ஆருத்ரா தரிசனம்

ஆருத்ரா தரிசனம்

பட்டினத்தார் துறவு பூண்டபின் அவரது கணக்குப் பிள்ளையான சேந்தன் என்பவர் விறகுவெட்டிப் பிழைத்துவந்தார். அந்த நிலையிலும் அவரது விருந்தோம்பல் நிற்கவில்லை. அவரது ஈகை குணத்தைப் பெருமைப்படுத்த ஈசனே அவர் வீட்டுக்கு விருந்தாளியாய் வந்தார், இருந்த அரிசிமாவையும், வெல்லத்தையும் வைத்துக் களியாகச் சமைதார் சேந்தனின் மனைவி. இருக்கும் காய்கறிகளை ஒன்றாக்கி தாளகமும் (ஏழு தான் கூட்டு) தயாரித்துச் சாப்பாடு போட்டார். சாப்பிட்டுவிட்டு வழிச்செலவுக்கும் கேட்டு வாங்கிக் கொண்டார் சபாபதி.

மறுநாள் தில்லை ஆலயத்தில் இறைந்து கிடந்த களியைக் கண்டு அர்ச்சகர்கள் பதறினர். களி சிந்திய வழியைத் தொடர்ந்து சென்ற அவர்கள், சேந்தனாரின் வீட்டை அடைந்து நடந்ததை அறிந்து புளகித்தனர். அன்று முதல் திருவாதிரைத் திருநாளில் களிசெய்து நிவேதிப்பது வழக்கமாயிற்று.

ஆருத்ரா என்றால் நனைதல் என்று பொருள். சிவபெருமான் அருள்மழையில் மக்கள் நனையும் நாள் இது. பதஞ்சலி, வியாக்ரபாதர் என்கிற இரு பக்தர்களுக்காக சிதம்பரத்தில் நடராஜர் ஆனந்தத் தாண்டவம் ஆடிய புனித நாள்.

கன்னிப்பெண்களுக்கு எண்ணெய் தேய்த்து நீராட்டி, நுனி இலையில் களியும், தாளகமும் இட்டுச் சாப்பிடச் செய்தபிறகே, பிறர் சாப்பிடுவது மரபு.

நடராஜர் காலடியில் உள்ள முயலகன் போல் அகந்தை கொண்டு தடுமாறி நடப்பவரை சித்ஸபேசன் அடக்கி ஒடுக்கி களியாக்கி விடுவார் என்பதையும், அடியார்களுக்குக் களிப்பைத் தருவார் என்பதையும் குறிக்க களி தரப்படுகிறது.

கறுப்பு என்பது சனியின் நிறம். இன்றும் ஆலயங்களில் ஆருத்ரா தரிசனத்தன்று சனி உபாதையில் இருந்து நீங்க கறுப்பு மை பிரசாதமாக வழங்கப்படுகிறது.

தர்ஶனாத் அப்ரஸதஸி  என்றவாறு (சிதம்பரத்தில்) இன்று காலையில் நடைபெறும் மஹாபிஷேகத்தையும், ஆனந்த நடனத்தையும் கண்டவர்களுக்கு மறுபிறவி இல்லை.

  • வைதிகஸ்ரீ ஜனவரி 2018 இதழ்
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.