ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ  ஸ்லோகம் 10 உரையுடன்

ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ  ஸ்லோகம் 10 உரையுடன்

ஸ்ரீ “அண்ணா” எழுதி சென்னை ஸ்ரீராமகிருஷ்ணமடம் வெளியிட்டுள்ள “ஸௌந்தர்யலஹரீ -பாஷ்யம்” என்ற விளக்க நூலில் இருந்து விளக்கங்களுடன் (சிற்சில இடங்களில், Pandit S Subrahmanya Sastri and T R Srinivasa Ayyangar  இவர்களால் 1937-ம் வருடத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு The Theosophical Publishing House ப்ரசுரித்த The Ocean of Beauty – Soundarya Lahari of Sri Samkara Bhagavatpada என்னும் நூலிலிருந்து எடுத்த ஆங்கில விளக்கங்களுடன்)

10.  மூலாதாரம்

சரீர சுத்தி, வீர்ய விருத்தி

ஸுதாதாராஸாரைச் சரணயுலாந்தர் விலிதை:
ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ புனரபி ரஸாம்னாய மஹஸ:
அவாப்ய ஸ்வாம் பூமிம் புநித்த்யுஷ்ட வலயம்
ஸ்வமாத்மானம் க்ருத்வா ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி  10

திருவடிகள் இரண்டின் இடையிலிருந்து பெருகும் அமிருத தாரையின் பிரவாஹத்தால் ஐம்பூதங்களால் ஆன உடலிலுள்ள நாடிகள் எல்லாவற்றையும் நனைப்பவளாய் அமிருத கிரணங்களைப் பொழியும் சந்திர மண்டலத்தில் இருந்து, உனது இயற்கையான இருப்பிடமாகிய மூலாதாரத்தை மறுபடியும் அடைந்து பாம்பைப்போல் குண்டலவடிவாக உன்னுடைய உருவத்தை செய்துகொண்டு சிறுதுவாரம் உடைய மூலாதார குண்டத்தில் உறங்குகிறாய்.

முன் சுலோகத்தில் தேவியின் ஆரோஹணம் சொல்லப்பட்டது, இங்கே அவரோஹணம் சொல்லப்படுகிறது. ஸஹஸ்ராரத்தில் பரமசிவனுடன் கூடியிருந்து ஆனந்த வெள்ளத்தைப் பெருக்கி அதனால் உடலிலுள்ள எல்லா நாடிகளையும் நனைத்துவிட்டு மீண்டும் மூலாதாரத்திற்குத் தேவி வருகிறாள்.

குலகுண்டம் என்பதி கு என்பது பிருதிவி தத்துவம். அது மூலாதாரத்தில் லயம் அடைவதால் மூலாதார சக்கரம் குலகுண்டம் எனப்படும். அதன் நடுவில் தாமரையில் இருப்பதுபோல் ஒரு கிழங்கு இருப்பதாகவும் அதன் நடுவில் ஒரு ஸூக்ஷ்மமான துவாரம் இருப்பதாகவும், அதில் தலையை வைத்துக் கொண்டு மூன்றரை வட்டவடிவில் குண்டலம் இட்டுக்கொண்டு தாமரை  நூல்போல் மெல்லிய பிழம்பு வடிவில் குண்டலினி சக்தி உறங்குவதாகவும் கூறப்படுகிறது.

பக்தன் பத்மாஸனத்தில் அமர்ந்து கும்பகப் பிராணாயாமம் செய்து ஸ்ரீவித்யா பீஜத்தை மானஸிகமாக ஆவிருத்தி செய்தால் குண்டலினி சக்தி உறக்கம் விட்டு எழுந்து ஆறு சக்கரங்களையும் கடந்து ஸஹஸ்ராரத்தில் திவ்யரூபத்தோடு காட்சியளிப்பாள்.

Having in-filled the pathway of the Naadi-s with the streaming shower of nectar flowing from Thy pair of feet, having resumed Thine own position from out of the resplendent Lunar regions, and Thyself assuming the form of a serpent of three-and-a-half coils, sleepest Thou in the hollow of the Kulakundaa.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.