About this blog   இந்த வலைப்பக்கத்தைப் பற்றி

அன்புள்ள சகோதர சகோதரிகளே,

வணக்கங்களும் வாழ்த்துக்களும்.

தமிழ்நாட்டில், தஞ்சையில் பிறந்த ஒரு சராசரி மனிதனின் வலைப்பக்கம் இது.

நான் முதலில் 2015 ஆம் ஆண்டு NYTANAYA என்னும் வலைப்பக்கத்தைத் தொடங்கினேன். அதன் முதல் பதிவு 22.01.2016 அன்று எழுதப்பட்டது. (https://nytanaya.wordpress.com)

அதன் பிறகு இன்றுவரை ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் சுமார் 1000க்கு மேல் பதிவுகள் எழுதப்பட்டு, மற்ற வலைப்பக்கங்களில் எளிதில் கிடைக்கக்கூடிய பொருளைக் கொண்ட சுமார் 200 பதிவுகள் நீக்கப்பட்டபின், தற்சமயம் அந்த வலைப்பக்கம் 870 பதிவுகளைக் கொண்டுள்ளது. இதுவரை 110000க்கும் அதிகமான பார்வைகள் (views/hits) பெற்றுள்ளது.

பலசமயம், நான் அந்த வலைப்பக்கம் தொடங்கியபோது, ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியே இரண்டு வலைப்பக்கங்கள் தொடங்கியிருக்கலாம் என்று தோன்றியிருக்கிறது.

எனவே நான் 16.06.2018 அன்று, தனியாக மூன்று வலைப்பக்கங்கள் தொடங்கினேன்.

  1. https://nytanayaindia.wordpress.com இந்த வலைப்பக்கத்தின் பெயர்: ‘NYTANAYA ENGLISH’ – இதில் ஆங்கிலப் பதிவுகள் இடம் பெறும். என் முதல் வலைப்பக்கத்தில் இருக்கும் அனைத்து ஆங்கிலப் பதிவுகளும் இந்தப் புதிய பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
  2. https://nytanayatamil.wordpress.com இந்த வலைப்பக்கத்தின் பெயர்: ‘தமிழ்ப் பக்கம்’ – இதில் தமிழ்ப் பதிவுகள் இடம் பெறும். என் முதல் வலைப்பக்கத்தில் இருக்கும் அனைத்து தமிழ்ப் பதிவுகளும் இந்தப் புதிய பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
  3. https://stotramala.wordpress.com/ இந்த வலைப்பக்கத்தின் பெயர்: ‘ஸ்தோத்ரமாலா’ – இதில் தமிழ்ப் பதிவுகள் இடம் பெறும். என் முதல் வலைப்பக்கத்தில் இருக்கும் அனைத்து துதி/ஸ்தோத்ரங்கள்/ஸ்லோகங்களும் இந்தப் புதிய பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆயினும் இந்த என் முதல் வலைப்பக்கத்தில் இருக்கும் பதிவு செய்த வாசிப்பாளர்கள் சிலர் கேட்டுக் கொண்டதன் பேரில், நான் புதிதாகத் துவக்கிய மூன்று வலைப்பக்கங்களையும் விட்டு விட்டு, பலரும் விரும்பும் இப்பக்கத்திலேயே புதிய பதிவுகள் இடம்பெற வேண்டும் என்று விழைந்ததால், நான் இப்பக்கத்திலேயே புதிய பதிவுகள் எழுதுவதாக முடிவு செய்திருக்கிறேன். புதிய வலைப்பக்கங்கள் சிறிது நாட்களில் நீக்கப்பட்டுவிடும்.

