அறிவுள்ள எந்திரனும் அறிவில்லா எழினியும்

அறிவுள்ள எந்திரனும் அறிவில்லா எழினியும்

*********************************************************

அறிவுள்ள எழினியைக் காதலிப்பவர் எண்ணிக்கை பல கோடிகள்.

(எழினி என்று எந்தப் பெண்ணுக்காவது யாரேனும் பெயர் வைத்திருப்பின், அப்பெண்ணும் அவரைச் சார்ந்தவர்களும் மன்னிப்பார்களாக !)

இன்று உலகில் பயன்படுத்தப் படும் எழினிகளில் (செல்பேசி, அலைபேசி, கைப்பேசி, நடைபேசி) அறிவுள்ளவை (smart)  அறிவற்றவை (non-smart) என்று இருவகை உண்டு.

கல்லூரியில் சேர்ந்து படிக்கும் பிள்ளைகள், படிக்காத பெரியவர்களைப் பார்த்து அறிவற்றவர்கள் என்று கூறிவருவது உலகறிந்ததே.

அறிவியல் வளர்ச்சியால் உருவாகிய தொடுத்திரை தொழில் நுட்ப வளர்ச்சியால் தயாரிக்கப்படுபவை வந்தவுடன் பழைய தலைமுறை எழினிகள் அறிவற்றவைகள் என்று ஒதுக்கப் படுகின்றன.

வண்ணமயத்தில் சின்னத்திரைப்பெட்டிகள் அதிகப் புழக்கத்தில் வந்தவுடன் கருப்பு-வெள்ளை சின்னத்திரைப் பெட்டிகள்   அறிவிழந்து அழிந்து விட்டன.

கணினியின் நுட்பத்தைக் கைபேசியில் கொண்டுவந்தது இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய அறிவியல் சாதனை.

கணினியின் உருவம் வீட்டில் உள்ள ஒரு அறையளவுக்கு ஆரம்பத்தில் இருந்தது; அறிவியல் வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கும் வேகத்தில் கணினியின் உருவம் அளவில் சுருங்கிக் கொண்டிருக்கிறது.

மேசைக் கணினியாகி, மடிக்கணினியாகி, இப்போது கைக்கணினியாகி திருக்குறள் போன்று மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிதாகி விட்டது.

கைப்பேசி மென்பொருள்களிலும் விலையுள்ளவை, விலையற்றவை என்று இருவகை.   இதில் விலையற்ற மென்பொருட்களில் ஆன்ட்ராய்ட் ஒரு பேரரசனாக விளங்குகிறது.

இந்த ஆன்ட்ராய்ட் என்ற வார்த்தைக்கு என்ன பொருள் ? இது ஒரு ஆங்கில வார்த்தை ஆதலால், ஆங்கில அகராதியில்தான் பொருள் தேட வேண்டியுள்ளது.

ஆங்கில அகராதியில் என்ன பொருள் என்று பார்ப்போம்:

Android = a robot that looks like a person

Android  =  a mobile robot usually with a human form

Android  = a machine that resembles a human and does mechanical, routine tasks on command.

Android  =  a person who acts and responds in a mechanical, routine manner,usually subject to another’s will; automaton.

ரோபட் அல்லது ரோபாட் என்பது மனிதன் செய்யக்கூடிய ஒரு செயலையோ பல செயல்களையோ செய்யக்கூடிய இயந்திரம் என்று பொருள். ரோபாட்டுகள் தயாரிப்பில் தலைமை வகிப்பது ஜப்பான் நாடு ஆகும். மருத்துவத் துறை, தொழிற்சாலைகள், அணு ஆயுதத் துறை, விண்வெளித் துறை, காவல் துறை இன்னும் பல துறைகளில் பயன்படுத்தப் படுகின்றன. ஆழ்கடலில் ஆராய்ச்சி செய்ய, கண்களில் நுண்ணிய சிகிச்சை செய்ய, இயக்கத்திலுள்ள கொதிகலனில் குறைகள் செப்பனிட, எரிமலைப் பிரதேசங்களில் ஆராய்ச்சி செய்ய, விண்வெளியில் ஆராய்ச்சி செய்ய என்று அதிக அளவில் பயன்படுகின்றன. ரோபாட்டுகள் ஒரே இடத்தில் இருந்து வேலைசெய்பவை, ஒரு இயந்திரத்தின் ஒரு பகுதியாக இருந்து வேலைசெய்பவை, நடமாடும் சக்தியுள்ள ரோபாட்டுகள் என்று பலவகைப் படும்.

ரோபாட் என்பது மனித வடிவில்தான் இருந்தாக வேண்டும் என்றில்லை. மனிதவடிவில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது ரோபாட் என்றே அழைக்கப்படும். ரோபாட்டுகள் இன்று உலக அளவில் பல துறைகளில் பயன்படுகின்றன.

மனிதவடிவில் இருந்தால் அந்த வகை ரோபாட்டுக்கு ஹியூமனாய்ட் (humanoid) என்று பெயர். ரஜினியின் எந்திரன் படம் பார்த்திருப்பீர்கள். அதில் நகல் ரஜினியான சிட்டி என்பதும் (என்பவனும் ?!?) அதைப் போன்ற மற்ற ‘சிட்டி’களும் இயந்திர மனிதன் எனப்படும் (humanoid). இருப்பினும் அதுவும் ஒரு ரோபாட் ஆனதால் படத்துக்கு மனிதனைப் போன்ற இயந்திரம் என்பதால், ‘எந்திரன்’ என்றே அழைக்கப்பட்டது. அப்படத்தில் நம் முழங்கால் அளவுக்கு கண்ணாடி முகத்துடன் நடந்து வந்து காபி தரும் இயந்திரம் பார்த்திருப்பீர்கள். அந்த வகை ரோபாட்டுக்கு ட்ராய்ட் (droid)  அதாவது ஆன்ட்ராய்ட் என்பதன் குறுக்கம். இவ்வகை ரோபாட்டுகள் திரையில் ஆங்கிலப்படங்களில் நிறைய வருகின்றன. மிகப் பிரபலமான தொடர் ஆங்கிலப்படங்களில் பங்குபெற்ற ஒரு எந்திரம் R2D2 என்று பெயர் கொண்ட ட்ராய்ட்.

எழுத்தாளர் சுஜாதாவின் ‘ஜீனோ’ கதை படித்திருப்பீர்கள். ஜீனோ என்பது நாய் வடிவில் உள்ள அறிவுள்ள செயற்கை ஜீவன். அதைப் போல மனித வடிவில் சிறிய பொம்மை ஆனால் செயலாற்றக் கூடிய ஒரு தயாரிப்பு என நாம் கொள்ளலாம்.
புதுத் தமிழ் சொல் உருவாக்குவோம்
——————————–
ரொபாட்டுகளுக்கு எந்திரன் என்று பெயர்.

காபி கொடுத்த எந்திரத்துக்கு ட்ராய்ட் என்று பெயர். அது அளவில் சிறியதானது.

அந்தப் பொருளை வைத்து

Android = “எந்திரக்குறுவன்” அல்லது “எந்திரக்குறளன்”

Non- smart phone = “ தரவெழினி”

Smart phone = “ திறனெழினி”

 

(c)

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.