ஒரு சாமானியனின் வரலாறு – 10

ஒரு சாமானியனின் வரலாறு – 10

வேலையில் போட்டி

இன்னொரு நிகழ்ச்சியும் என் நினைவுக்கு வருகிறது. பம்பாயில் (இப்போது மும்பை) அதிகாரியாக வேலை பார்த்த ஒருவர், உடல்நலம் குன்றிய தன் தாயைப் பார்த்துக் கொள்ள வேண்டி தமிழ்நாட்டுக்குக் கேட்டிருந்த மாறுதல் நிராகரிக்கப் பட்டதால், அவர் திரும்பவும் க்ளார்க் ஆகவே திரும்பியவர். அவர் உயர்திரு நாகராஜன் அவர்கள். முக்கியமான பணியான கடன் நிர்வாகப் பகுதியில் (கொடுத்தல், பராமரித்தல், வசூலித்தல்) இருந்தார். அவர் ஆங்கில அறிவும், தொழில்துறையில், பெருங்கடன் தருவது பற்றிய நுட்ப அறிவும் மிகப் பெற்றவர். மிகவும் திறமையானவர். அவருக்கு எங்கள் கிளையில் மட்டுமல்லாது மற்ற கிளைகளிலும் நல்ல பெயர் இருந்தது. அவருக்கு மேல் அதிகாரி கிளை மேலாளர்தான்.

மேலாளர் அவரிடம் மிகவும் மரியாதையாகத்தான் பேசுவார். கடன் பிரிவைப் பொறுத்தவரை கிளை மேலாளர் சொல்வதைவிட அந்தத் திறமைசாலி சொல்வதுதான் நிற்கும். அவர் நீண்ட காலமாய் கடன் பிரிவில் பணி புரிவதால் அது அடிக்கடி மாறிக் கொண்டிருக்கிற கிளை மேலாளர்களுக்கு ஒரு வசதியாய் இருந்ததால், வருடம் ஒருமுறை seat rotation இல் அவர் மட்டும் அதே பிரிவில்தான் இருப்பார். இது மற்ற ஊழியர்களுக்கு வருத்தமாய் இருக்கும்.

ஒருமுறை அவர் உடல்நலம் சரியில்லாததால் 10 நாள் விடுப்பில் சென்றிருந்தார். நிறைய வாடிக்கையாளர்கள் அரசு உத்தியோகத்தில் இருப்பவர்கள் 10, 20 பேரில் ஆரம்பித்து சிலநாள் 40-50 பேர்கூட திரு நாகராஜன் அவர்களைத் தேடி வருவர். விசாரித்தபோது  அவர்கள் CDS  கணக்கு பாஸ்புத்தகத்தை அந்த வருடம் கட்டிய பணத்தின் ஒரு பகுதி திரும்பிப் பெற விண்ணப்பமான  Form E ஐ ஒருமாதம் முன்னரே கொடுத்துவிட்டு காத்திருந்தனர்.

CDS  என்பது  Compulsory Deposit Scheme  என்பதாகும்.  தற்காலத்தில் வருமான வரியைக் குறைக்க  Section 80C முதலீடு போன்றது. வருடாவருடம் கட்டியதில் ஐந்துவருடம் கழித்து ஒவ்வொரு வருடமும் கட்டிய தொகையில் ஐந்தில் ஒரு பாகமும் நிலுவைத்தொகைக்கு வட்டியும் திரும்பிப் பெறலாம்.

இப்படி வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வந்தது. ஒரு சனிக்கிழமை அன்று மட்டும் வந்தவர் எண்ணிக்கை 100க்கும் மேல். நான் சென்று மேலாளரிடம் அந்த வேலையை நான் செய்யலாமா என்று கேட்டேன். அவர் செய்யக்கூடாது, மிகவும் கடினமான அரசாங்கக் கணக்கு சம்பந்தமான காரியம். தவறு செய்தால் வருமான வரித் துறையும் நமக்கு தண்டனை விதிக்கும் என்றார்.

அடுத்த நாள் நான் ஸ்டேட் பாங்க் சென்று CDS  பற்றி அறிந்து வந்தேன். முக்கிய விதிகள், படிவங்கள் பற்றியும் எவ்வாறு வட்டி கணக்கிடப் படுகிறது என்பது பற்றியும் அறிந்து வந்தேன். எங்கள் கிளை மேலாளரிடம் சென்று இதைச் சொல்லி அனுமதி கேட்டேன். அவர் திரு நாகராஜனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவர் உடல் நிலை இன்னும் சரியாகவில்லை என்றும் இன்னும் 10 நாள் ஆகும் என்றார் அவர். மேலாளர்  CDS  கணக்குகள் 300 பேருக்கும் மேல் புகார் செய்துள்ளனர் என்றும் நான் போய் ஸ்டேட் பாங்கில் கற்று வந்திருக்கிறேன் என்று கூறவே, அவர் அரைமனதாக நீங்கள்தான் முடிவுசெய்யவேண்டும், அவர்மேல் நம்பிக்கை இருந்தால் நீங்கள் அவரைக் கொண்டு செய்துகொள்ளுங்கள். ஆனால் ஒன்று, அடுத்தவருடமும் நான் செய்யமாட்டேன், வேறு யாராவது செய்யவேண்டும் என்று கூறிவிட்டார்.

