இறைசக்தியும் நம் சக்தியும் – 21

தமிழில் சில வேத மந்திரங்கள்

வேதத்தில் உள்ள சில மந்திரங்கள் மதத்தை மீறியவை, அவற்றை யாரும் தன் மொழியில் மொழிபெயர்த்துச் சொல்லலாம். சில உதாரணங்கள்:

உண்மையற்ற நிலையிலிருந்து என்னை உண்மை நிலைக்கு அழைத்துச் செல்வாயாக ! அறியாமை இருளிலிருந்து என்னை அறிவுப் பேரொளிக்கு அழைத்துச் செல்வாயாக! மரணத்திலிருந்து என்னை மரணமில்லா பெரு நிலைக்கு அழைத்துச் செல்வாயாக!

 

இறைவா, நீ ஆன்மசக்தியாக இருக்கிறாய், எனக்கு ஆன்ம சக்தியைத் தருவாய்.

நீ ஒழுக்க சக்தியாக இருக்கிறாய், எனக்கு ஒழுக்க சக்தியைத் தருவாய்.

நீ உடல் சக்தியாக இருக்கிறாய், எனக்கு உடல் சக்தியைத் தருவாய்.

நீ தெய்வீக சக்தியாக இருக்கிறாய், எனக்கு தெய்வீக சக்தியைத் தருவாய்.

நீ தைரியமாக இருக்கிறாய், எனக்கு தைரியத்தை தருவாய்.

நீ பொறுமையாக இருக்கிறாய்,எனக்கு பொறுமையை தருவாய்

தேவர் கூட்டத்திற்குத் தலைவர் ஆதலால் கணபதி என்று பெயர் பெற்றவரே!

உம்மைப் போற்றி அழைக்கின்றோம்.

நீர் அறிஞர்களுள் பேரறிஞர்; ஒப்பற்ற புகழ் படைத்தவர். முதன்மையானவர்களுக்குள் தலைசிறந்தவர். வேதங்களுக்கு நாயகர்.

எங்கள் பிரார்த்தனைகளைக் கேட்டு எங்களைக் காப்பதற்காக

விரைந்து வந்தருள்வீராக!

மஹாகணபதியாகிய உமக்கு நமஸ்காரம்

உலக இன்பமாகவும் மோட்ச இன்பமாகவும் இருப்பவரும் உலக இன்பத்தையும் மோட்ச இன்பத்தையும் தருபவரும், மங்கல வடிவினரும், தம்மை அடைந்தவர்களை சிவமயம் ஆக்குபவரும் ஆன சிவபெருமானுக்கு நமஸ்காரம்

எந்த நாதம் வேதங்களின் மிகச் சிறந்த பகுதியோ, எல்லாமாக இருக்கிறதோ, அழிவற்றதான

வேதங்களிலிருந்து தோன்றியதோ, அந்த ஓங்காரம் எனக்கு அறிவொளியைத் தரட்டும். தேவனே, நான் அழிவற்ற பரம்பொருளைப் பற்றிய அறிவைப் பெறுவேனாக. எனது உடல் ஆரோக்கியம் உடையதாக இருக்கட்டும், எனது நாக்கு மிகவும் இனிமையானவற்றைப் பேசட்டும், காதுகள் ஏராளமாக நல்லவற்றைக் கேட்கட்டும். ஓங்காரப் பரம்பொருளே, உலகப் பொருட்களைப் பற்றிய அறிவால் நீ மறைக்கப் பட்டுள்ளாய். இறைவனின் இருப்பிடம் நீ, கற்றவற்றை நான் மறந்துவிடாமல் காப்பாய்

 

சிறந்த செயலைச் செய்ய விரும்புகின்ற நமக்கு காற்று இனிமையாக வீசட்டும்,

நதிகள் இனிய நீருடன் ஓடட்டும், செடிகொடிகள் வளம் பெற்று விளங்கட்டும்,

இரவும் பகலும் நன்மையைத் தரட்டும், பூமி இனிமையைத் தரட்டும், நமது தந்தையான வானம்

இனிமையைப் பொழியட்டும், செடிகொடிகளின் அதிபதியான சந்திரன் இனிமையாக இருக்கட்டும், பசுக்கள் அதிக பாலைப் பொழியட்டும்

 

இதைப்போலவே தமிழில் உள்ள புராணங்கள் – கம்பராமாயணம், வில்லிபுத்தூரார் பாரதம், அல்லது தமிழ் மொழிபெயர்ப்பில் உள்ள புராணங்கள் இவை வாசிப்பவருக்குப் பாதுகாப்பையும் நன்மையையும் தரும்.

