30 சகல நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபட

சகல நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபட

திருமுறை: 1/62 பண்: பழந்தக்கராகம் இராகம்: ஆரபி, சுத்த சாவேரி
இறைவர்: கோளிலிநாதர்  இறைவியார்: வண்டமர்பூங்குழலி

நாள்ஆய போகாமே நஞ்சு அணியும் கண்டனுக்கே
ஆள் ஆய அன்பு செய்வோம் மட நெஞ்சே அரன்நாமம்
கேளாய் நம் கிளைகிளைக்கும் கேடுபடாத் திறம் அருளிக்
கோள்ஆய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே                                 1

ஆடுஅரவத்து அழகுஆமை அணிகேழல் கொம்பு ஆர்த்த
தோடுஅரவத்து ஒருகாதன் துணைமலர்நல் சேவடிக்கே
பாடுஅரவத்து இசைபயின்று பணிந்து எழுவார்தம் மனத்தில்
கோடரவம் தீர்க்குமவன் கோளிலி எம்பெருமானே                               2

நன்றுநகு நாள்மலரால் நல்இருக்கு மந்திரம்கொண்டு
ஒன்றி வழிபாடு செயல் உற்றவன்தன் ஓங்கு உயிர்மேல்
கன்றிவரு காலன் உயிர்கண்டு அவனுக்கு அன்று அளித்தான்
கொன்றைமலர் பொன்திகழும் கோளிலி எம்பெருமானே                   3

வந்த மணலால் இலிங்கம் மண்ணியின் கண் பால்ஆட்டும்
சிந்தைசெய்வோன்தன் கருமம் தேர்ந்து சிதைப்பான் வரும்அத்
தந்தைதனைச் சாடுதலும் சண்டீசன் என்று அருளிக்
கொந்து அணவும் மலர்கொடுத்தான் கோளிலி எம்பெருமானே        4

வஞ்ச மனத்து அஞ்சு ஒடுக்கி வைகலும்நல் பூசனையால்
நஞ்சு அமுதுசெய்து அருளும்நம்பி எனவே நினையும்
பஞ்சவரில் பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்து உகந்தான்
கொஞ்சுகிளி மஞ்சுஅணவும் கோளிலி எம்பெருமானே                          5

தாவியவன் உடனிருந்தும் காணாத தற்பரனை
ஆவிதனில் அஞ்சு ஒடுக்கி அங்கணன் என்று ஆதரிக்கும்
நா இயல்சீர் நமிநந்தியடிகளுக்கு நல்குமவன்
கோ இயலும் பூ எழுகோல் கோளிலி எம்பெருமானே                               6

கல்நவிலும் மால்வரையான் கார்திகழும் மாமிடற்றான்
சொல்நவிலும் மாமறையான் தோத்திரம்செய் வாயின் உளான்
மின்நவிலும் செஞ்சடையான் வெண்பொடியான் அங்கையினில்
கொல்நவிலும் சூலத்தான் கோளிலி எம்பெருமானே                               7

அந்தரத்தில் தேர்ஊரும் அரக்கன்மலை அன்று எடுப்பச்
சுந்தரத்தன் திருவிரலால் ஊன்ற அவன் உடல் நெரிந்து
மந்திரத்த மறைபாட வாள் அவனுக்கு ஈந்தானும்
கொந்து அரத்த மதிச் சென்னிக் கோளிலி எம்பெருமானே                   8

நாணம்உடை வேதியனும் நாரணனும் நண்ண ஒணாத்
தாணுஎனை ஆள்உடையான் தன் அடியார்க்கு அன்புடைமை
பாணன்இசை பத்திமையால் பாடுதலும் பரிந்து அளித்தான்
கோணல் இளம்பிறைச் சென்னிக் கோளிலி எம்பெருமானே                9

தடுக்கு அமரும் சமணரொடு தர்க்கசாத்திரத்தவர் சொல்
இடுக்கண் வரும் மொழிகேளாது ஈசனையே ஏத்துமின்கள்
நடுக்கம்இலா அமருலகம் நண்ணலும் ஆம் அண்ணல்கழல்
கொடுக்ககிலா வரம்கொடுக்கும் கோளிலி எம்பெருமானே                10

நம்பனைநல் அடியார்கள் நாம் உடைமாடு என்றுஇருக்கும்
கொம்பனையாள் பாகன் எழில் கோளிலி எம்பெருமானை
வம்புஅமரும் தண்காழிச் சம்பந்தன் வண் தமிழ்கொண்டு
இன்புஅமர வல்லார்கள் எய்துவர்கள் ஈசனையே                                      11

 

திருச்சிற்றம்பலம்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.