இலவச அழிப்பு – எதிர்காலம்

35516498181_d59ec6479d_c
இலவச அழிப்பு:
*********************
காலை ஏழு மணிக்கே மிக இருட்டிவிட்டது. இப்போதுதான் துணிகளை வாசலில் காயவைத்தேன். மீண்டும் நனையாமல் இருக்க துணிகளை எடுத்துவர, வாசல்பக்கம் சென்றேன்.

ஒரு பையன். பதின்மூன்று, பதினான்கு வயது இருக்கும். “அண்ணே இந்தப் பேப்பர் கட்டை மாடிப்படிக்குக் கீழே வச்சிட்டுப் போறேன். வந்து எடுத்துக்கிறேன்.” என்றான். கீழே அமர்ந்து, கட்டைப் பிரித்தான். அது இப்பகுதியில் (மாம்பலம், சென்னை) போடப்படும் ஒரு இலவச வார பேப்பர். சிறு  விளம்பரங்களால் வரும் வருமானத்தை உன்னிட்டு 8 அல்லது 10 பக்கங்களில் வாரந்தோறும்  வீடுகளில் போடப்படுபவை.

எவ்வளவப்பா உனக்குக் கிடைக்கும்?

ரூ 125 கிடைக்கும். இந்தக் கட்டுல 500 பேப்பர் இருக்கு. இந்த ஏரியாவுல போடணும். வாராவாரம் வேலை.

படிக்கிறியாப்பா ?

ஆமாம், ஒம்பதாவது, கவர்மண்ட் ஸ்கூல்ல.

பேப்பர்கட்டை வைத்துவிட்டுச் சென்றவன் மீண்டும் அரை மணி நேரம் கழித்து ஒரு சைக்கிளில் வந்து கட்டை விநியோகிக்க எடுத்துச் சென்றான்.

சைக்கிள் ஒன்னுதாப்பா ?

இல்லே, வாடகை சைக்கிள்தான்.

சென்றுவிட்டான்.

இவ்வளவுதான் நடந்தது. ஆனால் எனக்குள் நிறைய சிந்தனைகள்.

சிறுவயதிலேயே குழந்தைகள் உழைப்பின் சிறப்பை அறிந்து செயல்படுகிறார்களா ?

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்து விட்டோம் என்று மார்தட்டும் நம் அரசுகள் சொல்கின்றனவே !

இத்தகைய உழைப்பைப் பெறுவதன்மூலம், அந்தப் பேப்பர் நிறுவனம் இக்குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்குகிறார்களா அல்லது உருக்குலைக்கிறார்களா ?

போதுமான வருமானம் இன்றித் திண்டாடும் இவர்களின் பெற்றோரைத்தான் குறைகூற முடியுமா ?

இந்திய ஜனாதிபதியான அப்துல் கலாம் அவர்களே சிறுவயதில் பேப்பர் போட்டுத்தான் வளர்ந்து உழைத்து தலைவரானார் என்ற உண்மையை, நமக்கு நாமே கூறிக்கொண்டு சமாதானம் அடையவேண்டுமா?

வங்கத்தில் அன்று நிகழ்ந்த கொடிய பஞ்சத்தின் போது, கோசாலையில் மாடுகளுக்கு உணவளிக்க சேமித்துவைக்கப்பட்ட அரிசிமூட்டைகளை, அப்போது தினந்தினம் ஆயிரக்கணக்கில் மடிந்துகொண்டிருந்த மனிதரைக் காப்பாற்ற வேண்டி கேட்ட சுவாமி விவேகானந்தரிடம, அக்காப்பாளர் சொன்ன “மனிதன் பஞ்சத்தில் சாவது அவனது கர்மத்தால் வந்தது” என்ற (அ)நியாயக் கருத்தைச் சொல்லி நமக்குள் சமாதானம் ஆவதா?

மகாத்மாவான அப்துல் கலாம் சிறு பையனாக வாழ்ந்த அக்காலத்தில், நம் தேசம் அந்நியர் ஆட்சியில் இருந்தது. ஆனால் நாம் இப்போது இருப்பது நம்முடைய சொந்த சுயாட்சியில். நம்மை நாமே நமக்காக ஆள்கிறோம் அல்லவா?

அப்படியானால், அப்துல் கலாம் அவர்கள் சிறுவயதில் உழைக்க வேண்டிவந்ததுபோல, இன்றும் இச்சிறுவர்கள் உழைக்க வேண்டித்தான் இருக்கிறது என்றால், இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளில் நாம் சாதித்ததுதான் என்ன?

வருத்தம், கோபம், அங்கலாய்ப்பு, அச்சம் இவை கலந்த உணர்வோடு கனத்த இதயத்தோடு இதை எழுதுகிறேன்.

நெஞ்சத்தில் ஈரம் இன்னமும் கொஞ்சம் மிச்சம் இருப்பவர்கள் இதைப் பற்றிச் சிந்தித்து, இத்தகைய குழந்தைகள் நலன் குறித்து சிந்தித்து முடிந்த நல்லதை செய்ய வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.