இறைசக்தியும் நம் சக்தியும் – 18

சில பிரார்த்தனைகள்:

பிரார்த்தனைகளைப் பற்றி எழுதத் தொடங்கினால் அது பல முழு புத்தகங்கள் அளவுக்கு உள்ளன. கீழ்க்கண்ட நூல்களில் உள்ள செய்யுள்கள் ஒவ்வொன்றும் மிகச் சிறந்த பிரார்த்தனைகளே. பல மொழிகளிலும் பிரார்த்தனைகள் உண்டு. எந்த மொழியாய் இருந்தாலும் சொந்த மொழியில் இருப்பது மிக நல்ல பயனைத் தரும். குடும்ப வழக்கங்களின் பொருட்டு சிலர் அயல்மொழியில் உள்ள பிரார்த்தனைகளைப் படித்துப் பிரார்த்திப்பது உண்டு. ஆயினும் அவற்றின் பொருளை மனதில் உணர்ந்து சொல்ல வேண்டுமாயின் அத்தகைய நூல்களுக்கு நமக்குத் தெரிந்த மொழியில் பொருள், உரை உள்ளவற்றை தேடிப் பிடித்து வாங்கவேண்டும்.

மந்திரம் வேறு பிரார்த்தனை வேறு

Guru Sishya

நாம் மந்திரங்கள் என்பது வேறு பிரார்த்தனைகள் என்பது வேறு. மந்திரங்கள் என்பது சாதாரணமாகப் பொருள் கொள்ள இயலாத ஓரசை, ஈரசைச் சொல்லாக இருக்கும்.

இத்தகைய மந்திரங்களுக்கு மிக அதிகமான சக்தியுள்ளது. ஒவ்வொரு மனிதனும் மனுஷியும் தன் குணங்கள், தன் அனுபவம், தன் உடல்நிலை இவற்றின்படி வெவ்வேறு அதிர்வை வெளிப்படுத்துவார்கள். அதைப் போலவே மந்திரம் என்னும் ஓரசை, ஈரசைச் சொற்களும் வெவ்வேறான அதிர்வை வெளிப்படுத்தும்.

இவை பெரும்பாலும் வடமொழியில் இருக்கும். நமக்கு ஒரு மந்திரத்தை நாமாகவே தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமான காரியம். நம் அதிர்வலையும் அந்த மந்திரத்தின் அதிர்வலையும் ஒத்துப் போகவில்லை என்றால் அதனால் அதை ஜபிப்பவருக்கு உடல் கோளாறு, மனச் சங்கடம், சூழ்நிலையில் சோதனைகள் நிகழ வாய்ப்புண்டு.

மந்திரங்கள் ஒவ்வொன்றும் இயற்கையில் அபரிமிதமாக உள்ள ஒரு குறிப்பிட்ட இயற்கைச் சக்தியைத் தொட்டிழுக்கும் சக்தி உடையன. எனவே இதற்கு ஒரு குருவின் துணை வேண்டும். இத்தகைய மந்திரங்களை நாமே புத்தகம் படித்து ஜபிக்க ஆரம்பிப்பது மிகவும் யோசித்து எதற்கும் தயாராக இருக்கும் நிலையில்தான் எத்தனிக்கலாம்.

இருப்பினும் சில மந்திரங்கள் எவரும் சொல்லலாம் என்று ஒரு நிலை பெற்றுள்ளன. அவை ராம், ராம, நாராயண, சிவசிவ, போன்ற சில மந்திரங்கள்தாம் அவை. இதைத் தவிர நாம் வணங்கும் தெய்வ உருவின் பெயர்கள் எல்லோரும் சொல்லலாம்.

இதைத் தவிர யோகசாஸ்திரத்தில் இத்தகைய ஓரசை மந்திரங்கள் நம் உயிர் உடலில் உள்ள சக்கரங்களுடன் தொடர்பு கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சிலருக்கு சில சக்கரங்கள் வலுவாய் இருக்கும் சில தளர்வாய் இருக்கும். எனவே நாம் ஜபிக்கும் மந்திரம் அதற்கு ஒத்திருக்கிறதா என்பதை அறிய மந்திரங்களின் சக்தியை அறிந்த யோக நிபுணரிடம் தெரிந்து அவரைக் குருவாய் பாவித்து அவர் சொன்ன மந்திரத்தை ஜபிக்கத் துவங்கலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.