இறைசக்தியும் நம் சக்தியும் – 4

Mahabharata_KrishnaArjun_ISKON_Flikr_380x255

நாமும் கடவுளின் ஒரு அங்கம்தான்

‘நாராயணன் நம் உடலில் இதயக்குகையில் கட்டைவிரல் அளவில் ஜோதிமயமாக இருக்கிறான்’ என்று நாராயணசூக்தம் கூறுகிறது. ‘இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே’ என்று சித்தர் பாடியிருக்கிறார். தவம் புரிவதை விட உடலைப் பேணுவது இழுக்கென்று எண்ணிய திருமூலர், சிவனே  நம் உடலுக்குள் இருக்கிறான் என்பதை உணர்ந்தவுடன், அந்த உடம்பைப் பேணுவது தன் கடமை என்று உணர்ந்ததாகப் பாடியிருக்கிறார். கிறிஸ்தவ நூலான புனித பைபிளில் “Do you know that your bodies are temples of the Holy Spirit, who is in you, whom you have received from God” (1 Corinthians 6.19) என்று கூறப்பட்டுள்ளது.  இதை எல்லாம் நான் இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம், எல்லோரிடமும் இறைசக்தி இருக்கிறது என்ற கருத்தை வலியுறுத்தவே. நமது குண்டலினி யோகத்தில் அண்டத்தில் உள்ளது எல்லாம் பிண்டத்தில் உள்ளது என்று சாதித்திருக்கின்றார்கள். அகண்டாகாசத்தில் உள்ளதை விட பெரியது சிதாகாசம் எனும் இதயவெளி என்றும் அதில் இல்லாத விஷயமேயில்லை எனவும் வேதம் பறைசாற்றுகின்றது.  அவ்வாறு படைத்தல், காத்தல், அழித்தல் அக்காரியங்களைச் செய்யும் அந்த இறைசக்தி நம்மில் இருப்பதால் நாமெல்லோரும் co-creators with God என்று பூமியில் உள்ள நம்மில் சிலருடன் மட்டும் பேசும், பூமிக்கு வெளியில் இருக்கும் சில சக்திகளிடமிருந்து தகவல்கள் வருகின்றன.

எண்ணத்தின் சக்தி

‘What ye think, ye become !’ , ‘You are creating your world by the quality, goal and colour of your thought’, என்றும் பலவகைகளில் நம் எண்ணத்தின் சக்தி பற்றி கூறியிருக்கிறார்கள். ஒரு பிரபலமான கவிதை இவ்வாறு கூறுகிறது: “SUCCESS BEGINS WITH A FELLOW’S WILL; It’s all in a state of mind, Life’s battles don’t always go to the stronger or faster man; But sooner or later The man who wins IS THE ONE WHO THINKS HE CAN!”. வேதங்கள், இறைவனின் சக்தி பற்றியும் பக்தர்களுக்கு உதவ வரும்போது அவர் கொள்ளும் வேகத்தைப் பற்றியும் கூறும்போது, ‘அவர் மனத்தை விட வலிமையானவர்’ , ‘அவரின் வேகம் மனத்தின் வேகத்தை விட அதிகம்’ என்றுதான் உவமை சொல்கின்றன. உலகில் உள்ள அல்லது நம்மில் உள்ள வேறு எதையும் உவமைக்கு எடுத்துக்கொள்ள வில்லை. எனவே மனம் என்பது அத்தனை சக்திவாய்ந்தது, இறைசக்திக்கு அடுத்தபடி சக்திவாய்ந்தது, உலகில் உள்ள மற்ற எல்லாவற்றையும் விட சக்திவாய்ந்தது என்பதை நாம் உணரவேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.