இறைசக்தியும் நம் சக்தியும் – 20

எல்லா மொழியிலும் பிரார்த்தனை நூல்கள்

தமிழில் என்று கொள்வோமானால், நிறைய பிரார்த்தனை நூல்கள் இருக்கின்றன. கடவுளை நேரடியாகக் கண்ட சிவனடியார்கள், நாயன்மார்கள், அம்பிகை பக்தர்கள், முருக பக்தர்கள், ஆழ்வார்கள், அருட்பிரகாச வள்ளலார் இவர்கள் அருளியுள்ள எல்லா நூல்களுமே மிகச் சக்திவாய்ந்த அருமையான பிரார்த்தனைகளே.

தமிழில் தேவாரம், திருவாசகம், திவ்விய பிரபந்தம், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், அபிராமி அந்தாதி, குமரகுருபரர் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், வள்ளலாரின் திருஅருட்பா, போன்றவை.

சமஸ்கிருதத்தில் வேத மந்திரங்கள், ஸஹஸ்ரநாமங்கள், சௌந்தர்யலஹரி, சிவான்ந்த லஹரி முதலியவை.

ஆங்கிலத்தில், St. Francis of Assissi அவர்களின் பிரார்த்தனைகள், புனித பைபிளில் Psalms எனப்படும் சங்கீதம் இவை மிக மிக சக்திவாய்ந்தவை. Lord Jesus Christ, Have Mercy On Me மற்றும் Hail Mary மற்றும் Hail Child Jesus இவை மிக மிக சக்திவாய்ந்தவை.

உருதுவில், அரபி மொழியிலும் அல்லாவின் 99 நாமங்கள் உள்ளன, அவை ஒவ்வொன்றும் மிக மிகச் சக்தி பெற்றவை. ஜெருசலேமில் ஒரு மிகப்பழைய பள்ளிவாசலுண்டு. அதில் ஆப்பிரிக்கரைப் போன்ற தோற்றமுடைய மிக உயரமும் உடல்பலமும் கொண்ட அல்லாவின் ஊழியர் பலர் உள்ளனர். அவர் ஒவ்வொருவரும் அல்லாவின் ஒவ்வொரு நாமத்தையும் பலநாள் தொடர்ந்து தினமும் 10 மணிநேரத்துக்கும் அதிகமாக ஜபிக்கின்றனர்.  இது பல நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது. இத்தகு நபர்களைக் கண்ட அயல்நாட்டவர் அவர்களுக்கு உள்ள இறைசக்தியையும், சொல்லாமலே எந்த மொழியையும் புரிந்துகொள்ளும் சக்தியையும், சொல்லாமலே பிறர் மனத்தில் உள்ளவற்றை அறியும் திறமையையும் கண்டு அதிசயப்பட்டுள்ளனர்.

நான், என் குடும்பம், என் ஜாதி, என் தெரு, என் ஊர், என் மாநிலம், என் நாடு, என் மதம் இவற்றிற்கும் அப்பால் உள்ள பல உண்மைகளையும் அறிய முதலில் ஒவ்வொருவருக்கும் நாட்டம் வேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று நம் ஆதித் தமிழன் முழங்கியது ஒன்றும் முட்டாள்தனமானது. .இல்லை நமக்கும் புரியவரும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.