ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ  ஸ்லோகம் 1 உரையுடன்

ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 1 உரையுடன்

ஸ்ரீ “அண்ணா” எழுதி சென்னை ஸ்ரீராமகிருஷ்ணமடம் வெளியிட்டுள்ள “ஸௌந்தர்யலஹரீ-பாஷ்யம்” என்ற விளக்க நூலில் இருந்து விளக்கங்களுடன் (சிற்சில இடங்களில், Pandit S Subrahmanya Sastri and T R Srinivasa Ayyangar இவர்களால் 1937-ம் வருடத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு The Theosophical Publishing House ப்ரசுரித்த The Ocean of Beauty – Soundarya Lahari of Sri Samkara Bhagavatpada என்னும் நூலிலிருந்து எடுத்த ஆங்கில விளக்கங்களுடன்)

1. பராசக்தியின் ஏற்றம்

ஸர்வ விக்ன நாசமும் ஸகலகார்ய ஸித்தியும்

ஶிவ ஶக்த்யா யுக்தோ யதி ஶக்த: ப்ரவிதும்
ந சேதேவம் தேவோ நகலு குஶ’ல ஸ்பந்திதுமபி
அதஸ்த்வா மாராத்த்யாம் ஹரிஹர விரிஞ்சாதிபிரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கத மக்ருத புண்ய: ப்ரவதி: 1

மங்களமூர்த்தியான மஹாதேவன் பராசக்தியாகிய உன்னுடன் கூடினவராக இருந்தால் மட்டுமே பிரபஞ்சத்தை ஆக்குவதற்குத் திறமையுள்ளவர் ஆவார். அவ்வாறு கூடியில்லாவிட்டால் அசைவதற்குக்கூட திறமை உடையவராக ஆவதில்லையன்றோ ? ஆகையால் விஷ்ணு, ருத்ரன், பிரம்மா முதலியவர்களாலும் பூஜித்தற்குரிய உன்னை புண்ணியம் செய்யாதவன் வணங்குவதற்கோ அல்லது துதிப்பதற்கோ எங்ஙனம் தகுதியுடையவனாவான் ?

குண்டலினி சக்தியினின்று பிரிந்தால் சிவனும் சவம் போல் ஆகிறான். – தேவி பாகவதம்.

கண்ணிய(து) உன்புகழ் கற்ப(து)உன் நாமம் கசிந்துபத்தி
பண்ணிய(து) உன்இரு பாதாம் புயத்தில் பகல்இரவா
நண்ணிய(து) உன்னை நயந்தோர் அவையத்து நான்முன் செய்த
புண்ணியம் ஏ(து)என்அம் மேபுவி ஏழையும் பூத்தவளே – அபிராமி அந்தாதி 12

Only when brought into union with the Sakti would Siva acquire the power of assuming the form of Pranava , the embodied form of Naadaa, etc. assuming the stages of Paraa, Pachyanti, etc. wherefrom originate the Svara-s, Varna-s, Pada-s, and Vaakya-s galore. If not, the Deva becomes utterly incapable of producing the Pranava, becoming dumbfounded.

While so, how dares one, who has acquired no merit, either to salute or to praise Thee (of the form of Pranava), O Goddess! that art worthy of being adored by

 1. Hari, Hara and Virincha – as the deities of the components of Pranava;
 2. Agni, Vaayu and Surya – as their Rishis:
 3. Gaayatri, Trishtub and Jagati – their meters:
 4. Rakta, Sukla and Krsna – as their colours;
 5. Jaagrat, Svapna and Susupti – their states;
 6. Bhumi, Antarika and Svarga – their seats;
 7. Udaatta, Anudaatta ands Svarita – their Svara-s;
 8. Rk, Yajus and Saman – their Veda-s;
 9. Gaarhapatya, Aahavaniya and Daksina – their Agni-s;
 • Praahna, Madhyaahna and Aparaahna – their Kaalaa-s;
 • Sattva, Rajas and Tamas – their Guna-s;
 • Srsti, Sthiti and Samhaara – their functions;

All these standing in the order appropriate to them.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.