நமக்குள் அழகிய சக்திகளும் வலிமையான சக்திகளும் இருக்கின்றன.

நமக்குள் அழகிய சக்திகளும் வலிமையான சக்திகளும் இருக்கின்றன.

இது இறைவனுக்கு மிக நெருக்கமான செயின்ட் ஃப்ரான்சிஸ் அவர்கள் சொன்ன மிகப் பெரிய உண்மை.

அத்தகைய சக்திகளை வெளிப்படுத்தி அதனால் நம் கனவுகளை உண்மையான சாதனைகளாக மாற்ற, நாம் நமக்கு நம்மோடும், இந்த உலகோடும் மற்றும் இறைவனோடும் உள்ள உறவினை சரியாக அறிய வேண்டும்.

யானையைக் காண இயலாத குருடர்கள் தொட்டு உணர்ந்தும் யானையை சரியாக அறியாத முயற்சியைப் போல, நாமும் எத்தனைதான் அறிவு முதிர்ச்சியோடு ஆன்மீக நூல்களைப் படித்தாலும், ஆன்மீகப் பள்ளிகளில் பயின்றாலும், ஆன்மீகம், இறைவன் இவற்றைப் பற்றியே சதா சிந்தித்தாலும், நன்கு கற்ற ஆன்மீகவாதிகளுடன் விவாதித்தாலும், இயற்கையின் அழகிலே இறைவனைத் தேடினாலும், கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் இவற்றில் அவனைக் காண ஓடினாலும் நமக்கு அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை.

இறைவனை அறிய வேண்டும் என்பது ஒரு மகத்தான முயற்சி. சில நாள் போதாது, சில வருடங்கள் போதாது, ஏன் சில பிறவிகளே போதாது.

எனவே “இறைவனை அறிய வேண்டும்” என்ற உன்னத முயற்சியில் எங்கோ மிக மிகத் தொலைவில் நிற்கும் நாம், நாம் ஒவ்வொருவரும் இருக்கும் தொலைவைப் பொறுத்து, இறைவனைக் குறித்து – இறைவன் என்பதே ஒன்று இல்லை என்னும் தத்துவம் தொடங்கி, ‘நானும் இறைவன், நீயும் இறைவன்” என்பது, “எல்லாமே இறைவன்தான்” என்பது வரை நூற்றுக் கணக்கான சிந்தனைகள் கொண்டவர்களாய் இருக்கிறோம்.

உலகம் முழுவதும் ஆங்காங்கே பல நல்ல அன்பர்கள் – அதாவது அன்பே நிறைந்தவர்கள் பிறந்து அன்பைப் பரப்பி இருக்கிறார்கள்.

அன்பு என்ற மிகப்பெரிய இலேசான சக்திதான் இறைவனை அறிய உதவும் மிக வலிமையான சக்தி என்று உணர்ந்தவர்கள்.

அறிவு என்பது இந்த முயற்சியில் மிக கனமான ஆனால் பயனற்ற ஒரு ஆயுதம் என்பதை உலகுக்கு உணர்த்தி இருக்கிறார்கள் இவர்கள்.

உலகம் முழுவதும் ஆங்காங்கே தோன்றி புகழுடன் மறைந்த இவர்களின் இறைத்தன்மை நாம், நம் குழு, நம் சாதி, நம் இனம், நம் நாட்டவர், நம் மதம் என்ற குறுகிய வட்டங்களை மீறியது. இறைவனுடன் உண்மையான நேசம் கொண்டவர்கள் இவர்கள்.

இத்தகைய இறைத்தன்மையார்கள் (spirualists, not religious men) இதை எப்படிச் செய்வது என்று உலகுக்கு சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.

புகழ்பெற்ற இறையன்பர் கலீல் கிப்ரான் தனதுதீர்க்கதரிசிநூலில்உனக்குள்ளே அரைத் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கின்ற விஷயங்களை அவை என்ன என்று அடையாளம் காட்டவோ அல்லது விவரித்துச் சொல்லவோ, வேறு யாராலும் முடியாது” – உன்னைத்தவிர, என்கிறார்.

எனவே நாம் முதலில் நமக்குள்ளே உள்ள சக்திகள்தாம் நாம் எப்படி வாழ்கிறோம் என்று தீர்மானிக்கின்றன என்பதை உணரவேண்டும். அத்தகைய சக்திகளை நாம் உணர்ந்து நெருங்கி அவற்றை வசப் படுத்த வேண்டும் என்பதை அறிய வேண்டும்.

ஆனால் அதற்கு முன்னர்நான் உண்மையில் யார்என்ற கேள்விக்குச் சரியான பதிலைக் கண்டுபிடிக்க வேண்டும்.

அதற்குத் தேவையானது நமது இடது மூளைக்கும் அதன் அறிவுத் திறனுக்கும், அதன் ஒழுங்கு, கட்டமைப்பு, அறிவியல் ரீதியான செயல்களுக்கும் முதலில் ஓய்வு கொடுத்து விட்டு, அதற்குப் பதிலாய் கலைகள், இசை, அன்பு, வேட்கை, வீரம், காதல், தியாகம் முதலிய உணர்ச்சிகளின் உறைவிடமான வலது மூளைக்கு நிறைய வேலை கொடுக்க வேண்டும்.

முதலில் சிறிது நேரம், பிறகு அதிக நேரம், பிறகு சில நாட்கள், பிறகு அதிக நாட்கள் இந்த முயற்சியைத் தொடரத் தொடர, நமக்கும் இறைவனுக்கும் உள்ள இடைவெளி படிப்படியாகக் குறையத் தொடங்கும்.

இடைவெளி குறையக் குறைய நம் பார்வை தெளிவாகும்.

சுத்தமாகத் தெரியாததுகுழப்பமாகத் தெரிவது என்ற நிலையிலிருந்து நம் அகப்பார்வையின் சக்தி கூடிக் கொண்டே போகும்.

இந்தத் தெளிவு பிறக்கும் போதும் அது வளரும்போதும், அதன் விளைவாக நம் உடலும் உள்ளமும் நோய்கள் நீங்கி சக்தி பெறும்.

அதற்கு உங்கள் முயற்சியைத் துவக்குங்களேன்முதலில் அன்பு என்னும் சாதனத்தைக் கையில் எப்போதும் ஏந்தி இருக்க ஆசைப்படுங்களேன்.

—— கணபதி சுப்ரமணியன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.