இலக்கும் தன்னம்பிக்கையும்

நம் முன்னேற்றப் பாதையில் நம் இலக்கு என்பது ஒரு வித்து போன்றது. அது முளைத்து வந்து  இலை விட்டு, செடியாகி, மரமாகி, பூத்துப் பின் மலர்ந்து மணம் பரப்பி, காய்த்துக் கனியாகி வாழ்க்கையை இனிமையாக்க தன்னம்பிக்கையே ஆதவனின் ஒளியாகவும், பூமித்தாயின் மண்ணாகவும், உரமாகவும், இயற்கையின் காற்றாகவும், நீராகவும் அமையும்.

எனவே தன்னம்பிக்கையை ஒருகாலும் இழக்கக்கூடாது. சோதனையான காலங்களில், நம் இலக்கையும் அதை அடைவதால் நாம் எட்டப்போகும் உயரத்தையும் அது தரும் மனமகிழ்ச்சியையும் நினத்து, ஓடிக்கொண்டிருக்கும் குதிரை எவ்வாறு கண்களை இடப்பக்கம், வலப்பக்கம் பாராது சாலையைப் பார்த்து ஓடிக்கொண்டிருப்பதுபோல, புராணத்தில் எவ்வாறு வில்லாளனாகிய அருச்சுனனின் கண்கள் இலக்காகிய பறவையின் கண்களைத் தவிர வேறு எதையுஇம் பார்க்க மறுத்தனவோ, அவ்வாறு பிறர் பேச்சுக்களுக்கோ அல்லது நாம் இலக்கை நோக்கிச் செல்லும் பாதையில் ஏற்படும் இடர்களையோ பொருட்படுத்தாமல் சென்றால்தான் இலக்கை அடைய முடியும். அதற்கு தன்னம்பிக்கையே ஒரே தாரக மந்திரம்.

‘What ye think, ye become !’ , ‘You are creating your world by the quality, goal and colour of your thought’, என்றும் பலவகைகளில் நம் எண்ணத்தின் சக்தி பற்றி கூறியிருக்கிறார்கள். ஒரு பிரபலமான கவிதை இவ்வாறு கூறுகிறது: “SUCCESS BEGINS WITH A FELLOW’S WILL; It’s all in a state of mind, Life’s battles don’t always go to the stronger or faster man; But sooner or later The man who wins IS THE ONE WHO THINKS HE CAN!”. வேதங்கள், இறைவனின் சக்தி பற்றியும் பக்தர்களுக்கு உதவ வரும்போது அவர் கொள்ளும் வேகத்தைப் பற்றியும் கூறும்போது, ‘அவர் மனத்தை விட வலிமையானவர்’ , ‘அவரின் வேகம் மனத்தின் வேகத்தை விட அதிகம்’ என்றுதான் உவமை சொல்கின்றன. உலகில் உள்ள அல்லது நம்மில் உள்ள வேறு எதையும் உவமைக்கு எடுத்துக்கொள்ள வில்லை. எனவே மனம் என்பது அத்தனை சக்திவாய்ந்தது, இறைசக்திக்கு அடுத்தபடி சக்திவாய்ந்தது, உலகில் உள்ள மற்ற எல்லாவற்றையும் விட சக்திவாய்ந்தது என்பதை நாம் உணரவேண்டும்.

ஆனால் அந்த மனம் அழுக்கில்லாது இருந்தால்தான் அந்த மனம் எண்ணும் எண்ணங்கள் சக்தி பெற்றதாய் இருக்கும். நமது மன நிலையும் நமது மூளையின் இயக்கமும், நம் உடலின் ஆரோக்கியமும் நம் எண்ணங்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. மனதில் ஏற்படும் நிம்மதியின்மை நாம் கொண்டுள்ள எண்ணங்களினால்தான் ஏற்படுகின்றது. உடலில் ஏற்படும் பெரும்பான்மையான வலிகளும், சக்தியின்மையும், நோய்களும் psychosomatic disordersதான் என்று கூறும் மருத்துவ உலகம் ஆராய்ந்து பார்த்து இவையனைத்தும் மன எண்ணங்களால்தான் ஏற்படுகின்றன என்று அறுதியிட்டுக் கூறுகிறது. எனவே எண்ணங்களை சீர் செய்தால், மீண்டும் நமது மனம் அழுக்கு நீங்கி சக்தி வாய்ந்த எண்ணங்களின் ஊற்றாக மாறும்.