நான் இந்தியன் வங்கியில் உதவிப் பொது மேலாளராய் இருந்து ஓய்வு பெற்றவன். நான் எழுதுவது என் பள்ளிக் காலங்களில் தொடங்கியது. பின்னர் கல்லூரிக் காலங்களில் தொடர்ந்தது. ஆங்கிலத்திலும் தமிழிலும் அக்காலத்தில் என் எழுத்துத் துறை அனுபவங்கள் பற்றி, இந்த வலைப்பக்கத்தில் இடம் பெற்றுள்ள ‘என் வரலாறு‘ தொடர்ப்பதிவில் சிறு குறிப்பு உள்ளது.

மதம், இனம், சாதி, நாடு, கல்வி, சொத்து, பதவி சார்ந்த எந்த வேறுபாடுகளையும் நான் கருத்தில் கொள்வதில்லை. மனிதத்துடன், அதாவது மனிதநேயத்துடன், அன்புடன், பண்புகளுடன், நெறிகளுடன், இனிமையான மனத்துடன் இருப்பவன் மட்டுமே மனிதன் என்னும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவன். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் நான் மனிதர்களை பிரித்துப் பார்ப்பவன்.

என் இந்த வலைப் பக்கத்தில் இடம் பெறும் பதிவுகள் உங்கள் வாசிப்பிற்கானது. வாசித்துவிட்டு, இப்பக்கத்தை சிறந்த ஒரு வலைப் பக்கமாக்க, தங்கள் எண்ணங்களையும், கருத்துக்களையும், ஒவ்வொரு பதிவிலும் தெரிவிக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றியுடனும், வாழ்த்துக்களுடனும்,

ந. கணபதி சுப்ரமணியன்.

About:

Dear Brothers and Sisters,

Unlimited flow of love from nytanaya to you all.

This is the personal page of an Indian citizen, born in Tamil Nadu State, India.

Reading and writing is my passion. Qualified in finance and management I retired as AGM from Indian Bank, finally to act on my passion again. Life’s lessons have left me wiser, but I want to act a little less wiser by sharing my thoughts and on what I read.

The aim of this blog is to share with the world my opinion and a wealth of information which I feel will be relevant for an Indian, having an open mind for all new ideas and shunning all differences created among people on the lines of color, caste, religion, affluence and educational achievements.

I am a believer in God and spirituality. I am a Hindu as I was born into a Hindu family. But I treat all people as my brothers and sisters. I have certain value systems and I differentiate people based on them. Among the important values I treasure are love towards one another, a humane approach to all, and truth.

The posts can be accessed either from the menu appearing on the top of the page, or from the categories appearing on the right side, or by selecting from the entries with hyperlinks in the Archives pages.

I had registered my first blog ‘NYTANAYA’ in the year 2015. My first post was made on January 22, 2016. I wrote over 1000 posts in that blog, deleted some 100+ posts and at last count the blog has 870 posts. The posts are either in English or in Tamil language. Total views of the blog have crossed 110000.

I had long felt that I should maintain the posts in Tamil and English separately. Moreover my blog has around 300 sloka / stotra, the devotional hymns either in Tamil or Sanscrit transliterated in Tamil language.

Hence now I have created three separate blogs, copying relevant posts from the original blog, with an idea that new posts will be posted in the new blogs only:

  1. https://nytanayaindia.wordpress.com which contains the blog ‘NYTANAYA ENGLISH’ containing only posts in English.
  2. https://nytanayatamil.wordpress.com which contains the blog ‘தமிழ்ப் பக்கம்’ containing only posts in Tamil.
  3. https://stotramala.wordpress.com/ which contains the blog ‘ஸ்தோத்ர மாலா’ containing devotional hymns in Tamil, or Sanskrit hymns transliterated into Tamil.

But as this blog has many followers and some of them requested that new posts may be continued in this blog, instead of the newly created blogs. Hence I have decided to continue new posts in this blog only. The new blogs created will be deleted shortly.

Please feel free to comment on the posts, so that your valuable comments result in improvement of the blog.

Thank you.

With Love,

N Ganapathy Subramanian

July 13, 2018

2 thoughts on “About this blog   இந்த வலைப்பக்கத்தைப் பற்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.