மனதை விட்டு அகலாத மாமனிதர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி

Dr.APJ.Abdul Kalam

1931 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் 15 ஆம் நாளில் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாகவும் இராமநாதபுரம் மாவட்டத்தில்
ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த
இந்தியாவின் சாதனையாளர்
எங்கள் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்கள் …
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி
தொழில்நுட்ப வல்லுநர்
மிகப்பெரிய பொறியியளாலர்
இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர்
இந்திய ஏவுகணை நாயகன்
இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை
அனைத்து வயது மாணவர்களுக்கும் மிகச்சிறந்த ஆசிரியர்
அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர்
வருங்கால இளைஞர்களின் எழுச்சி நாயகன்
எதிர் கால கனவு நாயகன்
என்று பல புனைப்பெயர்களுக்கு சொந்தக்காரர்
எங்கள் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்கள் …
அவரது உழைப்பை பாராட்டி வழ‌ங்கப்பட்ட விருதுகள் பல‌
1981 ‍ம் ஆண்டில் பத்ம பூஷன்
1990 ம் ஆண்டில் பத்ம விபூஷன்
1997 ம் ஆண்டில் பாரத ரத்னா
1997 ம் ஆண்டில் தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது
1998 ம் ஆண்டில் வீர் சவர்கார் விருது
2000 ம் ஆண்டில் ராமானுஜன் விருது
2009 ம் ஆண்டில் சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
2009 ம் ஆண்டில் ஹூவர் மெடல்
2012 ம் ஆண்டில் சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது
என்று பல விருதுகளுக்கு சொந்தக்காரர்
எங்கள் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்கள் …
அவர் தன் குடும்ப ஏழ்மை நிலையை தாண்டிச்சென்று பல கஷ்டங்களை கடந்து வாங்கிய
பட்டங்கள் பல‌
2007ம் ஆண்டில் அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 ம் ஆண்டில் கிங் சார்லஸ்-II பட்டம்
2008 ம் ஆண்டில் பொறியியல் டாக்டர் பட்டம்
2010 ம் ஆண்டில் பொறியியல் டாக்டர் பட்டம்
2012 ம் ஆண்டில் சட்டங்களின் டாக்டர்
என்று பல பட்டங்களுக்கு சொந்தக்காரர்
எங்கள் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்கள் …
ஏராளமான விருதுகளும் பல பட்டங்களும் பெற்ற போதும்
இந்திய அரசு மாளிகையில் பல ஆண்டு காலம் வாழ்ந்த போதும்
தன் ஏழ்மை நிலையில் இருந்து கடைசிவரை வாழ்ந்து காட்டியவர்
எங்கள் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்கள் …
எழுத்துலகினில் அவரின் படைப்புக்கள் பல‌
அக்னி சிறகுகள்
இந்தியா 2020
எழுச்சி தீபங்கள்
அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை
என்று பல நூல்களை எழுதி அவைகளின் மூலமும்
இளைஞர்களின் மனதில் எழுச்சியை தூண்டி விட்டவர்
எங்கள் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்கள் …

கடைசி வரை பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து நாட்டின் நன்மைக்காக உழைத்தவர்..
தனக்கென்று ஒரு வீடு கூட அமைத்துக்கொள்ளாதவர்..
யாரிடமும் எந்த பொருளும் பரிசாக பெற்றுக்கொள்ளாதவர்..
எந்த சூழ்நிலையில் எங்கு வாழ்ந்தாலும் தன் குணம் மாறாத உன்னதமான மாமனிதர்..
கனவு காணுங்கள் அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள் என்னும் வாக்கியத்தை
இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்யும் படி வாழ்ந்து காட்டியவர்..
எங்கள் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்கள் …
இப்படி உலகிற்க்கு ஒரு தனிமனிதனாக இளைய தலைமுறைக்கு முன் மாதிரியாக வாழ்ந்த எங்கள் அப்துல் கலாம் அய்யா அவர்கள்
ஜூலை 27, 2015 ஆம் நாளில் ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் மாணவர்கள் மத்தியில் மாணவ‌ர்களுக்காக பேசிக்கொண்டிருந்தபோதே அவரை படைத்தவன் அழைத்துக்கொண்டான்.
மாணவ‌ர்களுக்காகவே வாழ்ந்து மாணவ‌ர்களுடனே
தன் உயிர் பிரிந்தார் எங்கள் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்கள் …
சரித்திர நாயகனே,,
சரித்திரத்தில் முதல் முறையாக ஒரு விண்கலம் பூமிக்கு கீழே ஏவப்பட்டது!!!
பிறப்பது ஒரு ச‌ம்பவமாக இருக்கலாம்
ஆனால்
இறப்பது ஒரு சரித்திரமாக
இருக்க வேண்டும்…
என்கின்ற தன் வரிகளுக்கு உதாரணமாக தன் வாழ்க்கையை வாழ்ந்து தன் மரணத்தை கூட சரித்திரமாக்கியவர்
எங்கள் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்கள் …
காந்தியடிகள் எங்களுக்கு தாத்தா என்றால்
நேஹரு எங்களுக்கு மாமா என்றால்
எங்கள் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்கள் எங்களுக்கு தந்தை …
ஐயா, நீங்கள் எங்களை விட்டு சென்று விட்டதாக சொல்கிறார்கள் இல்லை .
மண்ணில் மட்டுமே உங்கள் உருவம் மறையும் எங்களுக்குள் உங்கள் கனவை விதையாக விதைக்கப்பட்டுள்ளீர்கள்.
என் இந்த வரிகள் கலாம் அய்யாவுக்கு சமர்ப்பணம்….

http://rajasundert.blogspot.com/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.