ஒரு சாமானியனின் வரலாறு – 5

ஒரு சாமானியனின் வரலாறு – 5

மேனேஜருடன் உரையாடல்

மேனேஜர் தன்செலவில் இனிப்பு, காரம், காப்பி வாங்கி எல்லோருக்கும் கொடுத்தார். எல்லோருக்கும் என்னை அறிமுகம் செய்துவைத்தார். அதில் ஒருமுகம் கூட பார்த்த முகம் இல்லை.

மறுபடி வந்து மேனேஜர் அறையில் அமர்ந்தோம். “தம்பி, நீ ஏன் கடைசி நாள்வரை காத்திருந்து இப்போது வருகிறாய். உனக்கு ஆர்டர் வந்து ஒரு மாதம் ஆகுதே.” என்றார்.

“சார், நான் MCom படிச்சிட்டு இருக்கிறேன் சார். நேற்றுதான் காலேஜில் சென்று நாளைமுதல் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு வந்தேன். எனக்கு Final Exams மே மாதம் இரண்டாம் வாரம் ஆரம்பிக்கின்றன.” என்றேன்.

“அடடா, இப்ப வந்த ஆர்டர் அடுத்த மாதம் வந்திருந்தால் நீ பரீட்சை முடித்து நிம்மதியாக வேலையில் சேர்ந்திருப்பாய்”

அதற்கப்புறம் அவர் கேட்டது எனக்குப் பிடிக்கவில்லை. ஏதோ மனைவி கேட்பதைப் போல அவர் “ நீ எத்தனை வேலைகளுக்கு விண்ணப்பித்தாய், எத்தனை வேலை கிடைக்கவில்லை, அல்லது இது ஒன்றுதான் நீ விண்ணப்பித்தாயா” என்றார்.

சொன்னேன்: “ 14 வேலைக்கு அப்ளை செய்தேன் சார். ஆனால் இது மட்டும்தான் க்ளார்க் வேலைக்கு.”

“அதெல்லாம் ரிஜெக்ட் ஆகிவிட்டதா, அதனால்தான் இதில் வந்து சேர்கிறாயா” என்று கேட்டார்.

நான் கோபத்துடன் “ இல்ல சார், ஆறு வேலைக்கு இன்டர்வியூ வந்து 5  கம்பெனியில் இருந்து ஆர்டர் வந்துள்ளது. நான் தான் போகவில்லை.”

“நல்ல பையன் என்று செட்டியார் விசாரித்து சொல்கிறார்’ பொய் மட்டும் சொல்வாய் போல இருக்கிறது. எந்தெந்த வேலை சொல்” என்றார்.

நான் சொன்னது: “  Management Trainee post in Macneil & Magor, Management Trainee post in JK, Trainee Manager in MMTC, Probationary officer in Bank of India, Officer Trainee in Larsen and Toubro “ என்று கூறியதை அவர் நம்பவில்லை என்று அவர் கண்கள் உணர்த்தின.

“எந்த மடையன் அப்படி கையில் ஆர்டரை வைத்துக் கொண்டு இந்த வேலைக்கு வருவான். உன்னை புத்திசாலி என்று வேறு செட்டியார் சொன்னாரே. பிரயோஜனம் இல்லை. எங்கள் வங்கிக்கு பொய் சொல்பவன் தேவையில்லை” என்றார்.

ஹேன்ட்பாக்கில் இருந்து அந்த ஐந்து நியமனக் கடிதங்களையும் அவற்றில் மூன்றுக்கு நான் இன்னும் இரண்டுமாதம் அவகாசம் கேட்ட கடிதங்களின் நகல்களுடனும் அவர்முன் வைத்தேன்.

அவர் முகம் மாறிவிட்டது. கண் சிவந்து விட்டது. என் கையைப் பிடித்துக் குலுக்கினார். “ஏம்பா, இப்பொ நீ சைன் பண்ணியே வேலையில் சேர்வதற்காக. கையெழுத்துப் போடச் சொல்லி நான் உனக்குத் தப்பு பண்ணி விட்டேனா” என்று கேட்டவாறு அன்புடன் என் தோளில் கைவைத்தார்.

அவர் கையைப் பிடித்து என் கண்ணில் வைத்து வணங்கினேன்.

“சார், நீங்க ஒண்ணும் தப்பு பண்ணல. இந்த வேலையில் நான் சேர்வதும் ஒன்றும் தப்பு இல்லை. எனவே நீங்கள் வருந்த வேண்டாம், நான் விரும்பித்தான் இந்த வேலையில் சேர்கிறேன்” என்றேன்.

“என்ன காரணம், அப்படி என்னப்பா உனக்கு நிர்ப்பந்தம்?” என்று கேட்டார்.

“அது ஒரு பெரிய கதை சார். அப்புறம் சொல்கிறேன் சார்” என்று சொல்லிவிட்டு அவர் அனுமதியுடன் வெளிவந்தேன்.

எனக்கிருந்த நிலையில் தோன்றியது ஒன்றுதான். “அப்பாவிடம் போய் என்ன சொல்வது?”

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.