கன்பூசியசு

கன்பூசியசு
**************

கன்பூசியசு (செப்டெம்பர் 28, கிமு 551 – கிமு 479) ஒரு சீனச் சிந்தனையாளரும், சமூக மெய்யியலாளரும் ஆவார். இவருடைய உபதேசங்களும், மெய்யியலும் சீனா,கொரியா சப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளின் வாழ்வியல் சிந்தனைப் போக்குகளில் ஆழமான செல்வாக்குச் செலுத்தின. இவருடைய மெய்யியல் சிந்தனைகள் தனிமனித, அரச நன்னடத்தை; சமூகத் தொடர்புகள், நீதி,நேர்மை ஆகியவற்றில் சரியாக இருத்தல், ஆகியவற்றை வலியுறுத்தின. சீனாவில் கான் (Han) மரபினரின் காலப் பகுதியில் (கிமு 206 – கிபி 220), இச் சிந்தனைகள், தாவோயிசம் முதலிய பிற கொள்கைகளிலும் அதிக முதன்மை பெற்றிருந்தன. கன்பூசியசின் சிந்தனைகள் கன்பூசியனிசம் என்னும் ஒரு மெய்யியல் முறைமையாக வளர்ச்சி பெற்றது.
உண்மையில் இது ஒரு வாழ்க்கைமுறை.

நல்ல பண்புகள்.
————————–

• நல்லதைச் செய்ய என்று மனதுக்குள் ஆசைப்பட்டலே போதும் உங்களுடைய கெட்ட குணங்கள் எல்லாம் தலைதெறிக்க ஓடிவிடும்.
• நல்லதைச் செய்வதற்குத்தேவை நிறைய மனஉறுதி.
• நீங்கள் எப்போதும் நல்ல வழியிலேயே நடக்க வேண்டும்.நல்ல பண்புகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.உயர்ந்த குணங்களைப் பின்பற்றவேண்டும்.கலைகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
• நல்ல பண்புள்ளவர்களுக்கு நடுவேதான் நாம் எப்போதும் வாழவேண்டும்.மற்ற எதுவும் வாழ்க்கையே இல்லை.

நல்லவர்கள் எப்படி இருப்பார்கள்
——————————————————

• அவர்களுடைய பேச்சில் புத்திசாலித்தனம் இருப்பார்.சுறுசுறுப்பாகச் செயல்படுவார்கள்.
• ஆர்வத்துடன் உழைப்பார்கள்.
• சோம்பலாக இருக்கமாட்டார்கள்.
• பெரியவர்களை மதித்து நடப்பார்கள்.
• புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆர்வமாக இருப்பார்கள்.
• அன்போடு பழகுவார்கள்.
• நிலைமாறாமல் இருப்பார்கள்.
• தங்களைப்பர்றிப் பெருமையடிக்க மாட்டார்கள்.
• ஜாதி,மதம்,மொழி என்றெல்லாம் வேறுபாடு பார்க்கமாட்டார்கள்.
• அனைவரையும் அரவணைப்பார்கள்.
• எல்லோரிடமும் சமமாகப் பழகுவர்.
• தர்மத்தின் பாதையில் நடப்பார்கள்.
• சட்டத்தை மதிக்கிறார்கள்.
• சுதந்திரமாக வாழ்வார்கள்.
• பொறாமைப்பட மாட்டார்கள்.

நல்ல குணம் கிடைப்பதற்கு வேண்டிய ஐந்து
————————————————————————-

• பணிவன்பு
• சகித்துக்கொள்ளும் தன்மை
• சக மனிதர்கள் மீது நம்பிக்கை
• விடாமுயற்சி
• கருணை

மென்மையான குணங்கள் எவை?
——————————————————–

• மனஉறுதி
• விடாமுயற்சி
• மென்மையாகப் பேசுவது

கெட்ட குணங்கள்
—————————–

• பாசாங்கு செய்தல்
• கோபப்படுவார்கள்.
• சண்டை செய்வார்கள்.
• வதந்திகளை பரப்புவார்கள்.

படிப்பு
———-

• சிந்திக்காமல் படித்தால் அந்தப் படிப்பு வீண்
• படிக்காமல் சிந்தித்தால் அந்த வாழ்க்கையே வீண்
• உண்மையான அறிவு நமக்குத் தெரிந்தததை தெரியும் எனவும் தெரியாததை தெரியாது எனவும் ஏற்றுக்கொள்வது.
• நல்ல குணமுள்ள கல்வியாளனாக இருக்கவேண்டும்.
• ஞானத்தைப் பெறுவதற்கு ஆழமாகவும்,அகலமாகவும் படித்தால் போதாது.படிக்கிற விஷயத்தில் முழுக் கவனத்துடன் இருக்கவேண்டும்.

தலைவர்
————

• பதவிக்கு மரியாதை கொடுப்பார்.
• நம்பிக்கைக்குரியவர்.
• உயிரைத் துச்சமாக மதிப்பர்.
• நல்ல ஆட்சிக்கு போதுமான உணவு,ராணுவம்,மக்களின் நம்பிக்கை ஆகியவை தேவை.
• நல்ல விஷயங்களை பின்பற்றுவார்கள்.
• அமைதியாக இருப்பார்கள்.

மற்ற சில
————-

• கெட்டதை எண்ணாதே
• நேர்மையின் வழியில் நட
• தன்னடக்கத்துடன் இரு
• மனஉறுதியுடன் இரு
• கண்ட நேரத்தில் சாப்பிடாதே
• வயிறு நிறையச் சாப்பிடாதே.
• மற்றவர்களின் பொருள்மீது ஆசைபடாதே
• எளிமையாக இரு
• தவறு செய்தவர்களை மன்னித்திடு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.