கருடப்பத்து

கருடப்பத்து

ஓம் பூரணனே பதினாறு திங்கள் சேரும் பொருந்தியே யருக்கன் பதினெட்டுஞ் சேரும் காரணனே கருமுகில் பொன்மணி சேருங்கருணைபெரு மஷ்டாக்ஷரங் கலந்து வாழும் வாரணனே லட்சுமியோ டெட்டுஞ் சேரும் மதிமுகம் போல் நின்றிலங்கு மாயா நேயா ஆரணனே ரகுராமா கருடன்மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே (1)

மந்திரமோ அஷ்டசித்துமெட்டுஞ் சேரும் வாழ்கிரகமொன்பதுமே வந்துசேரும் கந்தர்வர் கணநாத ராசி வர்க்கம் கலைகியான நூல் வேதங்கலந்து வாழும் ந்ந்தி முதல் தேவர்களுங் கவனயோகம் நமஸ்கரித் துன்பாதம் நாளும் போற்ற அந்தரமாய் நிறைந்திருக்கும் கருடன்மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே (2)

மூலமுதலோரெழுத்து நீர்தானாகும் மூன்றெழுத்து மைந்தெழுத்து மொழியலாமோ சீலமுதல் ஓம் அங் உங் மங் ரீங்கென்றே சிவனுடைய திருநாமம் நீதானாகும் காலமுதல் ஓம் அங் உங் மங் ரீங் கென்றே கருணைபெருமிவ்வெழுத்து நீர்தானாகும் ஆலவிஷங் கையேந்துங் கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே (3)

நவ்வென்றும் கிலியென்றும் ஓம் சிவாயவென்றும் நமநம சிவசிவ ராரா வென்றும் சவ்வென்றும் ஓங்கார ரீங்காரமாகித் தவமுடைய இவ்வெழுத்தும் நீதானாகும். ஒவ்வொன்றும் ஓம் நமோ நாராயணா வென்று உன்பாத முச்சரிந்துபோற்ற அவ்வென்று ரகுராமா கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே (4)

உதிக்கின்ற சிவசொரூப முனக்கேயாகும் ஓம் அவ்வும் உவ்வுங் கிலியுமென்றே பதிக்கைசைந்த ஐந்தெழுத்தை வெளியில் விட்டே பச்சைமுகில் மேனியனே பனிந்தெனுன்னை விதிக்கிசைந்த மெய்ப்பொருளே அரிகோவிந்த விளக்கொளி போல் மெய்த்தவமே விரும்பித் தாதா அதற்கிசைந்த நடம் புரியுங் கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் புரியாவே (5)

வேதமுதலாயிருந்த சிங்கரூபம் விளங்குகின்ற விரணியனை வதையே செய்தாய் பூதமுதலாம் பிறவும் புண்ணியநேயா புகழ்ந்தவர்க்குத் துணை வருவாய் யசோதைபுத்ரா நாதமுல் வித்துவாயுயிர்க்கெல்லாம் நயம் பெறவே நிறைந்திருக்கும் வாதபிரம யாதவன் போல் நிறைந்திருக்கும் கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே (6)

முக்கோண நாற்கோண மொழிந்தைங்கோண முச்சுடரே யறுகோண மெண்கோண மாகும் ஷட்கோண நாற்பத்துமூன்று கோணம் தந்திரமுஞ் சிதம்பரமுஞ் சகலசித்தும் இக்கோணம்  இதுமுதலாய் வகாரமட்டும் இறைவனாய்த் தானிருந்துரட் சித்தாலும் அக்கோண மீதிருந்து கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே (7)

பச்சை முகில் மேனியனே உனக்கு இந்த பார்தனிலே பத்தவதாரமுண்டு மச்யமென்றும் கூர்மமென்றும் வராகமென்றும் வாம(ன)மென்றும் ராமன் என்றும் பவித்யமென்றும் துஷ்டரையடக்க மோகினி வேடங்கொண்டு தோன்றினாயுன் சொரூபமெல்லாம் அறிவாருண்டோ அச்சந்தீர்த்தெனையாளக் கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே (8)

வேதியனாய்த் தோன்றி வந்தாய் மாபலிக்கு விண்ணவர்க்காய் நரசிங்கரூபமானாய் சாதியிலே யாதவனாய்க் கிருஷ்ணனாகத் தானுதித்து வந்திருந்தாய் தரணி வாழ்க சோதனைகள் பார்த்திடுவோர் துதிப்போர் தம்மைத் துஷ்டரையும் வதை செய்து லோகமாள்வாய் ஆதிமுதலோரெழுதே நீ கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே (9)

மாயவனே ரகுராமா, அருகே வாவா வஞ்சனைகள் பறத்தோட நெஞ்சில் வாவா காயம்பூ நிறமுடனே கனவில் வாவா கருமுகல் மேனியனே என் கருத்தில் வாவா நாயகனே யென்னாவி லிருக்க வாவா, நாள்தோறு முன்பாதந் துதிக்க வாவா ஆயர்குலத் துதித்தவனே கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே (10)

முப்புரத்தை யெரித்தவனே இப்போ வாவா முகில் நிறத்தவனே ஜகந்நாதா முன்னே வாவா எப்பொழுதுந் துதிப்பவர் பங்கில் வாவா ஏழைபங்கிலிருப்பவளே இறங்கி வாவா ஒப்பிலாமணி விளக்கே யொளிபோல் வாவா ஓம் நமோ நாராயணா வுகந்து வாவா அப்பனே ரகுராமா கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே (11)

துளசிமணி மார்பழகா சுகத்தைத் தாதா சுருதியே மெய்ப் பொருளே வரத்தைத் தாதா களப கஸ்தூரியனே கடாக்ஷந் தாதா கஞ்சனைமுன் வெண்றவனே கருணை தாதா மரம் பொருளே சிவஜோதி பாக்கியுந் தாதா பக்தி முத்தி சித்தி செய்யவுன் பாதந் தாதா அளவலா மெய்ப்பொருளே கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே (12)

***

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.