இறைசக்தியும் நம் சக்தியும் – 5

Mahabharata_KrishnaArjun_ISKON_Flikr_380x255

மனத்தை மாற்று

 

ஆனால் அந்த மனம் அழுக்கில்லாது இருந்தால்தான் அந்த மனம் எண்ணும் எண்ணங்கள் சக்தி பெற்றதாய் இருக்கும். நமது மன நிலையும் நமது மூளையின் இயக்கமும், நம் உடலின் ஆரோக்கியமும் நம் எண்ணங்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. மனதில் ஏற்படும் நிம்மதியின்மை நாம் கொண்டுள்ள எண்ணங்களினால்தான் ஏற்படுகின்றது. உடலில் ஏற்படும் பெரும்பான்மையான வலிகளும், சக்தியின்மையும், நோய்களும் psychosomatic disordersதான் என்று கூறும் மருத்துவ உலகம் ஆராய்ந்து பார்த்து இவையனைத்தும் மன எண்ணங்களால்தான் ஏற்படுகின்றன என்று அறுதியிட்டுக் கூறுகிறது. எனவே எண்ணங்களை சீர் செய்தால், மீண்டும் நமது மனம் அழுக்கு நீங்கி அத்தகைய சக்தி வாய்ந்த எண்ணங்களின் ஊற்றாக மாறும்.

 

அப்படி மனத்தை மாற்றிவிட்ட மனிதன்தான் உலகில் பல புதுமைகளை, பல கண்டுபிடிப்புக்களை செய்கிறான்; தன் எண்ணத்தின் சக்தியால் ஒரு தலைவனாக உருவாகிறான். பல துறைகளிலும் சாதனைகள் புரிகிறான். தன் எண்ணத்தின் சக்தியால் பிரார்த்தனை மூலம் தன்னிலும் உயர்ந்த இறைசக்தியை வேண்டி, தன்னிடம் இல்லாத சக்தியையும் பெற்று, தன் சக்திக்கு மேல் உள்ள காரியங்களையும் சாதிக்கிறான். தன் எண்ணத்தின் சக்தியினால் தன் வாழ்க்கையில் வேண்டியவற்றைப் பெறுகிறான்; பிறருக்கு ஏற்பட்ட துக்கத்தையும், கஷ்டத்தையும், இல்லாமையையும், தன் பேச்சாலும் செயலாலும், பிறர் நோயை தன் இச்சையாலும் பிரார்த்தனையாலும் சரிசெய்கிறான். அதைப் போன்ற மனிதர்களைத்தாம் (மனிதர்கள் என்றால் இருபாலரும்தான்) நாம் நம் வாழ்வில் ‘என்னமோ தெரியவில்லை, எனக்கு அவர் சொன்னால்தான் நடக்கும், அவர் சொல்வதெல்லாம் எனக்குத்தான் சொல்கிறார் என்று தோன்றுகிறது’, ‘அவரைப் பார்த்ததும் நிம்மதி’, ‘அவர் ஒருமுறை என்னிடம் பேசி ஆசி வழங்கிவிட்டால் நான் பேறு பெற்றவன்(ள்)’  என்று நாம் குறிப்பிடுகிறோம்.

 

இயற்கையைப்  பற்றிப் பேசும்போது சில விஞ்ஞானிகள் ‘Universe is a self thinking entity and all the matter, materials, living beings are its parts’ என்றும் “ Earth is ‘Gaia’ , our mother’ , என்றும், ‘Quantum physics’ – என்ற துறையில் ‘non-local mind’ என்பதைப் பற்றி கூறப்பட்டுள்ள சோதனைகள் எல்லாம் இறுதியில் மனித மனம் என்பது தன்னை, தன் வாழ்க்கையை மட்டுமல்லாமல், பிறரை, பிறர் வாழ்க்கையை, சமுதாய நிகழ்வுகளை, இயற்கையை, எல்லா வகையிலும் பாதிப்பதை உணர்த்துவதாக பதிவுசெய்துள்ளனர். எனவே நம் மனத்தின் சக்தியினால், நம் எண்ணங்களால் உலகையே பாதித்துவருகிறோம்.  அப்படியிருக்கும்போது நம் எண்ணங்கள் நம் வாழ்க்கையிலும் நம் உடலிலும் செலுத்தும் ஆதிக்கம் எத்தனை வலிமையானது என்பதை உணர்ந்து எண்ணங்களை சீர்செய்து கொள்ளவேண்டும்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.