ஒரு சாமானியனின் வரலாறு – 9

ஒரு சாமானியனின் வரலாறு – 9

பாராட்டும் திட்டும்

1976-77ல் தஞ்சாவூர் இந்தியன் பாங்க் பெரிய கிளை. கார் வைத்து இருந்த சில கிளைகளில் ஒன்று.

க்ளியரிங்குக்கு தினமும் வரும் காசோலைகளும் வரைவோலைகளும் சராசரி 400க்கும் மேல்தான். தினமும் சராசரி சுமார் 3000 பணப் பரிவர்த்தனை ( transaction vouchers )  நிகழும். Documentary Bills for collection / purchase தினமும் 100க்கு மேல் இருக்கும். DD/MT (Demand Draft / Mail Transfer) மட்டும் தினமும் 150க்கும் மேல் இருக்கும்.

ஒருமுறை நான் மூன்றாவது கரண்ட் அக்கவுண்ட் செக்ஷனில் வேலை செய்தேன். ஒரு மாதம் முதல் வாரம் நிறைய ஊழியர்கள் விடுப்பில் சென்றிருந்தனர். தமிழ்நாடு மின்வாரியத்தின் கணக்கு எங்கள் வங்கியில் இருந்தது. LIC, முனிசிபாலிடி, சர்வோதய சங்கம் முதலிய கணக்குகளும் இருந்தன. கரண்ட் அக்கவுண்ட் செக்ஷனில் மூன்று உழியர். கரண்ட் அக்கவுண்ட், OD/OCC,  அரசாங்க கரண்ட் அக்கவுண்ட் என்று மூன்று பிரிவாய் இருந்தது. மூன்றாவதில் நான் இருந்தேன்.

விடுப்பில் நிறைய ஊழியர் இருந்ததால், 3 கேஷ் கவுண்டரில் ஒன்றில் ஆள் இல்லை. கூட்டம் வேறு நெருக்கித் தள்ளியது. 10 மணிக்கு ஆரம்பித்து 11 மணிக்குள் 85 TNEB  cheques  பணப் பட்டுவாடா செய்வதற்காக வந்தன. மாதாமாதம் TNEB  மட்டும் ஒரு நாளில் 400க்கும் அதிகமாக காசோலைகள் பட்டுவாடாவுக்கு வரும். கிளையில் கூட்டம் நிரம்பி வழிந்ததால், வங்கிக்கு வெளியேயும் இருந்தது. பணம் பட்டுவாடா செய்ய ஆள் இல்லாததால்  TNEB ஊழியர் பொறுமை இழந்தனர். கிளை மேலாளர் அறைக்கு கூட்டமாகச் சென்று தாங்கள் பணத்தை பெற்று வெளி ஊர்களில் இருக்கும்  TNEB யின் பல யூனிட்டுகளின் உழியருக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று கூச்சல் இட்டனர்.

யாராலுமே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை. நான் மேலாளரிடம் சென்று, நான் கேஷ் கவுண்டரில் அமர்கிறேன் என்றேன். என் செக்ஷனில் யாரைப் போடுவது என்று கேட்டார். என்னிடம் அரசாங்க கணக்குகள் தாம் உள்ளன. அதில் எப்போதும் போதுமான நிதி இருக்கும். பெரும்பாலான கணக்குகளை இயக்கும் அதிகாரிகள் கையெழுத்து எனக்குத் தெரியும். எனவே காசோலையை சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு காசோலையைப் பெற்று உடனே பணம் பட்டுவாடா செய்கிறேன் என்றேன். “ரொம்ப ரிஸ்க்குப்பா, பணம் போனால் நீதான் கட்டணும். பாக்கி ப்ரொசீஜர்லாம் எப்படிப்பா யார் செய்யறது ?” என்று கேட்டார்.

ஒரு வாடிக்கையாளர் பணம் பட்டுவாடா வேண்டும் என்றால் (1) முதலில் காசோலையை அந்த செக்ஷனில் தந்து டோக்கன் பெற்றுக் கொள்ளவேண்டும் (2) ஊழியர் 1000 பக்கம் கொண்ட கனமான உயரமான கரண்ட் அக்கவுண்ட் லெட்ஜரில் அந்தக் கணக்கில் அந்தக் காசோலையை பற்று எழுதி நிலுவைத் தொகையைக் குறைக்கவேண்டும் (3) அவ்வாறு பதியப்பெற்ற காசோலையை டோக்கன் ரிஜிஸ்டரில் (பேமெண்ட் ரிஜிஸ்டர்) எழுதி காசோலையுடன் வைக்கவேண்டும் (4) கடைநிலை ஊழியர் அந்த டோக்கன் ரிஜிஸ்டரை எடுத்துக் கொண்டுபோய் உரிய அதிகாரியிடம் வைப்பார் (5) அதிகாரி சரிபார்த்துவிட்டு, பணம் வழங்கலாம் என்னும் உத்தரவை காசோலையின்மீது எழுதி (அல்லது ரப்பர்ஸ்டாம்ப் உபயோகித்து) காசாளரிடம் அனுப்புவார் (6) காசாளர் அந்தக் காசோலையைப் பெற்றுக் கொண்டு வாடிக்கையாளரை அழைப்பார் (7) டோக்கனைப் பெற்றுக் கொண்டு அவரிடம் பணத்தைக் கொடுப்பார்.