ஆங்கிலத்தில் பிரார்த்தனைகள்

ஆங்கிலத்தில் சில பிரார்த்தனைகள். இதை எழுதியவர் கிறிஸ்தவர் என்பதால் அது இயேசுகிறிஸ்துவை மட்டும் குறிக்கிறது என்று பொருள்கொள்ள வேண்டாம். எல்லாம் வல்ல இறைவனை அவர் கிறிஸ்துவின் வடிவத்தில் நேரே கண்டதனால் ஏற்பட்ட பிரார்த்தனைக் கருவூலங்கள் இவை. கிறிஸ்துவர் அல்லாதோரும் இதைப் பிரார்த்தித்தால் அந்தப் பரம்பொருளுக்கும் நம்மேல் கோபம் வராது. நமக்கு அப்பரம்பொருள் நல்ல ஆசிர்வாதமே செய்வார். பிரார்த்தனையும் பொருளும், அது ஒரு மனிதன் இறைவனிடம் முறையிட்டது என்ற உண்மையையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

Lord, make me an instrument of thy peace:

Where there is hatred let me sow love, – Where there is injury let me sow pardon

Where there is doubt let me sow faith – Where there is despair let me sow hope

Where there is darkness let me sow light – Where there is sadness let me sow joy – St Francis of Assissi

 

Psalm 23

 1. The LORD is my shepherd; I shall not want.
 2. He maketh me to lie down in green pastures: he leadeth me beside the still waters.
 3. He restoreth my soul: he leadeth me in the paths of righteousness for his name’s sake.
 4. Yea, though I walk through the valley of the shadow of death, I will fear no evil: for thou art with me; thy rod and thy staff they comfort me.
 1. Thou preparest a table before me in the presence of mine enemies: thou anointest my head with oil; my cup runneth over.
 1. Surely goodness and mercy shall follow me all the days of my life: and I will dwell in the house of the LORD for ever.

Psalm 27

 1. The LORD is my light and my salvation; whom shall I fear? the LORD is the strength of my life; of whom shall I be afraid?
 1. When the wicked, even mine enemies and my foes, came upon me to eat up my flesh, they stumbled and fell.
 1. Though an host should encamp against me, my heart shall not fear: though war should rise against me, in this will I be confident.
 1. One thing have I desired of the LORD, that will I seek after; that I may dwell in the house of the LORD all the days of my life, to behold the beauty of the LORD, and to enquire in his temple.
 1. For in the time of trouble he shall hide me in his pavilion: in the secret of his tabernacle shall he hide me; he shall set me up upon a rock.
 1. And now shall mine head be lifted up above mine enemies round about me: therefore will I offer in his tabernacle sacrifices of joy; I will sing, yea, I will sing praises unto the LORD.
 1. Hear, O LORD, when I cry with my voice: have mercy also upon me, and answer me.
 2. When thou saidst, Seek ye my face; my heart said unto thee, Thy face, LORD, will I seek.
 3. Hide not thy face far from me; put not thy servant away in anger: thou hast been my help; leave me not, neither forsake me, O God of my salvation.
 1. When my father and my mother forsake me, then the LORD will take me up.
 2. Teach me thy way, O LORD, and lead me in a plain path, because of mine enemies.
 3. Deliver me not over unto the will of mine enemies: for false witnesses are risen up against me, and such as breathe out cruelty.
 1. I had fainted, unless I had believed to see the goodness of the LORD in the land of the living.
 2. Wait on the LORD: be of good courage, and he shall strengthen thine heart: wait, I say, on the LORD.

Psalm 61

 1. Hear my cry, O God; attend unto my prayer.
 2. From the end of the earth will I cry unto thee, when my heart is overwhelmed: lead me to the rock that is higher than I.
 3. For thou hast been a shelter for me, and a strong tower from the enemy.
 4. I will abide in thy tabernacle for ever: I will trust in the covert of thy wings. Selah.
 5. For thou, O God, hast heard my vows: thou hast given me the heritage of those that fear thy name.
 6. Thou wilt prolong the king’s life: and his years as many generations.
 7. He shall abide before God for ever: O prepare mercy and truth, which may preserve him.
 8. So will I sing praise unto thy name for ever, that I may daily perform my vows.

பொருள் புரிந்து இவற்றைப் படித்தால் நம் தேவாரம் திருவாசகம், திருவருட்பா போன்றுதான் இவையும் இருக்கும். இறைசக்தியின் மீது அளவில்லா அன்பும் ஏக்கமும் கொண்ட இறையாளர்கள் எந்த நாட்டில், எந்த மதத்தில், எக்காலத்தில் பிறந்திருந்தாலும் அவர்களின் பிரார்த்தனை ஒரேமாதிரிதான் இருக்கும் என்பதற்கு இவை சில எடுத்துக்காட்டுக்கள்.

இறைசக்தியும் நம் சக்தியும் என்னும் தலைப்பு இத்துடன் நிறைவுறுகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.