தமிழ், அழகி மற்றும் வேர்ட்பேட்

தமிழ், அழகி மற்றும் வேர்ட்பேட்

தமிழில் தட்டச்சு செய்ய அழகி என்ற மென்பொருளும், மைக்ரோசாஃப்ட் விண்டோஸின் வேர்ட்பேட் என்ற மென்பொருளும் மட்டும் போதும் என்று தோன்றுகிறது. (இந்த பதிவு இவ்விரண்டு மென்பொருளை மட்டுமே கொண்டு எழுதியது)

நானும் சட்டபூர்வமாக 8 வருடங்களுக்கும் மேல் உபயோகித்து வந்த மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் மென்பொருள் தொகுப்பு செயலற்றுப் போய்விட்ட பின், திருட்டுத் தனமாக ஒரு நகல் மென்பொருள் உபயோகிப்பதில் கணினி உபயோகிக்கக் கற்றுக் கொண்டதில் இருந்து இதுவரை ஒரு 28 வருடங்களாக ஆசைப்படாமல் இருப்பதால், ஓபன் ஸோர்ஸ் எனப்படும் விலையில்லாத மென்பொருட்கள் பலவும் இறக்கம் செய்து நிறுவி பயன்படுத்தியுள்ளேன்.

நான் இதுவரை பயன்படுத்திய பல இலவச மென்பொருட்களின் பெயர்களை கீழே தருகிறேன்:
1. IBM Lotus Smartsuiteஇல் இருக்கும் Wordpro (used for 10 years by me)
2. IBM Lotus Symphonyஇல் இருக்கும் Wordpro (used for 1 year by me)
3. Open Office , K-Office, Libre Office இவற்றில் இருக்கும் Writer ( Writer in Libre Office used by me now for about 3 months) ( These were used by me in Home PC having multiboot Operating Systems – Windows XP, Windows 8.1/10, Free BSD, Linux OS )
4. AbiWord
5. Jarte
6. Notepad ++
7. LyX
8. FocusWriter

Microsoft Office, Libre Office, IBM Lotus Wordpro இவை மூன்றும் முழு வலிமை பெற்ற எழுதுவதற்கான மென்பொருட்கள். இவற்றில் பல பயனுள்ள வசதிகள் இருக்கின்றன. புத்தகம், சிறு ஏடு, ப்ராஜக்ட் ரிபோர்ட் பலவற்றை நான் இப்பொருட்களின் உதவியோடு தயாரித்திருக்கிறேன். எனினும் இத்தகைய முழு மென்பொருட்கள் தரக்கூடிய அனைத்து வசதிகளும் சில சமயங்களில் தேவைப்படாது. சிலசமயங்களில் அவற்றின் அருகாமையும் அவற்றின் அதிகப் பிரசங்கித் தனமும், நீண்ட ஒரு கட்டுரையோ அல்லது ஒரு ரிபோர்ட்டோ தயாரிக்கும்போது நம் சிந்தனை ஓட்டத்தைத் தடை செய்யும்.

சிந்தனை ஓட்டம் தடைபெறாமல் இருக்க, உலகமுழுவதும் பல எழுத்தாளர்கள் பெரிய மென்பொருள் பயன்படுத்தாமல், எளிய மென்பொருளையே பயன்படுத்துகின்றனர். அவற்றில் மிகச் சிறந்தது மேலே 7, 8 எண்ணில் குறிப்பிட்டவை.

ஆனாலும் இவை Unicode எழுத்துக்களை ( தமிழ் எழுத்துக்களை தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் – Thamizh for typing தமிழ் – Unicode ஃபாண்டை உபயோகிக்கலாம்.) ஏற்றுக் கொள்ளவில்லை. அழகி மென்பொருளைத் தவிர நான் குறள் மென்பொருளைக்கூட உபயோகித்தும் இவை ஏற்றுக் கொள்ளவில்லை.

எனவே ஆங்கிலத்தில் எழுத (அதாவது தட்டச்சு செய்ய) என் மடிக் கணினியில் நான் நிறுவியுள்ள LibreOffice, தமிழில் எழுத (அ..த..செ..) Wordpad and Azhagi+ என்று முடிவு செய்து, நான் முதலில் தட்டச்சு செய்த (அதாவது எழுதிய!) முதல் முயற்சி இது.

(கணினி உபயோகிப்பதில் நான் அடைந்துள்ள அனுபவங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுத சிலர் வற்புறுத்தி வருகின்றனர். ஆயினும் கீழக்கண்ட காரணங்களால் (எனக்கு Windows System Administration, Linux System Administration, Cobol Programming in Unix, Windows Networking, Excel Macro/VB programming இவற்றில் நெடுநாள் பரிச்சயம் மற்றும் வெற்றிகரமான செயல்பாடு இருந்தும்கூட) நான் இதுவரை எழுத எத்தனிக்க மனம் மறுத்துவிட்டது:

1. பள்ளியிலோ, கல்லூரியிலோ அல்லது வெளியே உள்ள கணினி கல்வி நிறுவனங்களிலோ இவற்றைப் படித்து பட்டம் வாங்கவில்லை.

2. வீட்டில் ஒரு புது கணினி ஒன்றை, கடைக்குச் சென்று பல தனித்தனி பாகங்களாக வாங்கிவந்து அசெம்பிள் செய்து, காசுகொடுத்து விண்டோஸ் ஓஎஸ் வாங்கி நிறுவி, அதே கணினியில் ஒரே நேரத்தில் Fedora Linux, Caldera Linux, Free BSD, Open Solaris, Mandriva Linux, Open Suse Linux இவற்றை நிறுவி, மல்டிபூட் சிஸ்டமாக ஒருவருடம் நண்பர்களிடம் காட்டி பெருமை பீற்றிக் கொண்டாலும், ஹார்ட்வேர் பற்றி படித்து ஒரு டிப்ளோமாகூட வாங்கவில்லை.

3. முழுக்க முழுக்க என் அறிவு, கணினி உபயோகிப்பாளராக, ஏற்படும் பிரச்னைகளை னானே தீர்க்கும் முயற்சியிலும், ஹெல்ப் மெனுக்களை முழுவதும் படித்தும், வாங்கிய புத்தகங்களைப் படித்ததனால் மட்டுமே கிடைத்துள்ளது.

4. எனக்கு touch typewriting அதாவது asdfg :lkjh என்ற முறையில் அடிக்கக் கற்கவில்லை. 3 அல்லது 4 அல்லது 5 விரல்களைக் கொண்டுதான் தட்டச்சு செய்கிறேன்.)

——– இதுவரை பொறுமையாகப் படித்தவருக்கு மட்டும் நன்றி—–
——— கணபதி சுப்ரமணியன் 06.ஆகஸ்ட்.2017

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.