இறைசக்தியும் நம் சக்தியும் – 10

சீர்காழியில் அருளிய இயேசுநாதர்

நான் சீர்காழியில் பணிபுரிந்த போது, சோதனையான ஒரு தருணத்தில், திடீரென்று என்னிடம் ஒரு நோயின் அடையாளங்கள் தோன்றியபோது, அது என்னையும் என் குடும்பத்தாரையும் முற்றிலுமாக வாழ்க்கையில் புரட்டிப் போட்டு விடக்கூடிய சோதனையாக நான் உணர்ந்தேன்.

என் சோதனைகள் தீர்வதற்கு, என் கடன்களைத் தீர்ப்பதற்கு, குடும்பத்தில் எனக்கிருக்கும் கடமைகளை ஆற்றுவதற்கு , நான் என் வேலையிலிருந்து விடுதலை பெறுவதுதான் வழி என்றும் அதன்மூலம் கிட்டக்கூடும் பணிமுறிவுப் பணத்தினைக் கொண்டுதான் விரைவில் என் கடன்களைத்தீர்க்க வேண்டும் என்றும், அந்தப் பணத்தினால்தான் ஒரு பெண்ணுக்குத் தந்தையாக எனக்குள்ள பொறுப்புக்களை விரைவில் ஆற்றிடமுடியும் என்று தீர்மானித்து,  VRS விண்ணப்பம் அலுவலகத்தில் சமர்ப்பித்திருந்தேன்.

ஒரு நாள் இரவில் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் உள்ள ஸ்லோகங்களைப் பாராயணம் செய்து எப்படியும் நான் VRS பெறுவதுதான் ஒரே தீர்வு என்பதால் எப்படியும் அதைத்தர வேண்டி, நம் இந்துக் கடவுள்களை சோதனை தீர கண்ணீர் சிந்தி வேண்டி, உண்ணாமல் உறங்கிப்போனேன்.

அடுத்த நாள்,காலை 6.30 மணிக்கு, நான் எதேச்சையாக அறிந்த, சிறிதே பேசிப்பழகிய, நான் அல்லல்பட்டுவரும் என் சோதனைகளைப் பற்றி சிறிதும் அறியாத கிறிஸ்துவ நண்பர் ஒருவர் வந்து, அவருக்கு முன்னிரவில் பிரார்த்தனை செய்யும் வேளையில், ஒரு பெரிய மன அழுத்தம் ஏற்பட்டதாகவும், திடீரென்று என் நினைவு வந்ததாகவும், பின்னர் வழக்கம்போல் தனக்குத்தெரிந்த எல்லோருக்கும் நன்மை புரியவேண்டி, பிரார்த்தனையை முடிக்க முயற்சித்ததாகவும், முடிக்க இயலாமல் நெடு நேரம் ப்ரார்த்தனையில் தொடர, எனக்குச் சொல்லச் சொல்லி, அவருக்கு தியானத்தில் தெரிவிக்கப்பட்ட வாக்கியங்களைக் கேட்டதாகவும், தான் சிறிது நேரமே உறங்கமுடிந்ததாகவும், அவை எனக்குத்தான் சொல்லப்பட்டவை என்ற தன் எண்ணம் சரியோ அல்லது தவறோ என்று தெரியாமல், என்னிடம் சொல்ல வந்துள்ளதாகவும் கூறினார்.

“சார், (1) தங்களுக்கு இருப்பதாகக் கருதப்படும் நோய், தங்களுக்கு இல்லை. நீங்கள் வருத்தம் அடையவேண்டாம். மருத்துவர்கள் குழப்பம் அடைந்திருக்கிறார்கள். (2) தாங்கள் அலுவலகத்தில் விண்ணப்பித்திருக்கும் voluntary retirement நிராகரிக்கப்படும் (3) VRS application அலுவலகத்தில் தந்துவிட்டதனால், தாங்கள் தேவையில்லை எனத் தாங்கள் எழுத்துமூலம் நிராகரித்துவிட்ட அந்தப் பதவி உயர்வு வாய்ப்பு தங்களுக்கு மீண்டும் வழங்கப்பட்டு, நீங்கள் பதவி உயர்வு சோதனைகளுக்கு அழைக்கப்பட்டு, நீங்கள் அதில் வெற்றி பெற்று, அந்தப் பதவி உயர்வு உங்களுக்குக் கிட்டும் (4) பதவி உயர்வில் தாங்கள் புதுக்கிளைக்கு செல்லும்போது, நானே என்னுடைய காரில் உங்களை அங்கே அழைத்துப் போவேன் (5) எனக்கு சிலகாலம் கழித்து ஒரு ஆண்குழந்தை பிறக்கும். அப்போது தாங்கள் வந்து என்னையும், என் மனைவி, குழந்தையையும் வந்து பார்த்துச் செல்வீர்கள், என்ற இந்த ஐந்து தகவல்களும் எனக்குச் சொல்லப்பட்டன.” என்று தெரிவித்தார்.

நான் கோரிய பிரார்த்தனைகளயும் விட அதிகமான எனக்குத் தேவையான விஷயங்கள் எதிர்பாராத, நம்பமுடியாத விதத்தில் சொல்லப்பட, அவை யாவும் எனக்கு அந்த எல்லாம் வல்ல இறைவன் அளித்த பதில்களாக உணர்ந்து, மெய்சிலிர்த்து ரோமம் கூர்த்து புளகாங்கிதம் அடைந்து அந்த இறைவனுக்கு என்றும் நன்றியுடையவனானேன்.

மிக அதிசயமாக அடுத்த வாரம் எனது VRS application நிராகரிக்கப்பட்டது. அதற்கு அடுத்தவாரம் பதவிஉயர்வுக்கான நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, பத்து நாட்களில், உயர்பதவியும் வந்துவிட்டது. அங்கிருந்து கிளம்பி, நான் தஞ்சையில் உள்ள ஒரு கிளையில் சேர வந்தபோது அந்த நண்பரின் காரில்தான் வந்தேன். மூன்று மாதம் கழித்து அவருக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்க, ஜெயங்கொண்டத்தில் பிரசவித்திருந்த அவர் மனைவி, அவர், மற்றும் குழந்தையையும் பார்த்துவந்தேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.