பொய்யும் பயமும்

பொய்யும் பயமும்

சாதாரணமாக ஒரு தப்புச் செய்தபோது உங்களுக்கு என்ன தோன்றுகிறது ? அது ஓர் அழுக்கு மாதிரி உங்கள் மனசையே உறுத்துகிறது. உடனே அந்த அழுக்கை யாரும் தெரிந்து கொண்டுவிடக் கூடாது என்று அதை மூடி மறைக்கத் தோன்றுகிறது.

நியாயமாக, தவறுதல் உண்டானவுடன் பிரார்த்தனை பண்ணினால், அந்தப் பிரார்த்தனையே சோப்பைப் போல் அந்தத் தப்பை அகற்றிவிடும். அப்படிச் செய்யாமல் தப்பை மற்றவர்கள் தெரிந்துகொள்ளாமல் மூட வேண்டும் என்கிறபோது, பொய் சொல்லவேண்டியதாகிறது. அழுக்கைத் தேய்த்துக் கழுவாமல், மூடி மூடி வைத்தால் சீழ் பிடித்துச் சிரங்காக ஆகிவிடுகிறது. உள்ளத்தை ரொம்பவும் கெடுக்கிற சிரங்கு பொய்தான்.

எதனால் தப்பை மறைக்கப் பார்க்கிறோம் ? ஒன்று, நம்மை மற்ரவர் நல்லவன் என்றே நினைக்க வேண்டும் என்ற பொய் எண்ணத்தினால்; அல்லது இன்னொருத்தரிடம் பயத்தினால் மறைக்கப் பார்க்கிறோம்.

பொய் என்பது சிரங்கு என்றால் பயம் என்பது சொறி மாதிரி. பயம் உள்ளத் தூய்மையைக் கெடுக்கிற அழுக்கு. தப்பு செய்தால் கூட, அதை உணர்ந்து, பணிவுடன் உள்ளபடி பெரியோர்களிடம் சொல்ல வேண்டுமே ஒழிய, பொய்யால் மூடி மறைக்கக் கூடாது. தப்பு செய்தது போதாது என்று, பொய்யும் சொன்னோம் என்பது வெளிப்பட்டு நமக்கு மேலும் அவமானம், கஷ்டம்தான் ஏற்படும். உள்ளபடி சொன்னால் பெரியவர்கள் மன்னித்து விடுவார்கள். மன்னிக்காமல் அவர்கள் தண்டித்தாலும் பரவாயில்லை. அவர்களுக்கு அந்த உரிமை உண்டு. ‘நாம் தப்பு செய்தோம்; அதனால் அதற்குரிய தண்டனையைப் பெறுகிறோம்என்று தைரியத்துடன் தண்டனையை ஏற்க வேண்டும்.

தைரியம், சத்தியம் இவை எல்லாம் மன அழுக்கைப் போக்குகின்ற சோப், சீயக்காய் மாதிரி.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்.

(இந்தப் பாடம் குழந்தைகளுக்கு மட்டும் சொல்லப்பட்டுள்ளது என்று நினைக்கும் பெரியோர்கள், சற்றும் யோசனையின்றி இதை ஒதுக்கி விடலாம். – ந கணபதி சுப்ரமணியன் – 23082017)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.