அப்படி மனத்தை மாற்றிவிட்ட மனிதன்தான் உலகில் பல புதுமைகளை, பல கண்டுபிடிப்புக்களை செய்கிறான்; தன் எண்ணத்தின் சக்தியால் ஒரு தலைவனாக உருவாகிறான். பல துறைகளிலும் சாதனைகள் புரிகிறான். தன் எண்ணத்தின் சக்தியால் பிரார்த்தனை மூலம் தன்னிலும் உயர்ந்த இறைசக்தியை வேண்டி, தன்னிடம் இல்லாத சக்தியையும் பெற்று, தன் சக்திக்கு மேல் உள்ள காரியங்களையும் சாதிக்கிறான். தன் எண்ணத்தின் சக்தியினால் தன் வாழ்க்கையில் வேண்டியவற்றைப் பெறுகிறான்; பிறருக்கு ஏற்பட்ட துக்கத்தையும், கஷ்டத்தையும், இல்லாமையையும், தன் பேச்சாலும் செயலாலும், பிறர் நோயை தன் இச்சையாலும் பிரார்த்தனையாலும் சரிசெய்கிறான்.

இயற்கையைப்  பற்றிப் பேசும்போது சில விஞ்ஞானிகள் ‘Universe is a self thinking entity and all the matter, materials, living beings are its parts’ என்றும் “ Earth is ‘Gaia’ , our mother’ , என்றும், ‘Quantum physics’ – என்ற துறையில் ‘non-local mind’ என்பதைப் பற்றி கூறப்பட்டுள்ள சோதனைகள் எல்லாம் இறுதியில் மனித மனம் என்பது தன்னை, தன் வாழ்க்கையை மட்டுமல்லாமல், பிறரை, பிறர் வாழ்க்கையை, சமுதாய நிகழ்வுகளை, இயற்கையை, எல்லா வகையிலும் பாதிப்பதை உணர்த்துவதாக பதிவுசெய்துள்ளனர். எனவே நம் மனத்தின் சக்தியினால், நம் எண்ணங்களால் உலகையே பாதித்துவருகிறோம்.  அப்படியிருக்கும்போது நம் எண்ணங்கள் நம் வாழ்க்கையிலும் நம் உடலிலும் செலுத்தும் ஆதிக்கம் எத்தனை வலிமையானது என்பதை உணர்ந்து எண்ணங்களை சீர்செய்து கொள்ளவேண்டும்.

என் இளம்பிராயத்தில், என் வீட்டிற்கு வரும் என் தந்தையின் நண்பர்கள் எல்லா மதத்தினரும் ஆவர். எனக்குத் தெரிந்து இரு கிறிஸ்தவர்களும், இரு முகம்மதியர்களும், மூன்று இந்துக்களும் அவருக்கு மிக நட்பாக இருந்தனர். அவர்களில் ஒருவரோ அல்லது இருவரோ அல்லது மூவரோ வந்து எங்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து நீண்ட நேரம் என் தந்தையுடன் உரையாடும் போது பேசப்படும் தர்க்கப்பொருள் பெரும்பாலான நேரங்களில், பிறர் மீது அன்பு வைத்து நாம் செய்யக்கூடியவை பற்றியும், எந்தவொரு மதத்துக்குள்ளும் பிரத்தியேகமென்று அடக்கிவைக்கப்பட முடியாத இறைசக்தியையும் குறித்துத்தான்.

