்கும் மேலே தாமரைக்காடு போன்ற ஸஹஸ்ரார சக்கரத்தில் நிலைபெறுவதுமான உன்னடைய “ஸாதா” எனப்படும் கலையை காமம் முதலிய அழுக்குகளும் அவித்தை முதலிய மயக்கங்களும் நீங்கிய மனத்தினால் மகான்கள் கண்டு அநுபவிப்பவர்களாய் அலையலையாக வரும் அளவுகடந்த ஆனந்தத்தை அடைகிறார்கள்.

குண்டலினீசக்தி மூலாதாரத்தில் இருந்து படிப்படியாக மேலேறி வரும்போது, ஆக்ஞாசக்கரத்தில் அதிக நேரம் தாமதிக்காமல், மின்னல்கொடிபோல் காட்சியளித்து விரைவில் ஸஹஸ்ராரத்தில் பரமசிவனை அடைகிறாள். ஸஹஸ்ராரத்தில் நிலையாக்க் குளிர்ந்து பிகாசிப்பதால் “ஸ்திர ஸௌதாமினீ” என்றும், ஆக்ஞைசக்கரத்தில் நொடி நேரம் பிகாசிப்பதால் “க்ஷணஸௌதாமினீ” என்றும் கூறப்படுகிறாள்.

ஷட்கோண சக்கரத்தின் மத்தியில் பிந்துவை எழுதி அதன்மேல் ஐந்து முகமுள்ள தீபத்தை ஏற்றிவைத்து தேவியை ஆவாஹனம் செய்து பூஜித்து ஆயிரம் தடவையோ முன்னூறு தடவையோ நூறு தடவையோ இந்த்ச் சுலோகத்தை தினந்தோறுமோ வெள்ளிக்கிழமை பௌர்ணமி போன்ற விசேஷ நாட்களிலோ பாராயணம் செய்தல் உபாஸனை செய்யும் வழிகளில் ஒன்றாகும். ஆவாஹன மந்த்ரம்: மஹாபத்ம வனாந்தஸ்தே காரணானந் விக்ரஹே | ஸர்வபூதஹிதே மா: ஏஹ்யேஹி பரமேஶ்வரி ||

 

Advertisements

2 thoughts on “ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ  ஸ்லோகம் 21 உரையுடன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.