இறைசக்தியும் நம் சக்தியும் – 19

பிரார்த்தனையின் சக்தி

மந்திரங்கள், பிரார்த்தனைகள் இவற்றுக்குச் சக்தியுள்ளதா அல்லது சொல்பவரின் மனக்கற்பனையால் சக்தி கிடைப்பதாகத் தோன்றுகிறதா என்பதைப்பற்றி உலகெங்கும் ஆயிரக்கணக்கில் சோதனைகள் கைதேர்ந்த அல்லோபதி மருத்துவர்களாலும், பிரபலமான விஞ்ஞானிகளாலும் செய்யப் பட்டுள்ளன.

புத்தகங்களில் மட்டும் முன்னர் கிடைத்த இத்தகவல்கள் தற்கால அறிவியில் முன்னேற்றமான இணையத்தில் தேடினால் நொடிப்பொழுதில் கிடைக்கும். அவற்றின்படி முழு உலகமும் பிரார்த்தனையின் சக்தியை ஒப்புக்கொள்கின்றன.

மனிதன் என்பவன் ஐம்புலன்களுள் அடங்கிவிட மாட்டான், அவனது இதயமும் மூளையும் ஐம்புலனுக்கு அப்பால் உள்ள ஒரு அதிர்வுநிலையைத் தொடர்புகொள்ள இயலும், பிரார்த்தனையின்போது இத்தகைய ஒரு தொடர்பு ஏற்படுகிறது, அதுதான் பிரார்த்தனைக்கு சக்தியளிக்கிறது, பிறருக்கு தீமை செய்யும் நோக்கில் செய்யும் பிரார்த்தனகள் சக்திகொடுப்பதில்லை, பிறர் நலம் நாடும் பிரார்த்தனகள் உடனே பலனளிக்கின்றன, நமக்குத் தெரியாத ஒருவருக்காக செய்யும் பிரார்த்தனைக்கு மிக அதிக சக்தி உள்ளது என்றெல்லாம் அத்தகைய சோதனைகளின் முடிவுகள் சொல்கின்றன.

அதனால் குறிப்பிட்ட சில ஓரசை மந்திரச் சொற்களைவிட, பிரார்த்தனைகளை நாம் வாசித்து பொருளுணர்ந்து பிரார்த்திப்பது எந்த ஆபத்தும் இல்லாத விஷயம்.

எந்த மொழியில் பிரார்த்திப்பது

அவரவருக்குத் தெரிந்த எல்லா மொழிகளிலும் பக்தி இலக்கியங்கள் உண்டு. எந்த மொழியில் வேண்டுமானாலும் பிரார்த்திக்கலாம், ஒரே நிபந்தனை பொருள்புரிந்துதான் சொல்லவேண்டும். அப்படிச் சொன்னால், உங்களுக்குப் பொருள் புரிந்தால், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சமஸ்கிருதம், மராட்டி, வங்காளி, துளு, உருது, அராபிக், ஆங்கிலம், லத்தீன் இவற்றில் உள்ள பிரார்த்தனை நூல்களை வாசிக்கலாம்.

பொருள்புரிந்து சொல்லும்போது மதக் கட்டுப்பாடுகள் மறைந்துவிடும். ஒரே இறைவன், சக்தியாகவும் சிவனாகவும் பிரித்தால் இரண்டு, அதுவே பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மூன்றாகிறது. கிறிஸ்து சொன்ன தந்தையும் அவனே, நபிகள் நாயகம் கண்ட அல்லாவும் அவனே, எல்லா உருவங்களும் உள்ளவனும் அவனே, உருவமே இல்லாதவனும் அவனே, பிரபஞ்சமாய் இருப்பதும் அவனே, உள்ளிலும் புறம்பிலும் இருப்பது அவனே. நம் நெஞ்சத்தில் நித்யவாசம் செய்பவனும் அவனே.

பக்தியின் தொடக்கத்தில் நாம் ஒரு உருவத்தில் ஆரம்பித்தாலும், அந்த உருவமே எல்லாம் வல்ல இறைவன் என்று நாம் படிப்பதால், எல்லாத் தெய்வ உருவங்களும் அத்தகைய எல்லை இல்லாத சக்தியே என்பதையும் நாம் படிப்பதை உண்மையில் உணர ஆரம்பித்துவிட்டால், நானும் நீங்களும் சகோதர சகோதரிகளே, நமக்கு அப்பனும் அவனே, அம்மையும் அவனே என்பது இரத்தத்தில் ஊறிவிடும்.

புறத்தில் மட்டும் மதத்தை வாடிக்கையாய் வைத்திருக்கும் (அவர்தம் மதத்தில் உள்ள உண்மையை மறுக்கும் மனதுள்ள) சில தீவிர சமயவாதி இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் சொல்வது அவரவரது சொந்த கருத்தே தவிர உண்மையாகாது. எந்த மதத்தில் பிறந்திருந்தாலும் தன் மதக் கடவுளின் அன்புமயமான சக்தியின் தொடர்பு கிடைக்கப்பெற்றால், எல்லாமே ஒரே இறைசக்திதான் என்பதை உணருவர்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.