மற்ற மத நண்பர்கள் வந்துசென்றபின், எனக்கு பதிலளிக்கும் வகையில் எல்லா மதங்களுமே இறைவனைச் சென்றடையும் வழிகளே என்றும், பிறந்த மதத்தின் வழி நடப்பது நமது கடமை என்றும் என் பெற்றோர் உணர்த்தியிருக்கின்றனர். அதன்படியே வாழ்ந்தும் வருகிறேன். மேலும் மதத்தின்பால் நம்பிக்கை இல்லாது ஆனால் அசைக்கமுடியாத தன்னம்பிக்கை கொண்டு, மிக்க பண்புடனும் அன்புடன் பிறரை நேசிப்பவர்களும் மதிக்கப்பட வேண்டியவர்களே என்றும், அந்தத்தன்னம்பிக்கையே (அவர்கள் உணரமறுத்தாலும்) அவர்களிடமும் இறைவன் இருப்பதற்கு அத்தாட்சி என்றும் என் தந்தையார் போதித்திருக்கிறார். தன்னம்பிக்கை என்பதே நமக்கு முதல் கடவுள் என்றும், நம் மதத்தின் கடவுள் அடுத்தபடிதான் என்றும், தன்னம்பிக்கையின்றி, நம்பிக்கையின்றி எந்தப்பிரார்த்தனையும் நிறைவேறாது என்றும், வெறும் பிரார்த்தனை மட்டும் காரியங்களைச் சாதிக்கப் போதாது என்றும், தன்னம்பிக்கையுடன் செய்யும் முயற்சிதான் வெற்றிகொடுக்கும் என்றும், நாம் மனம் தளரும்போது, அச்சமுறும்போது, தன்னம்பிக்கை பலமிழக்கும்போது நம்மைவிட மிக மிக மிக உயர்ந்த எல்லாம் வல்ல சக்தியான அந்த இறைவனை வேண்டினால், நமக்குத் தேவையான நம்சக்திக்கும் மீறிய சாதனைகளைச் செய்யலாம், பிற மதத்தைச் சேர்ந்தவர்களையோ  அல்லது மத நம்பிக்கை அற்றவர்களையோ அந்தக்காரணத்துக்காக வெறுப்பதோ அல்லது தகுந்த மரியாதை அளிக்கத் தவறுவதோ, அன்பில்லாமல் அவர்களுடன்  பேசுவதோ மிகத்தவறு என்றும் கூறக்கேட்டிருக்கிறேன்.

வெற்றிக்கு தன்னம்பிக்கையை விட வேறு எதுவும் அந்த அளவிற்கு இன்றியமையாததில்லை.

எது இல்லாவிடினும், தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி இருப்பின் எதையும் அடைந்துவிடலாம்.

Advertisements

2 thoughts on “இலக்கும் தன்னம்பிக்கையும்

 1. //தன்னம்பிக்கை என்பதே நமக்கு முதல் கடவுள் என்றும், நம் மதத்தின் கடவுள் அடுத்தபடிதான் என்றும், தன்னம்பிக்கையின்றி, நம்பிக்கையின்றி எந்தப்பிரார்த்தனையும் நிறைவேறாது என்றும், வெறும் பிரார்த்தனை மட்டும் காரியங்களைச் சாதிக்கப் போதாது என்றும், தன்னம்பிக்கையுடன் செய்யும் முயற்சிதான் வெற்றிகொடுக்கும் என்றும், நாம் மனம் தளரும்போது, அச்சமுறும்போது, தன்னம்பிக்கை பலமிழக்கும்போது நம்மைவிட மிக மிக மிக உயர்ந்த எல்லாம் வல்ல சக்தியான அந்த இறைவனை வேண்டினால், நமக்குத் தேவையான நம்சக்திக்கும் மீறிய சாதனைகளைச் செய்யலாம், பிற மதத்தைச் சேர்ந்தவர்களையோ அல்லது மத நம்பிக்கை அற்றவர்களையோ அந்தக்காரணத்துக்காக வெறுப்பதோ அல்லது தகுந்த மரியாதை அளிக்கத் தவறுவதோ, அன்பில்லாமல் அவர்களுடன் பேசுவதோ மிகத்தவறு என்றும் கூறக்கேட்டிருக்கிறேன்.// – ஒரே வாக்கியம்… இதைவிடத் தங்கள் தன்னம்பிக்கைக்குச் சான்றும் வேண்டுமோ?

  Like

  1. வேகமாக ஓடும் எண்ணங்கள் அவைகள் மறப்பதற்கு முன் தட்டச்சு கற்காத நான் எழுத்தில் பிடிப்பதற்குள் படும்பாடு – இதன் விளைவே இத்தனை நீளமான வாக்கியம். தவறுதான். மன்னிக்கவும் ஐயா.

   nytanaya

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.