அடுத்த நாள் என்னை அழைத்த மேலாளர் என்னை செய்ய அனுமதித்தார். அவரிடம் இருந்த கடன்பிரிவு அலமாரிகளின் சாவியை எடுத்துவந்து என்னுடன் வந்து அலமாரிகளைத் திறக்கச் சொன்னார். ஒரு அலமாரியைத் திறந்தவுடன் ஏற்கனவே உள்ளுக்குள் சரிந்திருந்த கட்டுக்களில் இருந்து நூற்றுக்கும் மேல் CDS Passbook கள் வெளியில் விழுந்தன. இன்னொரு அலமாரியில் நிறைய பாஸ்புக்குகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன.

அவற்றை எடுத்து நன்றாகச் சோதித்ததில் 700க்கும் அதிகமான கையெழுத்திடப்பட்ட  Form E களும் பாஸ்புக்குகளும் இருந்தன. மேலாளருக்கு அதிர்ச்சியாகி விட்டது. இவ்வளவு பாஸ்புக்குகள் காத்திருக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

அந்த வாரம் முழுதும் எனக்கு மற்ற வேலையில்லை என்றும் இந்த வேலையை முடித்தால் போதும் என்று சொன்னார்.

நான் எடுத்துக் கொண்டது 2 நாட்கள்தான். 700 கணக்குகளுக்கும் வட்டி கணக்கிட்டு பாஸ்புக்கிலும் எங்கள் அலுவலகக் கணக்கேட்டிலும் பதிவுகள் செய்து, வட்டியும் ஒரு பகுதியும் திரும்பித் தர வவுச்சர்களும் தயார் செய்து இரண்டாம் நாள் மாலை மேலாளரின் மேசையில் வைத்துவிட்டேன். அவர் இல்லை.

அடுத்த நாள் காலையில் என்ன இது எல்லாவற்றையும் என் டேபிளில் வைத்திருக்கிறாய் என்று கேட்க, அவை அவர் சரிபார்த்துக் கையெழுத்திட காத்துள்ளன எனவும், மிகவும் ஆச்சரியம் அடைந்தார். என்னை உட்காரவைத்து 10 கணக்குகளில் எவ்வாறு நான் கணக்கிட்டு இருக்கிறேன் என்று சொல்லச் சொன்னார். பிறகு என்னை என் வழக்கமான சீட்டுக்கு அனுப்பிவிட்டார். மதியம் 1 மணிக்குள் எல்லாவற்றையும் சரிபார்த்து விட்டார்.

இவ்வாறு அடுத்த 4 நாட்களில் எல்லோருக்கும் திரும்பப் பெறவேண்டிய தொகையும், பாஸ்புக்கும் கொடுக்கப்பட்டன.

அடுத்தடுத்த வாரம் திரு நாகராஜன் வேலைக்கு வந்தவுடன் அவரிடம் இதைச் சொல்லி பெருமைப் பட்டிருக்கிறார். திரு நாகராஜன் என்னைக் கூப்பிட்டு பாராட்டினார். இனிமேல் ஒவ்வொரு வருடமும் என்னையே வைத்து இந்த வேலையைச் செய்துவிடலாம் என்று கூறினர்.

இன்னொரு சோதனை

ஒருமுறை எங்களிடம் கணக்கு வைத்திருந்த விசைநெசவுத் தொழிலில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு தங்கள் தொழிற்சாலைக்கு சில இயந்திரங்கள் அயல்நாட்டில் இருந்து இறக்குமதி செய்ய ரூபாய் 2 கோடி கடன் வேண்டி இருந்தது. அதற்காக விண்ணப்பம் ஒன்று தருவதாய் இருந்தது. அவர்கள் விண்ணப்பம் தருவதற்கு முன்னர் ஒருநாள் திரு நாகராஜன் அவர்கள் மேலாளரிடம் தான் ஒருமாதம் LTC  விடுப்பில் செல்வதால் இந்த வேலையைத் தன்னால் செய்யமுடியாது என்றும் இந்த வேலைக்கு ப்ரபோசல் தயார் செய்ய ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் என்றும், திரு கணபதி சுப்ரமணியனை வைத்து முடித்துக் கொள்ளுங்கள் என்று கூறியதும் மேலாளருக்கு அதிர்ச்சி ஆயிற்று. வியர்த்துவிட்டது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.