சரியான நவக்கிரக பரிகாரங்கள்

மந்த்ரேஸ்வரர் எழுதிய பலதீபிகையின்படி:  பலதீபிகை குறிப்பிடும் பரிகாரம் வித்யாசமானது. நவகிரகங்கள் பலக் குறைவுக்கு அந்தந்த கிரகங்களை ஸ்தோத்ரபாராயணம் மந்த்ரஜபம் ஹோமம் ப்ரதக்ஷிணம், நமஸ்காரம் போன்ற வழிபாடுகளால் திருப்தி செய்வித்து உபாசித்தல் என்பது ஒருவழி. மற்றொரு வழி அந்தந்த கிரகங்களுக்குண்டான உறவுகளை மதித்துப் போற்றி கௌரவித்து மகிழ்தல் என்பதாகும். மனிதநேய அடிப்படையில் அமைந்துள்ள இந்த வழி மிகவும் சுலபமாகவும், திருஷ்ட (கண்ணுக்குத் தெரியும்) பலன்களையும், அதிருஷ்ட (கண்ணுக்குத் தெரியாத) பலன்களையும் விரைவாகப் பெற்றுத் தருகிறது.

இதன் படி, தந்தைக்குரிய கிரகம், உடல்நலத்தைப் பாதுகாக்கும், நரம்பு மண்டலத்தை இயக்கும் சூரிய கிரகத்தைத் திருப்தி செய்ய  தனது தந்தையையும் தந்தைக்குச் சமமானவர்களையும் போற்றி அவர்களுக்குத் தேவையான ஆடை ஆபரணம் வாங்கித்தந்து உணவிடவேண்டும். நம்மைப் பெற்றெடுத்தவர், உபநயன தீதை செய்வித்தவர், கல்வி அறிவு போதித்தவர், அன்னம் (உணவு)இட்டவர், பயத்தில் இருந்து காப்பாற்றியவர் ஆகிய ஐவரும் தந்தைக்குச் சமமானவர்கள்.

பெற்ற தாயையும் தாய்க்குச் சமமானவர்களையும் போற்றி கௌரவித்து மகிழ்வித்தல் சந்த்ர கிரக பரிகாரமாகும். இதனால் மனத் தெளிவு ஏற்பட்டு உடலிலும் உள்ளத்திலும் ஈரப்பசை (இரக்கம்) ஏற்படும், வசிக்கும் இடத்தில் தண்ணீர் தாராளமாகக் கிடைக்கும்.

உடன் பிறந்த அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை இவர்களை கௌரவித்து மகிழ்விப்பது செவ்வாய் கிரக பரிகாரம். இதனால் இரத்த சம்பந்தமான நோய்தீரும், திருமணத்தடை விலகும்.

தாயின் உடன் பிறந்த மாமாவை உபசரித்து மகிழ்விப்பது புத கிரக பரிகாரம். இதனால் கல்வியில் முன்னேற்றம், பயனுள்ள தெளிவான அறிவு, தோல்வியாதி நீக்கம் இவை விளையும்.

நமது குரு, ஆசிரியர், ஆசிரியை இவர்களை மதித்து உபசரித்து மகிழ்விப்பது, பெற்ற பிள்ளை பெண் இவர்களை நன்கு வளர்த்து கல்வி புகட்டுவது குரு கிரக பரிகாரம். இதனால் பெருமளவு செல்வமும், வம்ச விருத்தியும் நல்லோர் சேர்க்கையும் ஏற்படும்.

பாட்டி,தாய், பெரியம்மா, அத்தை, மாமியார், சகோதரி, பெண், மனைவி இவர்களிடம் அன்பாகப் பழகி  மகிழ்வித்தல் சுக்ர கிரக பரிகாரம். இதனால் விரைவில் திருமணம், ஆணின் இரத்தத்தில் ரேதசும், பெண்ணின் இரத்தத்தில் சோணிதமும் உருவாகி உரிய காலத்தில் மகப்பேறு ஏற்படும். கனவன்-மனைவி அன்னியோன்னியம் ஏற்படும். தரித்திரம் நீங்கிலக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும்.

நம் வீட்டில் தொழிலில், அலுவலகத்தில் நாம் சொல்லும் வேலைகளைச் செய்யும் நம் உதவியாளருக்கு (ஊழியருக்கு) தேவையான உதவிகளைச் செய்து அவர்களை மகிழ்வுடன் வைத்திருப்பது சனி கிரக பரிகாரம். இதனால் அகாலமரணம், விபத்து, நோய் தவிர்க்கப்படும்.

மாதாமஹன் என்னும் தாயின் தந்தையை மரியாதையுடன் நடத்தி அன்புடன் உபசரித்து மகிழ்வித்தல் ராகு கிரக பரிகாரம்.

பிதாமஹன் என்னும் தந்தையின் தந்தைக்கு மரியாதை செய்து மகிழ்வித்தல் கேது கிரக பரிகாரம்.

இவ்வாறு நமது உறவினர்களை மகிழ்விப்பதே நவகிரகங்களை மகிழ்விப்பதற்கு சமமானதாகும் என்று சொல்கிறது பலதீபிகை நூல்.

மனிதப் பண்புகளையும் உறவுகளையும் வளர்க்கும் விதமாக அமைந்துள்ள இவைகளை நாமும் கடைப்பிடித்து நன்மையை அடைய அந்த இறைவன் நமக்கு அருள்வாராக.

 

 

அன்பே சிவம்.

 

நன்றி:  வைதிகஸ்ரீ இதழ், நவம்பர் 2017

3 thoughts on “சரியான நவக்கிரக பரிகாரங்கள்

  1. Dear Friend, Indians believe that they can pray and do puja to Sun and planets to ward of evils effects of planets in the horoscope of an individual. This post tells that instead of doing puja etc as remediatory measures to planets, the person who wants the blessings of planets should give respect and show love to his relations like mother, father, siblings, uncles, grandparents who are represented symbolically by the planets. This post tries to instill in the hearts of men that they should improve interpersonal behavior. The source of the solution explained by the post is the ancient Vedic Astrology text called PHALADEEPIKA. The post is in Tamil. I assume you are conversant with Malayalam. Thanks for your question and sorry for the late response.

   Liked by 1 person

   1. Wow that’s really an insightful topic my friend 😊. Thanks for your sincere reply and I hope that you really have an awesome week ahead 😊. Once again, thanks a lot 😇. Please stay in touch with my blog and let me know about it if you can 😊

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.