( CBS  என்னும் தற்காலத்திய கணினி இணைப்பு வசதி 40 ஆண்டுகளுக்கு முன் எந்த நாட்டிலும் எந்த வங்கியிலும் இல்லை )

இதைத் தவிர வங்கியில் வேலை பார்த்தோருக்குத் தெரியும் வேறு சில கட்டுப் பாடுகளும் இருந்தன – ஆபீஸர் வேலையை க்ளார்க் செய்யக் கூடாது, க்ளார்க் வேலையை ஆஃபீஸர் செய்யக்கூடாது என்றெல்லாம் நிறைய இருந்தன. மீறிப் பார்த்தால் நிர்வாகத்தில் தகராறு ஏற்படும். ஆனால் இவையெல்லாம் எனக்கு அப்போது தெரியாது.

“சார் நான் பேமெண்ட் எல்லாம் ஆனபின் எல்லா செக்கையும் டோக்கன் ரிஜிஸ்டரில் எழுதித் தருகிறேன், லெட்ஜரில் டெபிட் செய்து தருகிறேன். ஆஃபீஸர் அதற்கப்புறம் Pay Cash order  போடட்டும், டோக்கன் எண்ணை மாறிமாறிப் போட்டுக் கொள்கிறேன்” என்றதும் சரி போய் உட்கார் என்று உத்தரவிட்டார். உயர்திரு விஜயகுமார் என்பவர்தான் முக்கிய காசாளர். அவரிடம் பத்து லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டு முதன்முதலில் கேஷ் சீட்டில் வேலை பார்த்தேன். 370 பேமேண்டுகள். நல்லவேளை மீதி நிலுவைப் பணம் சரியாக இருந்தது.  மேலாளரிடம் சொன்னபடி எல்லா வேலையையும் செய்து முடித்தேன்.

அனேகமாக எல்லா ஊஃழியரும் அதிகாரிகளும் என்னை மிகவும் கோபமாக முறைத்தனர். “பெரிய தப்பு செய்துவிட்டாய்” என்று அக்கவுண்டன்ட் மிரட்டினார். “மாலையில் ஒரு ஸ்டாஃப் மீட்டிங்” கட்டாயம் போடவேண்டும் என்று ஊழியர் தலைவராகவும் இருந்த விஜயகுமார் மேலாளரிடம் சொல்லிவிட்டார்.

எல்லா ஊழியரையும் இருக்கச் சொல்லி, மீட்டிங் ஐந்தரை மணிக்குத் தொடங்கி ஏழுமணி வரை நடந்தது.  நிர்வாகத்தை எல்லா ஊழியரும் திட்டினர். என்னையும்தான். எல்லோரும் மிகவும் சூடாக இருந்ததால், சூடாக வந்திருந்த கேசரியும் பஜ்ஜியும் யாருமே சூடு ஆறிப் போய் யாரும் தீண்டாததால் தற்கொலை செய்துகொண்டன.

“ஸ்டேட் பாங்கில் கூட 50000 ரூபாய் வரையில்தான் டெல்லர் சர்வீஸ் உண்டு. ஆனால் இங்கு நம் புது ஊழியர் இரண்டு லட்சம் வரை டெல்லர் சர்வீஸ் செய்துள்ளார். அதனால் அவர்மீது மேலாளர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்தப் புது ஊழியரை இவ்வாறு செய்ய அனுமதித்த மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயரதிகாரியைப் பார்த்து நாங்கள் கேட்கிறோம்.” என்றனர். யாரும் எதையும் சாப்பிடாமலே வீடு சென்றோம்.

மறுநாள் காலையில் வந்தவுடன் நான் முதலில் விஜயகுமார் அவர்களைப் பார்த்து என்னை மன்னித்து விடும்படியும், நான் வேலையில் இருந்து போய்விடுகிறேன் எனவும் சொன்னேன். உடனே அவர் என்னிடம் “தம்பி, உன்மேல் தவறில்லை. கஸ்டமர் சர்வீஸ் செய்யவே நீ இதைச் செய்தாய். ஆனாலும் நீ ஊழியன் என்ற முறையில் எங்களைக் கேட்டுதான் எதையும் செய்யவேண்டும்” என்றார். “இதெல்லாம் தேவையில்லாத ரிஸ்க், இனிமேல் இதுபோல் செய்யாதே” என்று விட்டுவிட்டார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.