கோளறு திருப்பதிகம்

கோளறு திருப்பதிகம்

“சிவனடியையே சிந்திக்கும் சிவனடியார்களை நாளும் கோளும் என்ன செய்து விடும்? அவை நன்மையே பயக்கும்” என்று கூறி பத்து பாடல்கள் பாடினார் திருஞான சம்பந்தர். கிரகங்கள் அவற்றின் பெயர்ச்சிகள் நிகழும் போது இந்தப் பதிகத்தைப் படித்தால் கோள்கள் எந்த நேரத்திலும் நன்மையே பயக்கும் என்பது ஞான சம்பந்தரால் சொல்லப்பட்டிருக்கும் செய்தி.

முக்கிய காரியமாகக் கிளம்பும் போதும், சகுனம் சரியில்லாத போதும், நல்லபடியாக முடிய வேண்டும் என்கிற வேண்டுகோளுடன் இந்தப் பதிகத்தை சொல்லலாம்.

ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் கோளறு பதிகத்தினை பாராயணம் செய்யலாம்.

 

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்

மிக நல்ல வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தென்

உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன்

வெள்ளி சனி பாம்பிரண்டு முடனே

ஆசறு(ம்) நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியாரவர்க்கு மிகவே                                                                                      1

 

என்பொடு கொம்பொடாமை யிவை மார்பி லங்க

எருதேறி ஏழையுடனே

பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்

உளமே புகுந்த அதனால்

ஒன்பதொ டொன்றோ டேழுபதி னெட்டோடாறு

முடனா யநாள்க ளவைதாம்

அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியாரவர்க்கு மிகவே                                                                                      2

 

உருவளர் பவளமேனி யொளிநீ றணிந்து

உமையோடும் வெள்ளை விடைமேல்

முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந் தென்

உளமே புகுந்த அதனால்

திருமகள் கலையதூர்தி செயமாது பூமி

திசை தெய்வமான பலவும்

அறநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியாரவர்க்கு மிகவே                                                                                      3

 

மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து

மறையோ துமெங்கள் பரமன்

நதியோடு கொன்றை மாலைமுடிமேலணிந்தென்

உளமே புகுந்த அதனால்

கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்

கொடுநோய் களான பலவும்

அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியாரவர்க்கு மிகவே                                                                                      4

 

நஞ்சணி கண்டெனந்தை மடவாள் தனோடும்

விடையேறு நங்கள் பரமன்

துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென்

உளமே புகுந்த அதனால்

வெஞ்சின அவுணரோடு முருமிடியுமின்னு

மிகையான பூத மவையும்

அஞ்சிடு(ம்) நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியாரவர்க்கு மிகவே                                                                                      5

 

வாள்வரி யதள தாடைவரி கோவணத்தர்

மடவாள் தனோடு முடனாய்

நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடிவந்தென்

உளமே புகுந்த அதனால்

கோளறியுழு வையோடு கொலையானை கேழல்

கொடுநாக மோடு கரடி

ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியாரவர்க்கு மிகவே                                                                                      6

 

செப்பிள முலைநன் மங்கை யொருபாகமாக

விடையேறு செல்வனடைவார்

ஒப்பிள மதியு மப்பு முடிமேலணிந்தென்

உளமே புகுந்த அதனால்

வெப்பொடு குளிரும் வாதம் மிகையானபித்தும்

வினையான வந்து நலியா

அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியாரவர்க்கு மிகவே                                                                                      7

 

வேள்பட விழிசெய் தன்று விடைமேலிருந்து

மடவாள் தனோடு முடனாய்

வாண்மதி வன்னி கொன்றைமலர் சூடிவந்தென்

உளமே புகுந்த அதனால்

ஏழ்கடல் சூழிலங்கை யரையன் றனோடு

மிடரான வந்து நலியா

ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியாரவர்க்கு மிகவே                                                                                      8

 

பலபல வேடமாகும் பரனாரி பாகன்

பசுவேறு மெங்கள் பரமன்

சலமகளோ டெருக்கு முடிமேலணிந்தென்

உளமே புகுந்த அதனால்

மலர் மிசையோனுமாலு மறையோடு தேவர்

வரு காலமான பலவும்

அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல

அடியாரவர்க்கு மிகவே                                                                                      9

 

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு

குணமாய வேட விகிர்தன்

மத்தமும் மதியுநாக முடிமேலணிந்தென்

உளமே புகுந்த அதனால்

புத்தரோ டமணைவா திலழிவிக்கும் அண்ணல்

திருநீரு செம்மை திடமே

அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியாரவர்க்கு மிகவே                                                                                      10

 

தேனமர் பொழில் கொளாலை விளைசெந் நெல்துன்னி

வளர் செம்பொன் னெங்கு(ம்) திகழ

நான்முக னாதியாய பிரமாபுரத்து

மறைஞான ஞானமுனிவன்

தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து

நலியாத வண்ணம் உரைசெய்

ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்

அரசாள்வர் ஆணை நமதே                                                                               11

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.