அன்பைத் தேடியவர்

அன்புக்காக ஏங்கிய ஒரு முதியவரைப் பற்றி, ஒரு பார்வை, Dr William Collinge எழுதிய Subtle Energy எனும் ஆங்கில நூலிலிருந்து:

அன்பைத் தேடியவர்:

“மேகிக்கு 81 வயது. அவர் முதியமனிதர்கள் மட்டும் வாழும் முதியோர் பகுதியில் வசிக்கிறார். அவரால் இன்னும் தன் உணவைத் தானே சமைத்துக் கொள்ளவும், நடமாடவும் முடிகிறது. அண்மையில் நடந்த மருத்துவப் பரிசோதனையில், அவரது இதயத்தைப் பரிசோதித்த மருத்துவர் ஆச்சரியப்பட வேண்டியதாயிற்று. இதுவரை அந்த முதியவரை பத்துமுறை அவர் பரிசோதனை செய்துள்ளார். அவரின் இதயம் பலவீனமாகவும், இதயத்துடிப்பு சீரான நிலையில்லாமல் துடித்ததையும் அவர் அறிவார். ஏதோ ஒரு பயங்கரம் அப்பெண்மணியின் வாழ்வில் நிகழத்தான் போகிறது என்று மருத்துவர் நினைத்திருந்தார்.

அம்முதியவரை மருத்துவர் விசாரிக்கையில் அவர் “என் இதய நிலைமை நன்றாக ஆகிவிட்டதாகத் தாங்கள் சொல்கிறீர்கள். ஆனாலும் அது எப்படி சாத்தியப்பட்டது என்று பலமுறை நீங்கள்கேட்பது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.  நான் வாழ்ந்துவரும் முறையை எவ்விதத்திலும் மாற்றிக்கொள்ளவில்லை. என் வாழ்வில் ஏதேனும் புதிது என்றால் அது என் பெண் சில நாள் என்னுடன் இருப்பதற்காக விட்டுச் சென்றிருக்கும் நாய்தான்.”

“என் பெண்ணும் அவள் கணவரும், வேறு மானிலத்திற்குத் தொழில் நிமித்தம் இரண்டு மாதத்துக்குச் சென்றுள்ளனர். எனவே நாயை என்னுடன் விட்டிருக்கின்றனர். வேறு எந்த மாற்றமும் இல்லை. ஆமாம், இன்னொன்று சொல்லவேண்டும், அனேகமாக முழு நாளும் நான் அந்த நாயுடன்தான் இருக்கிறேன். அது என்னிடம் மிகவும் பழகிவிட்டது” என்றார்.

தனியே வசிக்கும் முதியவருக்கு செல்லப்பிராணிகள் வளர்ப்பது நன்மையே செய்யும் என்பது அறிவியல் உண்மை.   அதற்கு மன நல மருத்துவர் தரும் விளக்கம்: மனம் சம்பந்தமான ஒரு நட்புணர்வு பெருகுவதால், மனது திடமாகி, உயிர்வாழ்வதற்கு ஒரு விருப்பமும் ஊக்கமும் ஏற்படுகிறது என்பது. இது உண்மையே, இருந்தும் இன்னமும் ஒத்துக் கொள்ளக் கூடியதான ஒரு விளக்கம் தேவைப்படுகிறது.

கலிஃபோர்னியாவில் உள்ள Institute of HeartMath ஆராய்ச்சியாளர்களின் நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு உணர்ந்த உண்மை இது: “அன்பெனும் உணர்ச்சியும் கனிவான பழக்கமும் இதயத்தின் சக்தி (energy)  நிலையை அதிகப் படுத்துகின்றன. உடலில் உள்ள எல்லாச் சக்திமையங்களையும் விட மிக அதிக சக்திவாய்ந்தது இதயம்தான். நேசமும் பாசமும், கனிவும் வெளிப்படுத்தப் படும்போது, இதுவரை சீராக இல்லாத இதயத்துடிப்பு சீரானதாகவும், சரியானதாகவும் மாறுகிறது. இதன் விளைவாக இதயத்தின் மின்காந்தப் புலம் பலமடைகிறது. அவ்வாறு பலமடைந்த இதயம் விவரிக்க இயலாத மாற்றங்களை உடலிலும், உள்ளத்திலும், உயிரிலும் செய்கிறது.”

உண்மையில் அன்பு என்பது ஒரு மாயசக்தி பெற்ற உணர்ச்சி. முழு உடலிலும் இது மிகச்சக்திவாய்ந்த நல்ல மாற்றங்களைக் கொண்டுவருகிறது. நம் உடலில் மட்டுமல்ல. மற்ற மனிதர்கள் மீதும்தான். அந்த நாய் ஒன்றும் மேகியின் இதயத்தைச் சரிசெய்யவில்லை. மேகிதான் இத்தகைய உணர்வுகளை வெளிக்கொணர்ந்து, தம் இதயத்தைத் தாமே குணப் படுத்தியிருக்கிறார்.

================

இந்த அம்மையார் இந்த நேரத்தில் கூட நாய்க்குத்தான் தன் அன்பை தந்துள்ளார். ஆஹா, தாயுணர்வுதான் எத்தகையது ? ஆனால் அவர் அன்பைப் பெற பிள்ளைகள் அருகாமையில் இல்லாத நிலையில் நாயிடம் செலுத்தினார்.

எனவே நம் வீட்டுப் பெரியவர்கள் நலமாக வாழ வேண்டுமென்று நாம் கருதினால், அவர்களை நம்முடனேயே வைத்துக் கொண்டு வாழத்தான் வேண்டும். நமக்கும் அன்பு கிடைத்த மாதிரியிருக்கும். அவருக்கும் நல்ல ஆரோக்கியமும் கிடைக்கும். அவர்தம் ஆயுளும் கூடும்.

அன்பினால்தான் இந்த உலகம் செய்யப்படுள்ளது. இது ஒரு விஞ்ஞான உண்மை (இதைப்பற்றி வேறு பதிவில் சொல்கிறேன்.). நம் குடும்ப வாழ்வும் அன்பினால்தான் செய்யப்பட்டுள்ளது. அன்பு காட்டுவதால் நம் உடல்நலமும் முன்னேறும். எல்லையில்லாத மகிழ்ச்சியும் ஏற்படும் !!!.

———————————————நன்றியுடன்,——————-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.