விவேக சிந்தனை மாலை – 001

விவேக சிந்தனை மாலை – 000
சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள்
———————————————————————–
இத்தொடர் சுவாமியின் பல்வேறு பிரசங்கங்களில் இருந்து கண்டெடுத்த சிந்தனை மலர்களைக் கொண்டு தொடுக்கப்படும் ஒரு மாலை. இதை நான் பதிவாக வெளியிடுவதில் எந்த சுயநோக்கமும் இல்லை. படித்தவர் பிடித்ததாக எழுதினால் எனக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியே என் சுயலாபம்.
-கணபதிசுப்ரமணியன் 16.10.2017

விவேக சிந்தனை மாலை – 001

*இந்துமதம்* 01

வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றி இன்றும் நிலைத்து நிற்கின்ற மதங்கள் மூன்று. அவை இந்து மதம், சொராஸ்ட்ரிய மதம், யூத மதம் ஆகும். இவை பல கடுமையான அதிர்ச்சிக்கு உட்பட்டும், இன்றும் நிலைத்திருப்பதன் வாயிலாகத் தங்கள் உள்வலிமையை நிரூபிக்கின்றன.

*யூத மதம்* கிறிஸ்தவ மதத்தைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளத் தவறியது மட்டுமன்றி, அனைத்தையும் வெற்றி கொண்டதும் தன்னிலிருந்து தோன்றியதுமான கிறிஸ்தவ மதத்தால் பிறந்த இடத்திலிருந்தே விரட்டி அடிக்கப்பட்டு விட்டது; இன்று தங்கள் பெருமைக்குரிய மதத்தை நினைவு படுத்த ஒருசில பார்சிகள் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள்.

*இந்திய மண்ணில் ஒன்றன்பின் ஒன்றாக எத்தனையோ கிளைமதங்கள் உண்டாயின.* அவை வேதநெறியின் அடித்தளத்தை உலுக்கிவிடுமோ என்று தோன்றியது. ஆனால் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டால், எப்படிக் கடல் சிறிது பின்னோக்கிச் சென்று, பின்னர் ஆயிரம் மடங்கு சீற்றத்துடன் பெருகிவந்து அனைத்தையும் வளைத்துக் கொள்கிறதோ. அதுபோல், எல்லா கிளைமதங்களும் ஆரம்ப ஆரவாரம் ஓய்ந்ததும் மிகப்பெரியதான தாய்மதத்தால் கவர்ந்திழுக்கப்பட்டு, அதனுள் இரண்டறக் கலந்துவிட்டன.

*அறிவியலின் இன்றைய கண்டுபிடிப்புகள் எந்த வேதாந்தத்தின் எதிரொலிகள் போல உள்ளனவோ*, அந்த வேதாந்தத் தத்துவத்தின் மிக உயர்ந்த ஆன்மீகக் கோட்பாடுகள் முதல் பல்வேறு புராணக் கதைகள் கொண்ட மிகச் சாதாரண உருவ வழிபாட்டுக் கருத்துக்கள், பௌத்தர்களின் சூன்யவாதம், சமணர்களின் நாத்திக வாதம், ஆகிய அனைத்திற்கும் இந்து மதத்தில் இடம் உள்ளது.

அப்படியானால் *ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டு நிற்கின்ற இவை அனைத்தும் ஒன்றுசேரும் பொது மையம் எங்கே இருக்கிறது* என்றகேள்வி எழுகிறது. ஒன்றுசேரவே முடியாததுபோல் தோன்றுகின்ற இவை அனைத்தும் ஒருங்கிணைவதற்கான அடித்தளம் எங்கிருக்கிறது?

இந்தக் கேள்விக்குத்தான் நான் விடைகூற முயலப் போகிறேன்.

— தொடரும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.